வாசல் | திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... அடுத்த | மகளை 3 குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு ஆயுள் தண்டன... அடுத்த | எது பகுத்தறிவு? அடுத்த | சிந்திப்பவர்களுக்கான வேதம். அடுத்த | பாலூட்டல்/ பால் கொடுத்தல் வேறுபாடு அடுத்த | 'காஞ்சி பிலிம்ஸ்' க்கு ஒரு விளக்கம் அடுத்த | வஹி - வேத வெளிப்பாடு பற்றிய கண்ணோட்டம் அடுத்த | இஸ்லாம் ஒரு மதமல்ல; மார்க்கம்! அடுத்த | பெண்ணுரிமை - ஓர் இஸ்லாமியப் பார்வை-2 அடுத்த | பெண்ணுரிமை- ஓர் இஸ்லாமியப் பார்வை-1 அடுத்த

குற்றவாளிக்குப் பரிசு!

இம்ரானா விஷயத்தில் நாளொரு செய்திகள் வந்த வண்ணமுள்ளன. கடைசியாக கிடைத்த தகவல் படி இம்ரானா கற்பழிக்கப்படவே இல்லையாம்! சாதாரண சொத்து தகறாரை திசை திருப்ப கணவனும் மணைவியும் ஆடிய நாடகம்! இது நாடகமா அல்லது உண்மையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இப்படி ஒரு நிகழ்வு உண்மையில் நடந்தால் அதற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது?

இப்பிரச்சினை இந்திய அளவில் இப்பிரச்சினை முஸ்லிம்களிடம் பலத்த சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுதான் சமயம் என அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய சட்டங்கள் மாற்றப் பட வேண்டும் என்ற பழைய பல்லவியை மீண்டும் பாடத்தொடங்கி விட்டார்கள். இன்னும் சில விளங்கிய முஸ்லிம்கள் கூட, இஸ்லாத்தில் பல பிரிவுகள் உள்ளன. இவற்றை முதலில் ஒழித்தால்தான் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என நினைக்கிறார்கள்.

அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் என்றும், இஸ்லாத்தில் ஜாதி பாகுபாடு இல்லை. அனைவரும் சமம் என்று சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கம் இது போன்ற உட்பிரிவுகள் கூட இருக்கின்றனவா? எனில், இஸ்லாமும் ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட மார்க்கம் இல்லையா என்ற சந்தேகங்கள் முஸ்லிம்களிடம் மட்டுமல்ல, இஸ்லாத்தை அறிய விரும்புபவர்களுக்கு கூட எழலாம். (இதுவல்லாமல் சிலர் ஆரோக்கியமாக விஷம் கக்கி வருகிறார்கள் என்பது வேரு விசயம்)

அது என்ன? ஷாஃபி, ஹனபீ, மாலிக்கீ, ஹம்ப்லீ அராபிய ஜாதிப் பெயர்களா? முஸ்லிகளில் இஸ்லாத்தை பின் பற்றுபவர்களில் உள்ள அளவீடா? இல்லை! இவையாவும் இஸ்லாத்தில் உள்ள சட்ட வழிகாட்டிகளே! குர்ஆனிலும், ஹதீஸிலும் சொல்லப் படாத இப்பிரிவுகளை எப்படி ஏற்றுக் கொள்வது? இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது? என்ற ஐயங்கள் நியாயமானவையே.

முதலில் குர்ஆன் என்பது, இறைவனால் வஹீ மூலம் முஹம்மது நபிக்கும் அவரைப் பின்பற்றும் மக்களுக்கும் அருளப்பட்டது என்பதிலும், ஹதீஸ் என்பவை முஹம்மது நபி, குர்ஆனில் சொல்லப் பட்டவை அல்லாமல், தனது அனுபங்களாலும், ஏனைய நபித்தோழர்கள் செய்தவற்றை தடுக்காதவை அல்லது அங்கீகரித்தவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

நபிகாளார் உயிரோடு இருக்கும் வரையில் இஸ்லாம் பற்றிய எந்த முடிவுகளுக்கும் தெளிவு பெறுவதில் சிக்கலில்லை. நபிகளாரின் வாழ்க்கைக்குப் பிறகு அவரின் மிக அன்புக்குறிய தோழர்கள் இஸ்லாத்தை வழி நடத்தி சென்றார்கள். இவர்கள் கலீபாக்கள் (ஜனாதிபதிகள்) என அறியப் படுகின்றனர். இவர்கள் ஆட்சியிலும் எந்த குழப்பமும் இல்லை.

இஸ்லாம் உலகலாவிய மார்க்கம் என அறியப் பட்டதும். இஸ்லாத்தை உலகின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு கலீபாக்களுக்கு பிறகு வந்தவர்களுக்கு ஏற்பட்டது. இவர்கள் உலகின் அந்தந்த பகுதிகளுக்கு செல்லும் போது, பிராந்திய மொழி, பழக்க வழக்கம் இவற்றிற்கு ஏற்ப குர்ஆன் மற்றும் ஹதீஸை எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. இதில் ஏற்பட்ட சில நடைமுறை (மொழி பெயர்ப்பு, பழக்க வழக்கம் போன்ற) சிக்கல்களால் சில குழப்பங்கள் ஏற்பட்டன.

இவற்றின் அவசியத்தை உணர்ந்த பிற்கால இஸ்லாமிய அறிஞர்களில் புகழ் பெற்ற இமாம்கள் என அறியப் பட்டவர்களில் ஷாஃபி, அபூஹனீபா, மாலிக், ஹம்பல் ஆகியோர், இச்லாமிய சட்டங்களை அந்தந்த பிராந்தியம், வாழ்க்கை முறை ஆகியவர்றுக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கம், எதிர்கால சிக்கல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இஸ்லாமிய சட்டங்களை குர்ஆன், ஹதீஸ் இவற்றிலிருந்த பிசகாமல் நெறிப்படுத்தினார்கள். இதுவே மேற்கண்ட சட்டப் பிரிவுகளன்றி, ஜாதி முறையோ அல்லது தர வகையோ அல்ல!

இத்தகைய பிரிவுகள் தேவையில்லை. குர்ஆனும் ஹதீஸும் நேரடி பிராந்திய மொழி பெயர்ப்புகளில் உள்ளபோது, அனைத்து விளக்கங்களையும் இவற்றிலிருந்தே பெற முடியும் என வாதிப்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களின் வாதத்திற்கான காரணம், மேற்கண்ட சட்ட முறைகளை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்தவர்கள், குர்ஆன், ஹதீஸில் இல்லாத தங்கள் சொந்தக் கருத்துக்களையும் முன்னிலைப் படுத்தி விட்டார்கள் என்பதே. (இது பற்றிய விளக்கங்களை தனி பதிவாக பார்க்கலாம் என நினைக்கிறேன்.) இன்னும் சிலர் குர்ஆனையும் ஹதீஸையும் விட்டு விட்டு அந்தந்த பிராந்திய மொழி பெயர்ப்புகளையே பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் மூடப் பழக்கவழக்கங்களை பின் பற்றி வந்து, பிறகு மதம் மாறியவர்கள், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும், அத்தகைய மொழி பெயர்ப்புகளையும் சேர்த்து குழப்பிக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படையே விட்டு விலகி பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களாக இருந்து வந்தார்கள். முஹலாயர்கள் வந்த பிறகு அத்தகைய குழப்பங்கங்கள் சட்டங்களாக இயற்றப் பட்டதும் இன்னும் குழப்பங்கள் ஏற்பட்டன.

சமீபத்திய தலைப்புச் செய்தியான இம்ரான் விஷயத்தில் தமிழக முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்? முஹம்மது கான் பாகவி என்ற அறிஞர் தன் கருத்தை தினமனியில் பதித்திருக்கிறார்கள். அதனை தமிழ்மண வாச்கர்களுக்காக மறு பதிவு செய்துள்ளேன்.

இம்ரானா விவகாரத்தில் நடந்தது என்ன? எந்த அடிப்படையில் கணவனுடன் இம்ரானா வாழக் கூடாது என மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) அளிக்கப்பட்டது என்பது புரியாமல் முஸ்லிம் சமுதாயத்தினர் குழம்பிப்போய் உள்ளனர்.

இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் அரபியரிடையே ஒரு பழக்கம் இருந்து வந்தது. தந்தை இறந்த பிறகு அவருடைய மனைவியை, அவருடைய மற்றொரு மனைவிக்குப் பிறந்த மகன் மணமுடித்துக் கொள்வான். அதாவது சிற்றன்னையை மணமுடித்துக் கொள்கின்ற பழக்கம் இருந்தது.

இந்நிலையில், இஸ்லாம் வந்த பிறகு மதீனாவில் ஒரு நிகழ்ச்சி. மதீனாவாசிகளில் ஒருவரான அபூகைஸ் என்பவர் இறந்த பின் அவருடைய மகன் கைஸ் தம் தந்தையின் மனைவியை (சிற்றன்னையை) மணந்து கொள்ள விரும்பிப் பெண் கேட்டார்.

ஆனால், அவருடைய சிற்றன்னையோ ""உன்னை நான் என் மகனாகவே கருதுகிறேன். உன் சமூகத்தில் நீ நல்லவன். இருந்தாலும் இது தொடர்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டு முடிவு சொல்கிறேன்'' என்று கூறிவிட்டார். பின்னர் நபியிடம் வந்த அபூகைஸின் மனைவி விவரம் கூறி ஆலோசனை கேட்டார். அப்போதுதான்,

"உங்கள் தந்தையர் மணந்துகொண்ட பெண்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள். இது வெட்கக் கேடானதும் வெறுக்கத் தக்கதும் ஆகும். இது ஒரு தவறான வழியும் ஆகும்'' (4:22)

எனும் திருக்குர் ஆன் வசனம் அருளப்பெற்றது.

இதன் மூலம், இஸ்லாத்திற்கு முன்பு இருந்து வந்த அந்த நடைமுறைக்குக் குர்ஆன் தடை விதித்தது. அதாவது ஒருவர் தம்முடைய சிற்றன்னையை மணக்கக் கூடாது எனும் சட்டம் வந்தது. இதுவே இஸ்லாமிய அறிஞர்களின் ஒருமித்த கருத்தாகும்.

இதில் இப்போது இம்ரானா விவகாரம் எப்படி சம்பந்தப்படுகிறது? ஏற்கெனவே திருமணமாகி, ஐந்து குழந்தைகளுக்குத் தாயாகிவிட்ட இம்ரானாவுடன் அவருடைய மாமனாரே - கணவனின் தந்தையே - தகாத உறவு கொண்டு விடுகிறார். தந்தை உறவு கொண்டுவிட்ட - தகாத உறவானாலும் சரி - இம்ரானாவை மகன் - இம்ரானாவின் கணவன் - உறவு கொள்ளவோ, இம்ரானாவுடன் இனி சேர்ந்து வாழவோ முடியாது என்பதும் மேற்சொன்ன குர்ஆன் வசனத்தின் கருத்தில் அடங்கும் என்பது ஹனஃபி சட்டப் பிரிவினரின் நிலையாகும்.

இன்று உலக முஸ்லிம்களிடையே பிரபலமான நான்கு சட்டப் பிரிவுகள் அமலில் உள்ளன. அவற்றில் ஒன்றான ஹனஃபி சட்டப் பிரிவைப் பின்பற்றுபவர்களே இந்தியாவில் அதிகம். உ.பி. மாநில முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்தப் பிரிவையே பின்பற்றி வருகிறார்கள்.

எனவேதான், கிராமப் பஞ்சாயத்தாரும் தாருல் உலூம் தேவ்பந்த் அமைப்பினரும் இத்தகைய தீர்ப்பை வழங்கி சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். ஆனால், மற்ற மூன்று சட்டப் பிரிவுகளான ஷாஃபி, மாலிகி, ஹன்பலி பிரிவினர் இம்ரானா தொடர்ந்து கணவனுடன் சேர்ந்து வாழலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கூறுகின்றனர்.

மேற்சொன்ன குர்ஆன் வசனம், தந்தை சட்டப்படி திருமணம் செய்து கொண்ட பெண்ணைத்தான் மகன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று தடை விதிக்கிறது என அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

அதிலும் இம்ரானாவைப் பொறுத்தவரை அவர் ஏற்கெனவே திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருபவர். அவரை முறைப்படி திருமணம் செய்யக் கணவரின் தந்தை விரும்பினால்கூட சட்டத்தில் அதற்கு இடமில்லை.

"உங்கள் புதல்வர்களின் மனைவியரும் உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளனர்'' (4:23) என்பதும் திருக்குர்ஆனின் கட்டளையாகும். அப்படியிருக்க, மருமகளுடன் தகாத உறவு கொண்ட காரணத்தால் மருமகளுக்கும் மகனுக்கும் இடையேயான உறவு முறிந்துவிடும் என்று எப்படிக் கூற முடியும்?

"இனி மாமனாருக்கே இம்ரானா மனைவியாக இருப்பார்; கணவனை மகனாக அவர் பாவிக்க வேண்டும்'' என்று கிராமப் பஞ்சாயத்தார் அறிவித்ததுதான் பெரிய கொடுமை. மார்க்கத்தின் பெயரால் இப்படியெல்லாம் தீர்ப்புக்கூற யார் இவர்களுக்கு அதிகாரம் வழங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஹனஃபி சட்டப் பிரிவு இப்படி இருந்தாலும், தேவையையும் அவசியத்தையும் கருதி மற்ற சட்டப் பிரிவுகளைப் பின்பற்ற ஷரீஅத்தில் அனுமதி இருக்கும்போது, ஏன் அதைச் செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இப்படித்தான் ஹனஃபி சட்டப் பிரிவில் ஒரு சட்டம் இருக்கிறது. கணவன் காணாமல் போய்விட்டான். அவனைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. இப்போது 90 ஆண்டு காலம் கணவனை எதிர்பார்த்த பிறகே மனைவி மறுமணம் செய்து கொள்ள வேண்டும்! இந்தச் சட்டத்தை ஹனஃபி பிரிவினரே பின்பற்றுவதில்லை. மாலிகீ சட்டப் பிரிவையே இந்த விஷயத்தில் அவர்கள் பின்பற்றி, நான்கு ஆண்டுகள் எதிர்பார்த்தால் போதும்; கணவன் வராவிட்டால் மறுமணம் செய்யலாம் என்றே தீர்ப்பு அளிக்கின்றனர். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கற்பழித்தவனுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும்; கற்பழிக்கப்பட்ட பெண் நிரபராதி என்பதே ஷரீஅத் சட்டம் (புகாரீ).

ற்பழித்தவனுக்குப் பரிசளிப்பதைப் போன்று கற்பழிக்கப்பட்டவள் அவனோடு இல்லறம் நடத்தலாம் என்பதும், கணவனுடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அமைந்துள்ளது.

பொதுவாக மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) அளிப்போர் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தாம் அளிக்கும் தீர்ப்பு சட்டப்படி அமைந்துள்ளதா, தீர்ப்பின் சாதகம் மற்றும் பாதகம் என்ன, இந்தத் தீர்ப்பைவிடச் சிறந்த தீர்ப்புக்கு சட்டத்தில் இடமுண்டா, வழக்கோடு சம்பந்தப்பட்டவர்கள் வாழும் இடம், காலம், சூழ்நிலை ஆகியவற்றுக்குத் தீர்ப்பு பொருந்தாதபோது, சட்டத்தில் மாற்று வழி என்ன என்பதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து, ஒன்றுக்குப் பல முறை ஆய்வு செய்த பின்னரே மார்க்கத் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

இது மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் (முஃப்தி) கடைப்பிடிக்க வேண்டிய தார்மிக நெறிமுறை ஆகும் என்பதும் அதே சட்டப் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள கட்டளை ஆகும்.

நன்றி: தினமணி (ஜூலை-6,2005)

அ. முஹம்மது கான் பாகவி

தமிழ் பேசும் முஸ்லிம்களிடையே நன்கு அறிமுகமான மார்க்க அறிஞர் முஹம்மது கான் பாகவி அவர்களின் இந்தக் கட்டுரை, தெளிவில்லாமல் இருந்த பல விஷயங்களை விளக்குவதாக இருக்கிறது. இதை இங்கே பதிந்ததற்கு நன்றி!

- சலாஹுத்தீன்

Dear Nalladiyar,

Sorry for writing this in English. I am typing this from a PC not enabled with Tamil Editor. At first, many thanks for producing such a very good article from Dinamani. See this could be an eye opener to many people, but some who have already made up their mind with a single point agenda of attacking Islam at every available opportunity will either keep quiet or try to divert the topic with some senseless arguments.

''குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்'' (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும். திருக்குர்ஆன், 36:59)

திருக்குர்ஆன், நபிமொழிகளுக்கெதிரான - மத்ஹபின் பிக்ஹு சட்டங்களை இன்னும் விடாப்பிடியாக அலசி, இம்ரானா விஷயத்தில் அறிவுக்குப் பொருந்தாதத் தீர்ப்பை வழங்கிய அறிஞர்கள்!? மறுமையில் ''மத்ஹபுவாதிகளே இன்றையதினம் பிரிந்து நில்லுங்கள்'' என்று இறைவன் சொல்லமாட்டான் என்பதை மேற்கண்ட 36:59வது வசனத்தைப் படித்துத் தெளிவு பெறுவார்களாக.

உ.பி மாநிலம் முஸாபர் நகரில் கற்பழிக்கப்பட்ட இம்ரானாவின் நிலைப்பாடு என்ன? என்பதில் குர்ஆன், சுன்னாவின் தீர்ப்பு உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்க - இஸ்லாத்தின் உரைகல்லை ஊதாசீனப்படுத்திவிட்டு பிக்ஹு சட்டங்களை உரைகல்லாக்கி தீர்ப்பு வழங்கியவர்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் ''மக்கள் அறிவீனர்களை தலைவராக்கிக் கொள்வார்கள்'' என்று முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்க.

அன்புடன்,
அபூ முஹை

Post a Comment

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker