நேசகுமாரின் சைபர் வெளியும் மனித உடல்களும்

>> Thursday, April 28, 2005

கில்லாடி நேசகுமார் பதிவுகளில் புலம்பியுள்ள சைபர் வெளியும் மனித உடல்களும் சில கருத்துக்களை மேதாவித்தனமாக எழுதியுள்ளார்.
தன்னை எழுதத் தூண்டியதற்கான காரணங்களையும் தன்னைப் பற்றி வெளிப்படுத்திக் கொள்ளாததன் சூழ்நிலைகளை விளக்கியுள்ளார். நாகூர் ரூமி அவர்கள் எழுதிய "இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்" நூலைப் படித்து விட்டு அதற்கான தன் விமரிசனத்துடன் இஸ்லாமிய பயங்கரவாததிற்கு எதிராக பேராசிரியர் ரூமி போன்றவர்கள் முயற்சியெடுக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார். அவ்வறு வேண்டுகோலிட்டதே தவறு என்பதை பின்னர் உணர்ந்ததாகவும் சொல்லியுள்ளார்.
நேசகுமாரின் கோணல் பார்வையில் இஸ்லாமியர்கள் மட்டும் ஏன் பயங்கரவாதிகளாகத் தெரிகின்றனர் எனத் தெரியவில்லை. அல்லது பயங்கரவாததிற்கு அவர் வைத்திருக்கும் அளவீடு என்ன எனவும் விளக்கவில்லை.
அவரின் ஒரே குறிக்கோல் இஸ்லாத்தை தூற்றுவது என்று இருக்கும் போது அவரின் எழுத்துக்களில் நியாயம் எதிர்பார்க்க முடியாது.
கோவை குண்டு வெடிப்பிலும் கீழக்கரையில் இஸ்லாமியர்களால் குடும்பம் குடும்பமாக வெளியேற்றப் பட்டவர்கள் (!?) மேல் எற்பட்ட அனுதாபம் ஏன் பாகல்பூரிலும், குஜராத்திலும் பாதிக்கப்பட்டவர் மீது ஏற்படவில்லை? கற்பினியின் வயிற்றை கிழித்து கருவை தீயிலிட்டவர்கள் இவரின் பார்வையில் எப்படித் தெரிகிறார்கள்?
விமரிசிப்பவரை களங்கப் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் பேராசிரியர். ரூமி அவர்களின் ஊரில்தான் பார்சல்பாம் அனுப்பி அப்பாவி கொல்லப்பட்டடர் என விமரிசித்துள்ளார். அதே ஊரில்தான் சமீபத்திய சுனாமியில் பாதிக்கப் பட்டவர்களுக்கு தங்கள் வீடுகளிலும் பள்ளிவாயில்களிலும் அடைக்கலம் கொடுத்த மக்களும் இருக்கிறார்கள் என்பதை நேசகுமார் சந்தர்ப்பவசமாக மறந்து விட்டார். தன் கருத்துக்கு வழு சேர்க்க தனக்குத் தேவையான தகவலை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் அவர் எழுத்துக்களின் மீதான நம்பகத்தன்மையை இழக்கிறார்.

Read more...

நேசகுமாரின் பார்வையில் இஸ்லாம்.

>> Monday, April 25, 2005

"முஸ்லிமல்லாதோர் பார்வையில் இஸ்லாம்" என்ற தலைப்பில் நேசகுமார் என்பவர் பல கருத்துக்களை எழுதி வைத்துள்ளார். அவர் கண்ணோட்டத்தில் விளக்கமளிக்க முடியாவிட்டலும் முடிந்த வரை தெரிந்ததை எழுதி வைக்கிறேன்.

முதலில் நேசகுமார் தன்னை நடு நிலைவாதியாகவோ மத சார்பற்றவராகவோ காட்டிக்கொள்ளவில்லை. இந்து மதம் மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக நம்புபவர்களில் அவரும் ஒருவர் என்று அறிமுகப் படுத்தி கொள்வதோடு அவரின் எழுத்துக்கள் பெரும்பாலும் இஸ்லாத்தைப் பற்றியும் கிறிஸ்தவத்தைப் பற்றியும் தான் இருக்கின்றன.

இந்து மதம் மறுமலர்ச்சியை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக நம்பும் நேசகுமார் அது எந்த வகையில் என்று நிரூபிப்பதை விட்டு விட்டு ஏனைய மதங்களும் குறைபாடுகளுடையவையே எனக் காட்ட முயற்சித்திருக்கிறார்.

நேச குமார் அவர்கள் இஸ்லாத்தை முஸ்லிம் நாடுகளுடனும், முஸ்லிம் அரசியல்வாதிகளை இஸ்லாமிய முன்மாதிரிகளாகவும் நினைத்துக் கொண்டு தனது பாணியில் எழுதி இருக்கிறார் என்பது அவர் எடுத்துக் கொண்ட தலைப்பில் உள்ள அவரின் சூழ்ச்சி தெரிய வருகிறது.

இஸ்லாத்தைப் பற்றி சொல்வதற்கு முன் முஹம்மது நபி மற்ற புராண இதிகாச கால கதாபாத்திரங்களைப் போல சில தவறுகள் செய்து விமரிசனத்திற்கு உட்பட்டவர் என சித்தரித்து இருக்கிறார். தனக்கு விளங்கிய வரையில் மிக இலாவகமாக தனது கருத்துக்களை முஸ்லிம் அறிஞர்களின் குறிப்புகளுடன் எழுதியுள்ளார்.

உண்மையில் நேசகுமார் அவர்கள் இஸ்லாமிய சட்ட திட்டங்களில் குறை கண்டால் அதனை தர்க்க ரீதியில் விவாதித்து விட்டு தனது கருத்துக்களை பதிந்திருக்கலாம். மேலும் அவர் வாதத்தால் இஸ்லாமிய சட்டங்கள் தற்காலத்திற்கு ஒவ்வாதவை என சொல்லும் பட்சத்தில் அவர் தீவிரமாக நம்பும் இந்து மதத்தில் என்ன தீர்வு எனச் சொல்லி இருக்கலாம்.

குறிப்பாக பர்தா வரலாறும் நிகழ்வுகளும் என்று எழுதிவிட்டு அத்தகைய பர்தா முறையின் பாதகங்களை அவர் பட்டியலிட்டிருக்கலாம். தவிர்த்து ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளிலும் உள்ள பர்தாவகைகளை சொல்லியுள்ளார். குறிப்பாக அவர் பின்பற்றும் இந்து மதத்தில் இல்லாத ஆனால் பிற மதங்களில் இருக்கும் நடைமுறையை விமரிசித்து இருப்பதில் இருந்து அவரின் குறை பார்வை வெளிப்படுகிறது.

அடுத்தவனின் குறையை சொல்பவன் முதலில் குறைந்த பட்சம் தன்னிடம் அந்த குறை இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் நியாயம். ஆனால் நேசகுமாரோ சாமர்த்தியமாக தன் மத குறைகளை தவிர்த்து விட்டு அடுத்த மதத்திலுள்ளவற்றை விமரிசிப்பது நீலிக்கண்ணீர் வடிப்பது போல்தான் உள்ளது.

நேசகுமாரின் ஒட்டு மொத்த கருத்துக்களின் சாரம் அவர் மறுமலர்ச்சியடைந்து கொண்டிருப்பதாக நம்பும் மதத்தின் வளர்சிக்கு எவ்விதத்திலும் உதவாது. இஸ்லாத்தை பற்றி தனது பார்வை தவறு என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஆனால் சொன்ன கருத்துக்களை நியாயப் படுத்த சுயநலமாக முயன்றிருக்கிறார்.

நேசகுமார் மட்டுமல்ல அதைவிட சூழ்சியாளர்கள் கூட இஸ்லாத்தை விமரிசித்து இருக்கின்றனர். தமிழுக்கு அவர் புதிது அவ்வளவுதான். எனினும், அவரும் ஒருநாள் தெளிவு பெறுவார். ஏனெனில் இஸ்லாத்தின் சிறப்பே அதனை எதிர்ப்பவர்களை தன்பால் ஈர்ப்பதுதான்.

சகோதரர் நேசகுமாருக்கு, நீங்கள் இஸ்லாத்தை விமரிசிக்கும் முன் நீங்கள் எடுத்துக் கொண்ட கருத்துக்களுக்கு தீர்வுதான் என்ன என்று சொல்ல முயற்சியுங்கள். மேம்போக்காக உங்கள் எழுத்துக்களை படிப்பவர்களுக்கு உங்களின் செய்தி என்ன என்பதை சொல்லத் தவறாதீர்கள்.

முஹம்மது நபியைப் பற்றி தூற்றுவதற்கு முன் அவரின் உண்மை வாழ்க்கையை படித்துக் கொள்ளுங்கள். மேலும் அவர் காலத்தில் அல்லது அதற்கு முன்/பின் வாழ்ந்த ஏனைய தலைவர்களுடன் ஒப்பிட்டுப், அந்த காலங்களில் அவர் ஏற்படுத்திய மாற்றங்களை மனதார ஒப்பிட்டுப் பாருங்கள்.

மண்ணிக்கவும் உங்களைப்போல் குறிப்பெடுத்துக் கொண்டு விவாத்திக்கும் அளவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை. ஆனால் நீங்கள் மறுமலர்ச்சியை நோக்கி செல்வதாக நம்பும் உங்கள் மததிலுள்ள குறைபாடுகளை பட்டியலிட முடியும். எனினும் "பிற கடவுள்களை தூற்றாதீர்; ஏனெனில் அவர்கள் (உங்கள் கடவுளாகிய) அல்லாஹ்வை தூற்றுவார்கள்" என்ற இறைவசனத்திர்கு கட்டுப்பட்டும் "அவர்கள் மார்க்கம் அவர்களுக்கு; உங்கள் மார்க்கம் உங்களுக்கு" என இயம்பிய முஹம்மது நபியின் அறிவுறையை ஏற்று உங்கள் கருத்துக்களில் உடன்பாடு இல்லை என்பதை மட்டும் தற்போதைக்கு சொல்லி வைக்கிறேன்.

Read more...

About This Blog

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP