வாசல் | இஸ்லாமிய உலகின் மீதான சிந்தனைத் தாக்குதல்கள் அடுத்த | ஆரோக்கியம் என்பவன் செய்யும் படுகொலைகள் அடுத்த | தமிழ்மணமும் தமிழ் முஸ்லிம் பதிவர்களும் அடுத்த | குற்றவாளிக்குப் பரிசு! அடுத்த | திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... அடுத்த | மகளை 3 குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு ஆயுள் தண்டன... அடுத்த | எது பகுத்தறிவு? அடுத்த | சிந்திப்பவர்களுக்கான வேதம். அடுத்த | பாலூட்டல்/ பால் கொடுத்தல் வேறுபாடு அடுத்த | 'காஞ்சி பிலிம்ஸ்' க்கு ஒரு விளக்கம் அடுத்த

எண்ணங்கள்

தருமி மற்றும் அமல சிங் அவர்களின் வெவ்வேறு பதிவுகள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஆனால் இரண்டிலும் என்னை தொடர்புபடுத்தி எழுதப் பட்டிருந்தன.

தருமி அவர்கள் "யார் இவர்கள்" என்ற தலைப்பில் எழுதிய பதிவைப் பார்த்தேன். மத துவேஷங்களால் ஏற்பட்ட மனச்சோர்வில் ஆதங்கப்பட்டு எழுதி இருக்கிறார்.

ஒரு கொள்கையை/நம்பிக்கையை சரி என ஏற்பதும் தவறென மறுப்பதும் அவரவர் உரிமை. இதுதான் சரி எனச் சொல்லி வற்புறுத்த யாருக்கும் உரிமை இல்லாதது போலவே சரியல்ல எனச் சொல்வதற்கும் உரிமையில்லை.

வயதிலும் அனுபவத்தாலும் முதிர்ந்த தருமி அவர்கள்,

பாம்புகள்
தங்கள் தோல்களையே
சட்டைகளாக
உறித்துப் போடுகின்றன.
இவர்கள் ஏன்
தங்கள் சட்டைகளைக் கூட
தோல்களாகத்
தரித்துக் கொள்கிறார்கள் ?

என ஒரு தத்துவத்தை சொல்லியுள்ளார்கள். அதைப்பற்றி குறை சொல்லவோ அல்லது விமரிசிக்கவோ விரும்பவில்லை. மேலும் இஸ்லாம் சார்பாக எழுதும் என்னை கண்டிக்கிறாரா? அல்லது இஸ்லாத்தைற்கு எதிராக எழுதுபவர்களை ஆதரிக்கிறாரா எனத் தெரியவில்லை.

ஆனால், எனது பதிவுகளின் காரணத்தை அறியாமல் போகிற போக்கில் ஆரோக்கியம் போன்ற துவேஷ பதிவர்களுடன் ஒப்பிட்டு, எம்மையும் விமரிசித்துள்ளதை மறுக்கும் தார்மீகப் பொறுப்பில் இதை எழுத வேண்டியுள்ளது.

தருமி அவர்களின் மேலான கவனத்திற்கு,

நான் எனது பதிவிலோ அல்லது பிண்ணூட்டங்களிலோ இதர கொள்கைகளை துவேஷமாக எழுதியதில்லை. தமிழ்மணத்தில் பதிவதன் நோக்கம் என் மத சார்ந்த நம்பிக்கைகளை அவதூறாக எழுதுவதற்கு, விளக்கம் கொடுக்கவே என பலமுறை சொல்லியுள்ளேன்.

குறிப்பாக குர்ஆன் வெளிப்பட்ட விதம் குறித்து குர்ஆனோடு சம்பந்தப்படாத அல்லது குர்ஆனை நம்பாத நேசகுமார் அவர்களுக்கும், ஆரோக்கியம் போன்ற துவேஷ வலைஞர்களுக்கும், உங்களை போன்ற சிலரால் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட இஸ்லாத்தின் நல்ல பக்கங்களை விளக்கவே எமது பதிவுகள்.

G.Sam George ஆக இருந்து தருமியாக உருமாறியுள்ள நீங்கள் நம்பிய மதக்கொள்கையில் உடன்பாடில்லாமல், வெளியேற எத்தனையோ காரணம் இருக்கலாம். அதே காரணங்களால் பிறரும் பிற கொள்கைகளிலிருந்து வெளியேற வேண்டும் என்கிறீர்களா?

கிறிஸ்தவராக இருந்து இன்று எந்த மதமும் சரியில்லை என நம்பும் நீங்கள் கடவுள் மறுப்பு மட்டும் சரியான கொள்கை என நம்புவது முரண்பாடல்லவா? கிறிஸ்தவத்தை பிறப்பு முதல் அறிந்து வாழ்வின் முதுமைக்காலங்களில் சில கருத்துக்கள் தவறு என நம்பும் நீங்கள், அறைகுறையாக இஸ்லாத்தை அறிந்து ஒதுக்குவது பாரபட்சமல்லவா?

மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவன் சார்ந்த மதமோ கொள்கையோ காரணமாகாது எனபதே எனது நிலைப்பாடும். "Mostly we belong to a religion not by faith but by birth" இது நீங்கள் சொன்னது. நானும் இதை எனது முந்தைய பிண்ணூட்டங்களில் சொல்லியுள்ளேன். மேலும், அவரவர் நம்பிக்கை அவரவரோடு என்பதே ஒரு இஸ்லாமியனின் கடைசி நிலைப்பாடு.

"நம் தேடல்களில் விளங்கியவை மிகைக்கும் போது அவரவர் கருத்து வெல்கிறது" - இது நேசகுமார் அவர்களின் பதிவில் நான் இட்ட பிண்ணூட்டம்.

தருமி, உங்கள் பதிவோடு சம்பந்தப்பட்ட ஒரு உபரி தகவல், பாம்புகள் தங்கள் செல்லறித்த தோலை உரித்துக் கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று புத்துணர்வு பெறுதல்.

செல்லறிதந்த தோலுரித்தாலும் அதே தோலுடன்தான் வாழ்கிறதே தவிர, தோலே இல்லாமல் வாழவில்லை. இதுதான் பாம்பிற்கு கூட இயல்பபாக இருக்கிறது. ஆகவே சரியென பிறர் நம்பிய கொள்கைகளை கைவிட, நீங்கள் சொல்லும் உவமை பொருந்தவில்லை.

கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன் என்பது உங்களின் நிலைப்பாடாக இருக்கலாம். பதில் சொன்னால் ஏற்க மாட்டேன் என்பதுமா?

இன்னொரு வலைஞர் அமல சிங் அவர்கள் "அல்லா யார்? என்ற அவரி பதிவில்:

"நல்லடியார் என்பவர் தனது வலைப்பதிவில் இசுலாம் பற்றியும் அல்லா பற்றியும் கொடுக்கும் விளக்கங்கள் பார்ப்பனர்கள் இந்து மதம் பற்றியும் சமசுகிருதம் பற்றியும் கொடுக்கும் விளக்கங்கள் போல கப்சா பாதி உண்மை பாதியாக இருப்பதால், இப்பதிவை இட வேண்டியவனாக உள்ளேன்." எனத் தொடங்கி, "இசுலாமியர்கள் எத்தனை பேருக்கு, மசூதிகளின் கோபுரங்களில் பிறை வடிவம் இருக்குமே, அதன் வரலாறு தெரியும்?" என முடித்துள்ளார்.

முஹம்மது நபிகள் அல்லாஹ்வைப் பற்றி சொன்ன காலகட்டத்தில் 360 வகையான கடவுள்களை அன்றைய மக்கள் வணங்கி வந்தனர் என்பதை எனது பதிவில் சொல்லி இருக்கும் போது, அமல சிங் அவர்கள் புதிதாக என்ன சொல்ல வருகிறார் என தெளிவாகப் புரியவில்லை. மசூதிகளின் கோபுரங்களில் பிறை வடிவத்தின் வரலாறையும் அவர் சொல்லவில்லை. என் பதிவுகளில் எந்த பாதி கப்சா என்று சொல்லாமல், பொத்தாம் பொதுவாக அவர் கருத்தை சொல்லியுள்ளார்.

தங்கள் கருத்தில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, இஸ்லாத்திற்கு எதிராக எழுதுவர்களின் எண்ணங்கள் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

//தங்கள் கருத்தில் நியாயம் இருக்கிறதோ இல்லையோ, இஸ்லாத்திற்கு எதிராக எழுதுவர்களின் எண்ணங்கள் மட்டும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.//

நல்லா சொன்னீங்க. வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோன்னு எதையாவது சொல்லிட்டு, அவங்க சொன்னதையே விளக்க வேண்டி வர்றப்ப 'அய்யோ நான் அதிலெல்லாம் அத்தாரிட்டி கிடையாது'ன்னு விலகி ஓடுறதை நாம பாத்துக்கிட்டுதானே இருக்கோம்.

The one associated with the moon is his
Nephew Nannar. Son of Enlil.
Nannar, also known as "SIN" in Akkadian
had the MOON crescent as his symbol.
Later on, he became known as "Allah" and
the symbol was the same, the crescent moon which is used to this date in Islam.

Muslims have no idea that Allah was actually a pagan g-d which was worshipped in Pre-Islamic times. This is how he was called in Arabic, after being called "EL" in Hebrew Canaanite.

http://www.bible.ca/islam/islam-photos-moon-worship-archealolgy.htm

http://www.dhushara.com/book/orsin/origsin.htm

Pls, copy and paste the links as they r not visible.

அமல சிங்,

இஸ்லாம் அல்லாமல் யூத கிறிஸ்தவ வேதங்கள் படி "ஆதம்" (அலைஹி..) அவர்களே முதல் மனிதன். அவர் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை கடவுளைக் குறிக்க "அல்லாஹ்" என்ற வார்த்தையே பிரயோகிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் அல்லாஹ் என்ற வார்த்தையில் குழப்பமில்லை என்பது தெளிவாகும்.

அரபு நாடுகளில் வெளியாகும் சினிமாப் படங்களில் கடவுளைப் பற்றி வரும் காட்சிகளில், சாமி/தெய்வம்/GOD என்று வரும் இடங்களிலெல்லாம் "அல்லாஹ்" என்றே மொழி பெயர்க்கப்படுகிறது. இதனை வீடியோவில் ஓடும் Sub Title-லில் காணலாம்.

என் பதிவில் எங்கு கப்சா இருந்தது என்று நீங்கள் சொல்லவில்லை.

நான் வளர்கிறேனே மம்மி கதைத்தான்.

//கிறிஸ்தவராக இருந்து இன்று எந்த மதமும் சரியில்லை என நம்பும் நீங்கள் கடவுள் மறுப்பு மட்டும் சரியான கொள்கை என நம்புவது முரண்பாடல்லவா? கிறிஸ்தவத்தை பிறப்பு முதல் அறிந்து வாழ்வின் முதுமைக்காலங்களில் சில கருத்துக்கள் தவறு என நம்பும் நீங்கள், அறைகுறையாக இஸ்லாத்தை அறிந்து ஒதுக்குவது பாரபட்சமல்லவா?//

நல்லடியார் அவர்களே,

மிக கண்ணியமான வார்த்தைகளைக் உபயோகித்து தருமி அவர்களிடம் நியாயம் கேட்டிருக்கிறீர்கள். அவர் அதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்த முடியாது. எனினும் அவர் விளக்கமளித்தால் அவரின் நடுநிலையை நாம் சந்தேகப்படுத்த வேண்டியதில்லை. தருமியிடம் (இணைய) தருமத்தை எதிர்பார்க்கிறேன். செய்வாரா?

அய்யா அமலசிங்,

நீங்க இசுலாத்தைப் பத்தி சந்தேகம் கேக்குறத யாரும் தப்பா சொல்லலை.. என்ன சந்தேகம் வேணும்னாலும் கேளுங்க .. ஆனா யாரோ எழுதியத உண்மைன்னு நம்பி அது தான் தீர்க்கமானதுன்னு உங்க பதிவுல சொல்றது தான் சரியில்ல..
இப்போ உங்க சமீபத்திய பதிவுல பாகிஸ்தானில இந்தியாவிலிருந்து இசுலாமிய நூல்கள் இறக்குமதிக்குத் தடை அப்ப்டிங்கற செய்திய சரியா என்னன்னு முழுசா படிக்காம இந்திய முசுலிம்கள் எல்லாம் உண்மையான முசுலிம்கள் இல்லயான்னு குதிக்கிறீங்க.. அதுல என்ன எழுதியிருக்கு.. தேவ்பந்த் ஃபத்வா அடங்கிய வெளக்கத்தத் தடை செய்றதா பாகிஸ்தான் சொல்லியிருக்கிறதா சொல்லியிருக்கு.. அய்யா யார் குரானுக்கு வெளக்கம் சொன்னாலும் அது இசுலாமிய அடிப்படைக்கு முரணில்லாமத் தான் இருக்கோணும்.. புரியுதா.. இதப் புரின்சிகிட்டீங்கன்னா எல்லாம் புரியும்.

நீங்க அந்தப் பதிவில பின்னூட்டப் பெட்டிய அடச்சி வச்சிருக்கிறதால இங்க போட வேண்டியதாப் போச்சு.. ஐயா நல்லடியாரு மன்னிச்சுக்கோங்க..

முஹம்மதுநபி அவர்களின் வருகைக்கு முன்னரே அல்லா என்ற வார்த்தை இருந்ததை முஸ்லிம்கள் மறுக்கவில்லை.

பன்மைபடுத்த முடியாததும் பால் வேற்றுமைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளாததுமான ஒரு தனித்தன்மை வாய்ந்த வார்த்தையினை (அராபிக் இலக்கணம் படித்தால் விளங்கும்) எல்லாம் வல்ல மாபெரும் சக்தியினை விளிக்கப் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு தான்.

அமல சிங் வேண்டுமானால், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இறைவனை 'எல்லாம் வல்லவன்' என்று சொல்லிக்கொண்டு போகட்டுமே. (விஷயம் இறைவனை ஏற்பதில் தான். அவன் பெயரை சர்ச்சைப்படுத்துவதில் இல்லை).

அப்படி அமலசிங் இறைவனை 'எல்லாம் வல்லவன்' என்று அழைத்துக் கொண்டாலும் நாளை வேறொரு வலைப்பூவர் வந்து
அமலசிங் பயன்படுத்திய 'எல்லாம் வல்லவன்' என்ற வார்த்தை 'இந்த புராணத்தில், இந்த வேதத்தில் இருந்து காப்பிஅடிக்கப்பட்டது என்று சொன்னால்.....?
அமலசிங்குகள் சிந்திக்கட்டும்!.

அ-மலசிங்கம் அய்யா!

இந்த பிறை பாக்குற வெசயம், இஸ்லாத்தில கை சூப்புற பாப்பாவுக்கு கூட தெரியும். ஏன்னா விசயம் அந்த அளவுக்கு அடிப்படையானது. சந்திரனை வணங்கற யாருமே முஸ்லிமா இருக்க முடியாது.

Worship the Creator : Not HIS creations! அப்புடின்னு இங்குலிபீசுல செல பேரு சொல்றத கேட்டிருப்பீங்கன்னு நம்பறேன்.

மனசில பண்டிதர் ரேஞ்சுக்கு நெனச்சிகிட்டு இருக்குற ஒமக்கு இது ஏன் வெளங்காமப் போச்சி?

Post a Comment

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker