Thursday, June 30, 2005

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்...

போலி பின்னூட்டம் இட்டு, தமிழ்மணம் வாசகர்களை குழப்பியும், சம்பந்தப்பட்ட பெயருடைய பதிவர்களை மன உளைச்சல் படுத்தியும் வரும் நபர் அல்லது கும்பல், நேசகுமார் மற்றும் ஆரோக்கியம் ஆகியோரின் மற்றும் எனக்குத் தெரியாத பதிவுகளில் என் பெயரில் போலி பின்னூட்டமிட்டு சிண்டு முடியும் வேலையை செய்து வருகிறார்கள்.





சமீபத்தில் ஆரோக்கியம் அவர்கள் "இஸ்லாமும் மற்ற மதங்களும்" என்ற தனது கருத்தை எழுதி இருந்தார். அதில் ஒரு பின்னூட்டத்தில் "தலையை வெட்டுவோம்" என்றும், நேசகுமார் அவர்களின் ஆட்டோ ஸ்ட்ரைக் பற்றிய பதிவில் "ஜிகாத் செய்து உலகை இஸ்லாத்தின் கீழ்
கொண்டு வருவோம்" என்றும் என் பெயரில் பின்னூட்டமிட்டுள்ளார்கள்.



நான் தமிழ் மணத்தில் எழுதத் தொடங்கியது, என் நம்பிக்கை சார்ந்த குற்றச்சாட்டுகளுக்கு, நான் நம்பியதிலிருந்து விளக்கம் சொல்லவே. பதிலுக்கு இதர மதங்களையோ கொள்கைகளையோ மட்டம் தட்டி அல்லது குற்றம் சொல்லி என் நம்பிக்கையை அவர்களிடம் திணிக்கும் எண்ணமில்லை.



எது சரி? எது தவறு? என ஒவ்வொறுவரும் சுயமாக சிந்திக்கும் அளவுக்கு மனித நாகரிகம் முன்னேறி விட்டது. இதில் ஒருவரின் எழுத்து மற்றும் வாதத் திறமையால் நம்பிக்கைகளை மாற்ற முடியும் என நான் நம்பவில்லை.

இணையத்தில் தனிப்பட்ட அடையாளங்களை மறைக்கும் அளவுக்கு ஓரளவு கணினி அறிவு இருந்தபோதிலும், இது போன்ற அநாகரிக வேலை செய்து எனது கருத்து என்ற பெயரில் துவேஷமாக எழுத இஸ்லாம் என்னை பயிற்றுவிக்கவில்லை. நடு நிலையான வாசகர்கள் இதை அறிவார்கள் என்ற நம்பிக்கையில் சம்பந்தப்பட்ட பதிவுகளில் மறுப்போ அல்லது எனது பின்னூட்டங்களை தனி பதிவாகவோ எழுதும் எண்ணமில்லை.



மேலும், இதனால் சம்பந்தப்பட்ட பதிவர் படும் மன உளைச்சலால், போலி பிண்ணூட்டமிடும் நபர்ருக்கு ஊக்கமே கிடைக்கிறது என்பது எனது அனுமானம். IP அட்ரஸை வைத்து அவரின் வருகையை தடுக்கவோ அல்லது தனிக் கணினியாக இருப்பின், அதில் ஊடுருவல் செய்யவோ இணையத்தில் முடியும். அத்தகைய திறமையை பெற்ற பதிவர்களும் நம்மில் இருக்கலாம். போலி பின்னூட்டமிடுபவர் Browsing Centre இல் இருந்து இந்த சித்து வேலையை செய்யும் போது, "பாவம் ஒருபக்கம், பழி ஒரு பக்கம்" என்பதாகிவிடும்.



தமிழ் மணத்தில் தமிழில் மட்டும் எழுதி வருவதால், பெரும்பாலான பதிவர்கள் இதர அறிவு இல்லாதவர்கள் என நினைத்து 'அந்த' போலிகள் விளையாடுகிறார்கள். அவர்களை விரட்டிப் பிடித்து தண்டித்து நான் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை.



ஆக, என் கருத்துடன் ஒவ்வாத பதிவர்களை என் பதிவில் இருந்து கொண்டே மறுக்க அல்லது விளக்க முடியும் வசதி இருப்பதால், மேற்கண்டவாறு கீழ்தரமாகவோ அல்லது போலியாகவோ பிண்ணூட்டமிடும் எண்ணம் எனக்கில்லை.



Dondu அவர்கள் அனேகமாக எல்லா பதிவுகளிலும் இத்தகைய போலிகளை அம்பலப் படுத்தி வருவது அவரின் நல்ல எண்ணத்தைக் காட்டுகிறது. (என் சார்பிலும் நன்றி!)



மற்றபடி, அருமை 'போலி' க்கு,



கண்ணுக்குத் தெரியாத தொலைவில் இருக்கும் தமிழர்களை இணைப்பது இணையமே. அதில் ஊடுறுவி, தமிழர்களுக்குள் மனக்கசப்பை உண்டாக்கி நீங்கள் சாதிக்கப் போவது ஒன்னுமில்லை. மேலும், பெரும்பாலான பதிவர்களும், வாசகர்களும் உங்கள் 'இயலாமையை" அறிந்துள்ளதால், வேறு ஏதாவது உருப்படியாக செய்து உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும். நன்றி.

Tuesday, June 28, 2005

மகளை 3 குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு ஆயுள் தண்டனை!!!

எங்கோ ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி, மருமகளை கற்பழித்ததாக பிரசுரித்து 'எல்லாம் மதம் படுத்தும் பாடு' என அங்கலாய்த்தவர், கீழ்கண்ட நாளிதழ் செய்தியையும் கவனத்தில் கொண்டு, எல்லாம் எது படுத்தும் பாடு? என அறிய நடுநிலை வாசகர்கள் அறிய ஆவலாக உள்ளனர்.



=======தினமணி 28-06-2005=========

மகளை 3 குழந்தைகளுக்கு தாயாக்கியவருக்கு ஆயுள் தண்டனை



கூடலூர், ஜூன் 28: பெற்ற மகளையே மானபங்கம் செய்து 3 குழந்தைகளுக்குத் தாயாக்கியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


கூடலூர் குசுமகிரியில் வசித்து வந்தவர் அய்யப்பன் (47). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்த தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததால், மகள் 4 முறை கர்ப்பமடைந்துள்ளார். ஒரு முறை கர்ப்பத்தைக் கலைத்து விட்டார். மற்ற 3 முறை 3 குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு குழந்தையை அய்யப்பன் விற்று விட்டார். 2 குழந்தைகள் தாயுடன் கூடலூர் அருகில் உள்ள மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ளனர்.


கூடலூரில் அய்யப்பனின் தொல்லை அதிகரித்ததால்தான், மகள் மஞ்சேரியில் குடியேறினார். மஞ்சேரிக்கும் சென்று அய்யப்பன் தொல்லை தந்ததால், போலீஸில் புகார் செய்தார்.


மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மஞ்சேரி விரைவு நீதிமன்ற நீதிபதி கே.பி.சுஜாதா, குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனையும், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.1 லட்சம் ஜீவனாம்சம் தரவேண்டும் எனவும் திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். தொகையைத் தர தவறினால் மேலும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

=================== நன்றி ====================

கற்பழிப்புக்கு இஸ்லாம் பரிந்துறைக்கும் தண்டனை முறையை குறை சொன்னதோடு, அக்குற்றத்தை செய்தவன் முஸ்லிம் என்பதால் சந்தடிசாக்கில் இஸ்லாத்தையும் தூற்றும் 'ஆரோக்கிய எண்ணம்' கொண்டவர்களுக்கு சில கேள்விகள்:

  • தன் மகளையே கற்பழித்த அய்யப்பன் ஒரு இந்து! கற்பழிப்புக்கு இந்து மதம் (அல்லது மணு தர்மம்) வழங்கும் தண்டனை என்ன?

  • கற்பழித்தவன் ஆயுள் தண்டனை பெற்று, அபராதமும் கட்டிவிட்டால், அவன் செய்த கொடுமை நியாயமாகி விடுமா? ஆயுள் தண்டனை முடிந்தும் அத்தகைய கொடுமையை அரங்கேற்றமாட்டான் என உத்திரவாதம் கொடுக்க முடியுமா?

  • வாழ்க்கைய வெறுத்த ஒருவன் கற்பழித்து விட்டு, மேற்கண்ட குற்றத்தை செய்துவிட்டு சிறையில் மூன்று வேளை சாப்பிட்டு எந்த கவலையும் இன்றி இருப்பது, அந்த குற்றம் செய்தவனுக்கு கொடுக்கப் படும் உண்மையான தண்டனையாக இருக்குமா?

கற்பழிப்பு போன்ற குற்றங்களை செய்தவனை சாகும்வரை கல்லால் அடிக்கச் சொன்னது, அத்தகைய குற்றத்தையும் தண்டனையையும் பகிரங்கப் படுத்துவதன் மூலம் அக்குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்களும் அஞ்ச வேண்டும் என்பதே! உண்மையில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில், இக்குற்றத்திற்கு இதர நாட்டு தண்டனையையே கொடுக்கப்படுகின்றன.

நடுநிலை வாசகர்களே, மண்ணிக்கவும்! எந்த மதத்தையும் அதனை பின்பற்றுபவனின் குறையை வைத்து விமரிசிப்பது எமது எண்ணமல்ல!

Friday, June 24, 2005

எது பகுத்தறிவு?

அன்பை போதிக்கும் கிறிஸ்தவம், அஹிம்சையை போதிக்கும் இந்து மதம், அமைதியை போதிக்கும் இஸ்லாம். இவைதான் உலகில் 500 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றும் மதங்கள். ஒவ்வொன்றிலும் சில குறை- நிறைகள் இருந்தாலும், இதனை பரஸ்பரம் தெளிவு படுத்தி விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால், மதமே தேவையில்லை. மனுஷனா மட்டும் இருப்போம் என மேற்கண்ட மூன்று மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகளை சாடுகிறேன் என பகுத்தறிவாளர்கள் என சொல்லிக் கொண்டுள்ள சிலர், ஏதாவது ஒரு மதத்தை அல்லது எல்லா மதத்தையும் சாடுகிறார்கள். இவர்களுக்கு தீனி போடுவது அன்றாட நாளிதழ், தொலைக்காட்சி செய்திகளும், அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் அறியாப் பழக்க வழக்கங்களும்தான்.

மூடப் பழக்கவழக்கங்களை அடையாளம் காண்பதில் பொதுவான விவாதம் தேவை. ஆனால், அத்தகைய பழக்க வழக்கங்களை பின்பற்றும் மதங்களுக்கான மாற்றுக் கொள்கையை அடையாளம் காட்டுவதும் அவசியம். மேலும், மதங்களின் பெயரால் நடக்கும் மூடப் பழக்க வழக்கங்களைச் சுட்டிக்காட்டுவதுடன், மதமே தேவையில்லை என ஒதுங்கிக் கொள்வது பகுத்தறிவாகாது.

மதத்தை சரியாக விளங்காது, அவ்வாறு செய்பவர்களால், மதத்தையே குறை சொல்வதும் அறிவுடமையாகாது. முதலில் கடவுள் நம்பிக்கை தேவையா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

மேற்சொன்ன மூன்று மதத்தினரும் கடவுள் உண்டு என நம்புகின்றனர். பகுத்தறிவுவாதிகள் என்போர், அத்தகைய கடவுள் இல்லை என நம்புகின்றனர். கடவுள் உண்டு என நம்புபவர்களின் நம்பிக்கை வேதம் மற்றும் போதனைகளின் அடிப்படையிலானது. கடவுள் மறுப்பாளர்களின் நம்பிக்கை அறிவியல் மற்றும் அவர்களின் சுய அறிவுக்கு எட்டியவை.

இந்து மதக் கொள்கைகள், மனிதனின் பிறப்பைப் பற்றி சொல்லும்போது, போன ஜென்மத்தில் மனிதன் செய்த கருமங்களுக்கு இவ்வுலகத்தில் அவன் அனுபவிப்பதாகவும், ஏனைய உயிர்களை 'ஹிம்சை' செய்யக் கூடாது என்றும் போதிக்கிறது.

கிறிஸ்தவம் மனிதர்கள் அனைவரும் அன்பின் மறு உருவம். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி இறைவனை அடையலாம் எனவும்,

இஸ்லாம் ஒவ்வொரு மனிதனும் கடவுளால் நற்கருமங்கள் செய்ய இவ்வுலகில் படைக்கப் பட்டுள்ளனர், இவ்வுலகில் செய்யக்கூடிய வினைகளுக்கு, மறு உலகில் பலன் உண்டு என இரு உலகிலும் மனிதன் அமைதியான வாழ்க்கை வாழ போதிக்கிறது.

பகுத்தறிவாளர்கள், மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என நம்புகிறார்கள்!!!

இந்து மதம் சொல்லும் முற்பிறவி பலன், இவ்வுலகில் சந்தோசமாக இருப்பவர்களுக்கு சாதகமாகவும், கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு பாதகமாகவும் இருக்கிறது.

கிறிஸ்தவம் சொல்லும் அன்பு, இஸ்லாத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போனாலும், அவர்களின் கடவுளால் அருளப்பட்ட வேதம் மனிதர்களால் மாற்றப்பட்டபோது, அதன் பூரணப்படுத்தப்பட்ட கடைசி வெளியீடுதான் குர்ஆன் என அறிமுகப் படுத்தப்பட்டதாலும், இவை இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு இல்லை. அன்பு இல்லாமல் அமைதியை அடைய முடியாதுதானே?

இவ்வுலகில் ஒருவன் நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ இருக்க ஏதாவது ஒரு வழிகாட்டல் இருக்க வேண்டும்.

பகுத்தறிவு மட்டும் போதும் என்பது அறிவுப் பூர்வமானது அல்ல. எப்படியெனில், அடுத்தவரின் பொருளை எடுப்பது குற்றம். ஆனால் பகுத்தறிவுப்படி, இல்லாதவன் இருக்கிறவனிடமிருந்து எடுக்கிறான். தேவைப்படுபவன், இருப்பவனிடம் எடுப்பது பகுத்தறிவுப்படி சரியாக இருந்தாலும், நியாயப்படி, சட்டப்படி தவறே என அனைவரும் ஒப்புக்கொள்வர். இதுபோலதான், இதர கட்டுப்பாடுகளும்.

நான் நல்லவனாக இவ்வுலகில் இருப்பதால் எனக்கு என்ன பயன்? நானும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ இருக்கலாம்தானே? பகுத்தறிவு வாதப்படி இது சரிதானே? எனக்கு நல்லதாகப் பட்டது மற்றொருவருக்கு கெட்டதாக இருக்கலாம். இதனால்தான் எது நல்லது? எது கெட்டது? என்ற தெளிவான ஒரு வழிகாட்டல் அவசியம்.

பலம் உள்ளவன், பலவீனமானவரை அடக்கியாள முடியும். பகுத்தறிவுவாதப்படி இதுவும் சரியே. இதில் பலமுள்ளவன் கெட்டவனாகவும், பலவீனன் நல்லவனாகவும் இருக்கும் போது எதிர் விளைவுகள் ஏற்படுகிறது. இங்கு பலவீனன் நல்லவனாக இருந்து பயனில்லாமல் போகிறது. தன்னை மிஞ்சிய ஒரு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கை இருந்தால், பலமுள்ளவன் அராஜகமின்றியும், பலவீனன் தான் செய்த நல்லதுக்கு பலனையும் பெற முடியும்.

ஆக தன்னை மிஞ்சிய சக்தியாகிய கடவுள் நம்பிக்கை அவசியமாகிறது. அத்தகைய மனித சக்தியை மீறிய சக்தி, மனிதர்களுக்குள்ள பலவீனங்கள் இல்லாமல் இருப்பதும் அவசியமாகிறது.

இஸ்லாம், மனிதர்களின் பலவீனமற்ற சக்தியை கடவுள் (அல்லாஹ்) என போதிக்கிறது. எனினும் அவர்கள் கடவுளை நம்புவதில்லை. அவனின் அத்தாட்சிகளை அறிந்த போதும் அவர்களின் பகுத்தறிவு அத்தகைய கடவுளை ஏற்க மறுக்கிறது.

கண்ணுக்குத் தெரியாத விண்கோள்களை நம்புகிறார்கள், கண்களால் அறிய முடியாத உயிரை நம்புகிறார்கள். பிரபஞ்சத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத அல்லது கைகளால் தொட முடியாத அலை அதிர்வுகளை, அறிவியல் அறிந்த மனிதன் அவற்றிற்கும் தனித்தனி பெயரிட்டுள்ளான். அறிவியலின் அறிவுக்கு எட்டாத அலையை "ஒன்றுமற்ற அலை" (X-Rays) எனவும் நம்புகிறான். தொலைபேசியில் கேட்க முடிந்த ஒலியை, மனிதனின் வெற்று காதால் கேட்க முடிவதில்லை.

வானங்களும், பூமியும், கோள்களும் கோடிக்கணக்கான வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நியதிப்படி ஒழுங்கான பாதையில் இயங்கி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவது நிச்சயம் இது மனித சக்தியை மீறிய ஒரு சக்தி என்பதை விஞ்ஞானிகள், மெய்ஞ்ஞானிகள் உட்பட அஞ்ஞானிகளும் நம்புகிறார்கள்.

தற்கால அறிவியலின் முன்னோடியாக மத நம்பிக்கைகள் எவ்வாறு இருந்தன என்றும், பகுத்தறிவுவாதிகள் நம்பும் அறிவியல் எவ்வாறு பல சமயங்களில் முரன்பட்டுள்ளது என்றும் அவர்கள் அறிவியல் மற்றும் பகுத்தறிவு என நம்புவது எப்படி இஸ்லாத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது என்பதையும் விளக்குவதுதான் இப்பதிவின் நோக்கம்.


  • இன்ஷா அல்லாஹ் வாய்ப்பு கிடைக்கும்போது தொடர்வோம். நன்றி.

Wednesday, June 22, 2005

சிந்திப்பவர்களுக்கான வேதம்.

"சிந்திக்க மாட்டீர்களா?" என மனித சிந்தனைக்கு சவால் விடும் குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) எடுத்துச் சென்றது சாதாரண பாமரரிடம் மட்டுமல்ல. அராபிய பிரதேசங்களையும் உள்ளடக்கிய பாலைவனப் பிரதேசங்களை ஆட்சி செய்த ‘ஹெர்குலஸ்’ போன்ற ரோம சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளிடமும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய யூதர்களிடமும்தான்.


சமகாலத்தவர்களாலும் சர்வ வல்லமை பெற்றிருந்தவர்களாலும் முஹம்மது நபியின் கொள்கை உறுதியையும், அதன் தாக்கத்தையும் மறுக்க முடியாதபோது, 1400 வருடங்களுக்குப் பிறகு அக்கால மனநிலையை தற்போதைய உளவியல் அளவீடுகளால் ஒப்பிடுகிறேன் என கதைப்பது, நிச்சயம் சிந்திப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை நம்ப வைக்க யோகிகள், முனிவர்கள், சித்தர்கள் என மனித வாழ்க்கையை விட்டு விலகியவர்களையும் துணைக்கழைத்துள்ளனர்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையை திருப்பி போட்ட ஒரு கொள்கையை பாமரத்தனமகாவோ அல்லது அறிவுப்பூர்வமாகவோ குறை சொல்லி தோல்வி கண்டவர்கள், வேத வெளிப்பாட்டை 'இறை ஆவேசம்' என்றும் உளவியல் ஆராய்ச்சி என்றும் யோகிகள், சித்தர்கள் மற்றும் முனிவர்களின் செயல்களையும், வஹி வந்தபோது முஹம்மது நபியின் மனநிலையும் இவ்வாறுதான் இருந்திருக்கும் என்ற கற்பனை செய்து சில மேதாவிகள் தங்கள் பகுத்தறிவின் எல்லையை காட்டியுள்ளனர்.
இதுவும் அவர்களின் குறை பார்வையைத்தான் காட்டுகிறது என்பதை நிரூபிக்கும் முன், யோகங்கள் என உடலை வளைத்தும் ஒடித்தும் வித்தைகள் செய்த யோகிகள், துறவரம் பூண்டு வாழ்க்கையின் பாதியை வீணடித்த முனிவர்கள், நிர்வான சாதுக்கள் மற்றும் தற்கால சாமியார்கள் பற்றியும், குர்ஆன் அறிமுகப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் இருந்த மக்களையும் பற்றிய பார்வை அவசியமகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய யோகிகள், சித்தர்கள், முனிவர்களை அறிய ஆதாரமாக இருப்பவை, சுவடிகள் கல்வெட்டுக்கள், வாய்வழி செய்திகள்தான். அவர்களுக்கிருந்த பொதுவான ஒற்றுமை துறவரம், காட்டு விலங்குகளுடனான நெருக்கம் ஆகியவற்றை சொல்லலாம்.
இவ்வாறு வெகுஜன வாழ்க்கையை விட்டு தனித்திருந்தவர்கள் மீண்டும் சமூக அங்கீகாரம் பெறுவதில் இருந்த சிக்கலை, அவர்கள் பெற்ற அல்லது கற்ற யுக்திகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்தனர்.

இவர்களில் யோகிகளும் முனிவர்களும் தங்கள் ஆளுமையைப் பயன்படுத்தி மதரீதியில் பிரபலமானார்கள். இயற்கையையும் வழிபட்டு வந்தவர்களை வெகு இலகுவாக தங்கள் கட்டுப்படில் கொண்டுவந்தார்கள். (சித்தர்களளும் இவர்களைப்போல மனிதர்களை விட்டு தனித்து இருந்தாலும், சில பயிற்சிகள், ஆராய்ச்சிகள் செய்து மனித குலத்திற்கு வர்மம், சித்த மருத்துவம் போன்ற நல்லவைகளையும் வழங்கியுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.)

நவீன சாமியார்கள், மற்றும் நிர்வான சாதுக்கள், மேற்சொன்னவர்களின் தற்கால அவதாரங்களாகக் கருதப்பட்டாலும், இவர்களைப் பற்றியும், இவர்கள் போதித்த நெறிமுறைகள் பற்றியோ அல்லது அவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது பற்றியோ விமரிசிக்க வேண்டியதில்லை.

முஹம்மது நபியின் வாழ்க்கையை ஆராய்ந்தால், மேற்சொன்ன யோகிகள் மற்றும் சித்தர்களிடமிருந்த இயல்புகளைப் பெற்றிருக்கவில்லை என்பதை அறியலாம். ஆக, சித்து வேலைகள் மற்றும் செப்படி வித்தைகள்காட்டி அன்றாடம் வயிற்றை நிரப்பி பிழைப்பு நடத்தியவர்களுடன் மனித குலமேம்பாட்டிற்கு வந்தவர்களை ஒப்பிடுவது அறிவுடைய ஒப்பீடாகாது.

முஹம்மது நபியின் இளமைப் பருவம்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள்.
தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள்.

பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.

சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். எழுத படிக்கத் தெரிந்திருக்கவில்லை. ஓரளவு விபரம் தெரியவந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள். இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.

25-வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ஆம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.

இளமைப் பருவம் முதல் வாலிபம் வரை முஹம்மது நபியவர்களின் செயல்களும், பேச்சுக்களும் சகமக்களிடம் காணப் பட்டிருக்கவில்லை. அவர்களின் கொள்கையை குறை கூறிய எதிரிகள் கூட, முஹம்மது நபியின் மீதான நம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் குறை கூற முடியாதவர்களாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.

யார் அந்த 'பாகன் அரபிகள்' ?

இஸ்லாம் அறிமுகப்பட்டுத்தப்பட்ட முறையை கொச்சை படுத்தியவர்கள், பாகன் என்ற அரபியர்களுக்காக அனுதாபப்பட்டு, அவர்களின் கொள்கை இஸ்லாத்துடன் தோற்றதுதான் அவர்கள் செய்த வரலாற்றில் மண்ணிக்க முடியாத தவறு என்கிறார்கள். யார் அந்த பாகன் அரபிகள்?

முஹம்மது நபி பிறந்த சமூகம் 'பாகன்' என அறியப்பட்டார்கள். இவர்கள் தனித்தனி குலம் மற்றும் கோத்திரங்களாக வாழ்ந்து வந்தார்கள். சுமார் 360 வகையான குலத்தவராகவும் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்தனி தெய்வங்களையும் வணங்கி வந்தனர். அந்த கோத்திரங்களில் 'குறைஷி' எனப்பட்ட குலத்தாரே சிறந்தவர்களாக கருத்தப் பட்டார்கள். ஏனைய குலத்தார் குறைஷிகளை விட தாழ்ந்தவர்களாக கருதப்பட்டனர். முஹம்மது நபியவர்களும் அத்தகைய குறைஷி வம்சத்தில் தான் பிறந்தார்கள். ஆக, முஹம்மது நபியும் பாகர் வழி அரபியே.

பாகன் அரபிகளின் வாழ்க்கை முறை ஏனைய அரபியர்களை விட வித்தியாசமாகவும், அறியாமை நிறைந்ததாகவும் இருந்தது. குறிப்பாக பாகன் அரபிகளில் ஆண்களே சிறந்தவர்களாகவும், செல்வங்களை தருபவர்களாகவும், தங்கள் குலம் செழிக்க வந்தவர்களாகவும் கருதப்பட்டனர்.

பெண்களின் நிலை மிக மோசமாக இருந்தது. பெண்கள் இழி பிறப்பாக கருதப்பட்டனர். பெண் குழந்தை பிறந்தால் அவமானமாக கருதினர். பெண்குழந்தைகள் தங்கள் செல்வத்தை அழிக்க வந்த துர்தேவதைகளாக கருதி, பிறந்ததும் உயிருடன் புதைக்கப்பட்டனர். ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணுடன் உடலுரவு வைத்திருப்பது கெளரவமாக கருதப்பட்டது. தந்தையின் மணைவியை (தாய் அல்ல) மகனும், மகனின் மணைவியை தந்தையும் உடலுறவு கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது.

கற்பழிப்புகளும், சூதாட்டமும், விபச்சாரமும், போதை பொருட்களும் தங்கள் குலத்தின் சிறப்பை பறைசாற்றும் செயல்களாகக் கருதப் பட்டன. போர்களும், ஜென்மப் பகைகளும் இவர்களின் வீரத்தை காட்டுவதாக கருதப்பட்டன. அற்ப காரணங்களை பரம்பரை பரம்பரையாக மனதில் வைத்து பழி தீர்க்கும் பழக்கம் இருந்தது. தந்தையால் தீர்க்கப்படாத பகையை, மகன் தீர்க்க வேண்டும் என்ற பழக்கம் இருந்தது.

வலிமையானவர்கள், பலவீனர்களை அடிமைப்படுத்தி வந்தார்கள். ஏழ்மையான அரபிகள் செல்வந்தர் அரபிகளிடம் அடிமையாகவே இருந்து வந்தனர். பெரும்பாலானோர் தங்கள் பெண்குழந்தைகளை வளர்ப்பதை சுமை என எண்ணி அஞ்சி, குழந்தைப் பருவத்திலேயே கொன்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு தப்பிப் பிழைத்த பெண்கள், ஆண் குழந்தை பெறும் வரை ஏளனமாகக் கருதப் பட்டனர். பெண் குழந்தைகளை பெற்றால், உன்னை உன் தகப்பன் அன்று கொல்லாமல் விட்டதால்தான் இன்று எனக்கும் பெண் குழந்தையை பெற்றுத் தந்துள்ளாய் என சபித்தவாறு வாழ்க்கை நடத்தினர். அதற்காக சில சமயம் தண்டிக்கவும் செய்தனர்.

இவர்களின் இத்தகைய அறியாமை வாழ்க்கை முறையையும், பெண்குழந்தை பெற்ற பாகன் அரபிகளின் மனநிலையையும் கீழ்க்கண்ட குர்ஆன் வரிகள் மூலம் அறியலாம்:

16:58 அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.

16:59 எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?

இவர்களுக்கு இருந்த ஒரே சிறப்பம்சம் கவிதை மற்றும் இலக்கியத் திறமை. வட்டார சொற்களை அடுக்கு மொழியிலிலும், கவிதை நயமாகவும் பேசுவதில் வல்லவர்களாக இருந்தனர். திறமையான கவிஞனாக இருப்பது, அவர்களுடைய அறிவைப் பறை சாற்றும் அளவு கோலாக இருந்தது. அத்தகையவர்கள் தற்கால மருத்துவர், வழக்கறிஞரைவிட உயர்வாக கருத்தப்பட்டனர்.

ஏழு வகையான இலக்கியங்களை கஃபாவின் சுவர்களில் தொங்கவிட்டு தங்கள் இலக்கிய அறிவை பறை சாற்றினார்கள். இன்னுமொரு சிறப்பம்சம், அபரிமித மனப்பாடத்திறமை. அவர்களின் ஒவ்வொரு கவிதையும் ஆயிரக்கணக்கான வரிகளையுடைவையாக இருந்த போதிலும், ஓரிருதடவை படிப்பதன் மூலம் அல்லது ஒரே தடவையில் மணனம் செய்யும் அபரிமித ஆற்றலைப் பெற்றிருந்தார்கள்.

வேத வெளிப்பாடு:

இத்தகைய அவல நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.
எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ஹிரா எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.

பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.

இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் காண்டார்கள்.
அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'ஓதுவீராக' எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அவர் 'ஓதுவீராக' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக" என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது. பார்க்க அல்குர்ஆன் 96:1-5)


இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.

இறைவன் உங்களைக் கைவிட மாட்டான். மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்" என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.
ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் 'வரகா'விடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.

'நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்' உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர். ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி-2)

இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.

சாதாரண இறைவாக்கு என்பதையே நம்ப மறுப்பவர்களிடம், இறைவன் அழைப்பின் பேரில் விண்ணுலகம் சென்றும் இறைக்கட்டளையை கொண்டு வந்தேன் என்றால் நம்புவார்களா?விண்ணுலகப் பயணத்தின் அவசியம் என்ன? அந்த உளவியல் பரிச்சையில் எப்படி மக்களின் மனதை வென்றார்கள்?

இவ்வாறு அறிமுகமான ஒரு தத்துவம் எப்படி இறைவேதம் என நம்புவது? பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை எப்படி இக்காலத்திற்கும் இனி வரும் காலங்களுக்கும் பொருந்தும் என நம்ப முடிகிறது? அவ்வாறு வெளிப்பட்ட வேதத்தை கொண்டுவந்த முஹம்மது நபி இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள காரணங்கள் என்ன?

இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்

Saturday, June 18, 2005

பாலூட்டல்/ பால் கொடுத்தல் வேறுபாடு

காஞ்சி பிலிம்ஸ்-க்கு கொடுத்த விளக்கத்தில் பாலூட்டல் சம்பந்தமான ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி ஆரோக்கியம், ஒரு அறிவுப் பூர்வமான கேள்வி கேட்டு, தான் மீண்டும் நுனிப்புல் மேயும் வகை என நிரூபித்துள்ளார்.


திசை திருப்பும் முயற்சி எனினும், அவரின் அவதூறையும் குறுமதியையும் அம்பலப் படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதி தனி இப்பின்னூட்டம் இடுகிறேன்.


ஆயிஷா ரலி... அவர்கள் அறிவிப்பதாவது:

சுஹைலின் மகள் ஷஹ்லா ரலி..., அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே, விடுவிக்கப்பட்ட அடிமையாகிய ஸாலிம், எங்கள் வீட்டிற்குள் பிரவேசிக்கும் போதெல்லாம் எனது கணவர் (அபு ஹுதைஃபா) சந்தேககக் கண்ணோடு (அல்லது விருப்பம் இல்லாமல்) ஸாலிமின் வருகையை பார்க்கிறார். இதற்கு அல்லாஹ்வின் தூதர், "ஸாலிம்-க்கு பால் கொடு" என்றார்கள். உடனே அப்பெண்மணி (சுகைலின் மகள் ஷஹ்லா ரலி..) அவன் வளர்ந்த வாலிபனாக இருக்கும்போது நான் எப்படி பால் கொடுக்க முடியும்? என்றார். அல்லாஹ்வின் தூதர் புன்முறுவலுடன் சிரித்துக்கொண்டே"அவன் வாலிபன் என்பதை நான் அறிவேன்" என்றார்கள்.

(முஸ்லிம்: புத்தகம்-8; ஹதீஸ் 3425)


(நினைவில் கொள்க: பத்ர் யுத்த பயிற்சிகளத்தில் ஸாலிமும் ஈருபட்டிருந்ததை அல்லாஹ்வின் தூதர் அறிவார்கள் இதை வேறொரு அறிவிப்பில் அறியலாம்.)


மேலும் தொடர்ச்சியாக வரும் அறிவிப்புகளை (3426-3428) கவனத்தில் கொள்ளும் போது ஸாலிம் ரலி.. பத்ர் போர் பயிற்சியில் ஈடுபடும் அளவுக்கு வாலிப வயதினராக இருந்தார் என்றும் மற்றொரு ஹதீஸில் அவருக்கு 'தாடி' இருக்கும் அளவுக்கு வாலிப வயதினராக இருந்தார் என்றும், ஷஹ்லா அம்மையார் நபிகளாரின் ஆலோசனையை செயல் படுத்திய பிறகு அபு ஹுதைஃபா அவர்கள் அத்தகைய சந்தேகத்திலிருந்து விடுபட்டு சந்தோசமாக காணப்பட்டார்கள் என்பதும் அடுத்தடுத்த ஹதீஸ்களில் காணப்படுகிறது.



இந்த ஹதீஸ் வேறு சில இடங்களில் மேற்கோள் காட்டப்படும் போது, (அந்நியரை வீட்டுக்குள் அனுமதிப்பது மற்றும் பால் கொடுப்பது/தத்து எடுத்தல் சம்பந்தமாக) நபிகளாரின் இதர துணைவியர் இந்த ஹதீஸ் சுகைலின் மகள் ஷஹ்லா ரலி... வழக்கில் மட்டுமே எனவும் வாதிடுகிறார்கள். இதனையே உமர் ரலி..அவர்களும் ஆமோதித்தார்கள். இதுவே அனைத்து ஹதீஸ்கலை வல்லுநர்கள், இமாம்களின் தீர்ப்பாகவும் உள்ளது.



மேற்கண்ட ஹதீஸில் ஸாலிம் ரலி.. ஒரு விடுவிக்கப்பட்ட அடிமை என்பதும், அதுவரை அபு ஹுதைஃபா ரலி...வீட்டில் சகஜமாக புழங்கி/பழகி வந்தார் என்பதும், நபிகளார் பால் கொடு எனும்போது, எப்படி ஒரு வாலிபனுக்கு நான் பால் கொடுக்க முடியும் என வினவியபோது, புன்னகைத்துக் கொண்டே "எனக்குத் தெரியும் என்றது. நபிகளாரின் ஆலோசனையை செயல் படுத்தியவுடன் அபு ஹுதைஃபா, அத்தகைய சந்தேக எண்ணத்திலிருந்து முழுதும் விலகி சந்தோசமானார்கள் என்பதும் அறியப்படுகிறது.



அடுத்தவன் தன் வீட்டினுள் பிரவேசிப்பதையே விரும்பாதவர், எப்படி தன் மணைவியின் மார்பில் வாய் வைத்து பால் குடித்த பிறகு சந்தோசமாக காணப்பட்டார்? மேலும் அதுபோன்ற சந்தேகம் நீங்கியவராக காணப்பட்டார் என
அறிய முடிகிறது.


நிச்சயமாக எந்த ரோசமுள்ள ஆணாலும் இதை சகித்துக் கொண்டிருக்க முடியாது. ஆக, நபியவர்கள், ஸாலிம் வாலிபர் என்பதை அறிந்தும் பால் கொடு என்றது, பாலை கறந்து/வடித்து கொடு என பொருள் கொண்டால், குழப்பமில்லை. அதைபற்றி கடைசியில் பார்ப்போம்.
ஒருவருக்கு (வாலிபனுக்கு) பால் கொடு என்றால் ஆரோக்கியம் போன்ற குறுமதியாளர்களுக்கு, ஏன் மார்பில் வாய் வைத்து பால் குடிப்பது என்று சிந்தனை செல்கிறது? இது அவரின் சிந்தை குறையைத்தானே காட்டுகிறது .


இதை எளிய உதாரனத்தில் விளக்குவதென்றால், நமது கிராமங்களில், கண்ணில் ஏற்படும் நோய்களுக்கு பாட்டி வைத்தியமாக தாய்ப்பலை இடுவது பெரும்பாலோர் அறிவர். (இதிலுள்ள மருத்துவ குணம் பற்றிய ஆராய்ச்சிக்கு செல்ல வேண்டியதில்லை). எனில், கைக்குழந்தையாக இருந்தால் தன் மார்புக்கு அருகே கொண்டு சென்று தாய்ப்பாலை இடுவர். கொஞ்சம் வளர்ந்த அல்லது வயதுடையவராக இருந்தால் குவளை அல்லது சிறிய பாத்திரத்தில் கறந்து (வடித்து) கண்ணில் இடுவர் அல்லது இடச்சொல்வர். இங்கு தாய்ப்பலை நேரடியாக கண் அருகில் சென்று பீச்சினார் அல்லது இட்டார் என எந்த அறிவுடையவரும் அல்லது நாகரிகம் பேணுபவர்கள் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.



மணம் முடிக்க (உடலுறவு கொள்ள) தடை செய்யப்பட்டவர்களில் பால் கொடுத்த அன்னை மற்றும் வளர்ப்பு பிள்ளை ஆகியோர் உள்ளனர். ஷஹ்லா அம்மையாரின் பாலை குடித்தால் (மார்பில் வாய் வைத்து அல்ல) ஸாலிம் வளர்ப்பு மகனுக்குறிய அந்தஸ்த்தை அடைகிறார். இதன் மூலம் நம்பிக்கை கொண்ட கணவன் மணைவியிடையேயான சஞ்சலம் நீங்குவதுடன், பாசமாக தன்னை நாடி வரும் ஒரு அனாதையின் உணர்வும் கொச்சை படுத்தப் படுவது தவிர்க்கப் படுகிறது.



மேலும் இந்த ஹதீஸ் எல்லா சூழலிலும் எல்லோருக்குமானதல்ல. ஷுஹைலின் மகள் ஷஹ்லாவிற்கான தீர்வு மட்டுமே. ஏனெனில், இஸ்லாமிய சட்டத்தில் பால் குடி மறக்காத (அதாவது 24-30 மாதங்களுக்குட்பட்ட) குழந்தையை மட்டுமே வளர்ப்பு மகனாம/மகளாகத் தத்து எடுக்க முடியும். இதை வேறு பல ஹதீஸ்களில் காணலாம். ஸாலிஹ் தாடி வைத்த வாலிபராக இருந்த போதிலும், சிறு வயது முதல் தன் வீட்டில் வளர்ந்தவரை தன் மகன் போல கருதி ஒரு தாயின் அன்புடன் பழகி வருகிறார். எனினும் தன் கணவனின் சந்தேகத்தை அல்லது தவறான எண்ணத்தை போக்க இத விட எதார்த்தமான தீர்ப்பு இருக்க முடியாது.



இங்கு ஆழ்ந்து கவனிக்க வேண்டிய படிப்பினைகளாவன.

  • ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினைக்கு நபிகளாரின் சாதுரியமான குர்ஆன் வழியிலான தீர்ப்பு.
  • தாய்மை உணர்வுக்கு நபிகளார் கொடுத்த முக்கியத்துவம்.
  • சந்தேகப் படும் கணவனுக்கு குர்ஆன் வழியிலான தீர்வு.
//குரோமசோம் சம்பந்தமில்லாத ஒருத்தியின் மாரில் வாய் வைத்தால் எப்படி அவன் மகனாவான்?//


ரொம்ப புத்திசாலித்தனமான கேள்வி கேட்டிருப்பதாக 'அயோக்கியம்' மெச்சிக் கொள்ளும்படி இஸ்லாம் ஒன்றும் அவ்வளவு முட்டாள்தனமான மார்க்கம் அல்ல.


இக்குற்றச்சாட்டு கிறிஸ்தவ மிஷனரியான 'Sam Shamoun' எடுத்த வாந்தியைதான் நம்ம 'அயோக்கியம்' மறுவாந்தி எடுத்திருக்கிறார். அதிலும் அறிவுப்பூர்வமான வாதம் இல்லை.


மேற்கோள் காட்டப்பட்ட ஹதீஸ் ஷஹிஹ் முஸ்லிமில் எண்: 3425 இல் காணப்படுகிறது. இது ஆரோக்கியத்தின் தவறல்ல. ஏனெனில் அவர் சொந்தமாக வாந்தி எடுப்பத்தில்லை. மேலும் ஒரு சர்ச்சைக்குறிய ஹதீஸை அதனுடன் தொடர்புடைய சம்பவங்கள், குர்ஆனின் வரையரைக்குள் உள்ளதா என்பதை ஆராய்தல் போன்ற 'அறிவுப்பூர்வமான' செயல்களுக்கும் நுனிப்புல் மேயும் அயோ(ஆரோ)க்கியத்திற்கும் சம்பந்தமில்லை. எப்படி எனில்:


அவர் எடுத்துக்கொண்டுள்ள மொழி பெயர்ப்பில், பால் கொடுத்தல் (கவனிக்க: பாலூட்டல் அல்ல) என்பதற்கு Suckle என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. Suckle என்ற ஆங்கில வார்த்தைக்கு பாலூட்டல் என்பது சரியே. ஆனால் அதற்கான அரபி வார்த்தைக்கு பால் (எடுத்து)கொடுத்தல் (Nursing) என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாலூட்டல் என்ற ஆங்கில வார்த்தைக்கு Breast Feeding என்பதே மிகச் சரியான மொழி பெயர்ப்பாகும். Suckle என்றால் To give or draw milk from breast or udder என விளக்கப் பட்டுள்ளது (பார்க்க Oxford & Mariam Webster Dictionary)


இன்னும் விளக்குவதென்றால் மேற்கண்ட ஹதீஸின் படி "ரிதாஅத்" என்ற அரபி வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ரிதாஅத் என்றால் பால் கொடுத்தல்; பாலூட்டல் அல்ல. எனில் பால் கொடுத்தலுக்கும் பாலூட்டலுக்கும் என்ன வித்தியாசம்?


பாலூட்டல் என்பது கைக்குழந்தைகளுக்கு மார்பில் குழந்தையின் வாயை வைத்து பாலை ஊட்டுதல் என்றும், பால் கொடுத்தல் என்பது மார்பிலிருந்து பாலை எடுத்து கொடுப்பது எனவும் கொள்ளலாம். (இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் ஏன் அரபியிலேயே தங்கள் மார்க்கத்தை அணுகுகிறார்கள் என கேட்பதுண்டு. இது போன்ற மொழி பெயர்ப்பு பிரச்சினைகள், சில சட்ட சிக்கல்களை உண்டு பண்ணுவதோடு, ஒரு அருமையான வாழ்வியல் தீர்வை கேலிக்குறியதாக்கிவிடும் வாய்ப்புண்டு என்பதை இத்தகைய மொழி பெயர்ப்பு குழப்பத்திலிருந்து அறியலாம் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்)


ஒரு அருமையான உணர்வுப்பூர்வமான குடும்பச் சிக்கலை, மிக சாதுர்யமாக,
அறிவுபூர்வமாக குர்ஆன் வழியில் நபிகளார் அணுகி இருப்பதை, ஆரோக்கியம் போன்ற குறுமதியாளர்கள், அந்த ஹதீஸின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் கொடுத்து நபிகளாரை கேவலமாக எழுதியதுடன் தாய்மை உணர்வையும் கொச்சைப் படுத்தி இருக்கிறார். இத்தகைய அரைகுறைகள் அறிவாளிகள் சபையில் அனாதையாக்கப் படுவதில் வியப்பில்லை. (பார்க்க அவரின் சமீபத்திய பதிவில் புலம்பியுள்ளதை)



ஆரோக்கியம், இனியாவது அறைகுறையாகவும், அவதூறாகவும் குறிப்பாக கேனத்தனமாக பிறரால் ஏற்கனவே எடுக்கப் பட்ட வாந்திகளை மறு வாந்தி எடுக்காமல், இஸ்லாத்தை விளங்கி கொள்ளும் வகையில் பிறருக்கும் பயணுள்ளதை விவாதித்தால், உங்களுக்கு தேவைப்படும் விளக்கம் தர முயற்சி செய்கிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பின் குறிப்பு:

இப்பதிவை படிக்கும் தாய்மார்களுக்கும் பெண்களுக்கும், இஸ்லாமிய வரலாற்றில் நபிகள் நாயகம் அனைத்து மக்களுக்கும் (ஆண் பெண் பேதமின்றி) முன்மாதிரியாக இருக்கிறார்கள். இதில் பெண்களின் அந்தரங்கம் சம்பந்தப்பட்ட சட்ட விளக்கங்களை தங்களின் மணைவியர் மூலமே அறிவித்தார்கள். அல்லது மிக நாசூக்காக தெளிவாக்கினார்கள்.


இப்பதிவில் எனது வார்த்தை பிரயோகம் சற்று கொச்சையாக/ஆபாசமாக இருக்கலாம். தமிழில் புலமை பெற்றவனல்ல என்பதாலும், இதைவிட எளிய வார்த்தைகளில் விளக்க முடியவில்லை என்பதாலும் என்னை மண்ணிக்க வேண்டுகிறேன்.


அனைத்து விஷயங்களையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ்வே. நன்றி.

Thursday, June 16, 2005

'காஞ்சி பிலிம்ஸ்' க்கு ஒரு விளக்கம்

காஞ்சி பிலிம்ஸ் அவர்கள் இப்படியும் ஒரு தீர்ப்பு: கற்பழித்த மாமனாருக்கே மருமகளை மனைவி ஆக்கினர் என்ற செய்தியை வெளியிட்டு அதன் முடிவுறையில் எல்லாம் மதம் செய்யும் வேலை என வருத்தப் பட்டுள்ளார்.


'காஞ்சி பிலிம்ஸ்' பல விழிப்புணர்வு பதிவுகளை பதிந்துள்ளார் எனினும் ''எல்லாம் மதம் செய்யும் வேலை'' என பஞ்ச் வைத்திருக்கிறார். அவர் சொல்ல வருவது ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தாலும், அச்சம்பவத்தில் வரும் பெயர்களை வைத்து பார்க்கும் போது சம்பந்தப் பட்டவர்கள் முஸ்லிம்கள் என அறிய முடிகிறது.


அச்செய்தியில் உள்ள உண்மையை முழுவதுமாக அறிய முடியவில்லை. மேலும் இதர மதங்களில் என்ன தீர்ப்பு எனவும் எனக்கு தெரியவில்லை. ஆனால், இஸ்லாம் அத்தகைய நிகழ்வுகளுக்கு என்ன தீர்ப்பு வழங்கியுள்ளது என தெளிவு படுத்தும் நோக்கில் சில கருத்துக்களை வைக்க விரும்புகிறேன். (அவரின் பதிவில் பின்னூட்டம் அடைக்கப்பட்டுள்ளது)


கீழ்கண்ட குர்ஆன் வசனப்படி திருமணம் செய்ய தடை செய்யப் பட்டவர்கள் விபரம்: அத்தியாயாயம் அந்நிஸா (பெண்) வசனம் 23.


" உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்: உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்.


அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் கல்யாணம் செய்யக்கூடாது.


ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை.


உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது.


இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான். " அல்குர்ஆன் 4:23
மனிதனின் வாழ்க்கை நெறிகள் குர்ஆனிலும் ஹதீஸிலும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன. படிப்பினை பெற வேண்டுமென்பதற்காகவே நபிகளாரின் அந்தரங்க வாழ்க்கையும் பகிரங்கமாக விளக்கப் பட்டுள்ளது. இதர மதங்களைப் போல தனி 'சூத்திரங்கள்' கிடையாது.
இஸ்லாமிய சட்டப்படி கற்பழிபிற்கு ஏனைய மனிதர்களுக்கு வழங்கப்படும் தீர்ப்பே, அந்த 'காமுக' மாமனாருக்கும் பொருந்தும். (தேவைப்பட்டால் அது பற்றியும் பிறகு அலசுவோம்.)

அவ்வப்போது இது போன்ற சம்பவங்கள் சில நடந்த போதிலும் அவர்களின் மதங்கள் அலசப் படுவதில்லை. ஆனால் தப்பித்தவறி முஸ்லிமாக இருந்து விட்டால் இத்தகைய அங்கலாய்ப்புகள்.


மேற்கண்ட சம்பவம் உண்மையாக இருப்பின் பாதிக்கப் பட்ட பெண் இஸ்லாமிய ஷரீஆ சட்டப் படியும், இந்திய சட்டப்படியும் நீதி பெற முடியும் என்பதை அறியவும். நன்றி.

குறிப்பு: நான் ஒரு சட்ட வல்லுனரோ அல்லது மார்க்க அறிஞரோ அல்ல.

Tuesday, June 14, 2005

வஹி - வேத வெளிப்பாடு பற்றிய கண்ணோட்டம்

நம்பிக்கைகளால் பின்பற்றப்படும் இஸ்லாத்தின் அடிப்படையை ஐயப்படுத்தும் முயற்சியாக சித்தர்கள், யோகிகள் மற்றும் முனிவர்களின் செயல்களையும், உளவியல் ஆய்வு, மேலை நாட்டவர் ஆராய்ச்சி என இறக்குமதி செய்யப்பட்ட திசை திருப்பும் வேலையில் சில 'திடீர் தாரகைகள்' களமிறங்கியுள்ளனர்.

கடவுள் நம்பிக்கையின் தோன்றம்:


இஸ்லாம் தவிர்த்து இதர மதங்களின் கடவுள்(கள்) நேரடியாக வந்து மனிதர்களுடன் தொடர்பு கொண்டார்கள் அல்லது அவதாரம் எடுத்து ஏனைய மனிதர்களைப் போல வாழ்ந்து, போரிட்டு, வென்று அல்லது தோற்று இன்னும் சாதாரண மனிதனுக்குறிய குணங்களுடன் சில சிறப்பு குணங்களையும் பெற்று கடவுளாக வணங்கப் படுகின்றனர்.


அவ்வாறு கடவுளாக நம்பப்பட்டவரின் கொள்கைகளை, உபதேசங்களை போதனைகளை மனதளவில் ஏற்றுக் கொண்டு பின்பற்றப்படும். மனித வரலாற்றில் கடவுள்(களின்) நம்பிக்கை எப்போது தோன்றியது என அறிய முடியவில்லை. ஒவ்வொறு மதத்தினரும் தங்கள் கடவுள் பற்றிய குறிப்புகளை தங்கள் வேதங்களிலிருந்துதான் அறிய முடிகிறது.


வேதம் என்பது தற்போது நூல்/புத்தக வடிவில் அறியப்பட்டாலும், கடவுள் நம்பிக்கை ஏற்பட்டபோது எந்த வடிவில் இருந்தது என்பதை ஆராய்வது அவசியமாகும். காகிதம் கண்டு பிடிக்கப் படும் முன் மனிதன் எழுத்தை அறிந்திருந்திருந்தான். அவ்வாறு அறிந்தவற்றை சுவடி, மரப்பலகை, மிருகங்களின் தோல், பாறை இவற்றில் எழுதி வந்தான்.


கடவுள் என்பவர் மனித தன்மையை விட பல சிறப்பம்சங்களை பெற்றிருக்க வேண்டும் என்பது அனைத்து மதத்திலும் உள்ள நம்பிக்கை. அத்தகைய கடவுள், ஒரு கூட்டத்தின் தலைவராகவோ, நாட்டின் மன்னராகவோ அல்லது தங்கள் சமூகத்தின் உயரிய நிலையில் இருப்பார்.


அவர் தன்னைச் சார்ந்தவர்களுக்கு வழிகாட்டியாகவோ அல்லது கட்டளையிட்டு வழி நடத்துபராகவோ இருப்பார். மனித தன்மையிலிருந்து சில உயரிய தன்மை கொண்டவர்களையும் மனங்கவர்ந்தவர்களையும் கடவுளாக வணங்கப் படுவதும் மனித இயல்பாக இருந்தது. இந்து மதத்தில் மனிதர்கள் தவிர்த்து, பஞ்ச பூதங்களான இயற்கையையும் வழிபடுவது கடவுள் வழிபாடாகக் கருதப் பட்டது.


மனித சக்திக்கு மீறிய இயற்கை நிகழ்வுகள் ஏற்படும் போது, இதனால்தான் ஏற்படுகிறது என முதலில் விளக்குபவர் கூட சில சமயம் கடவுளாக்கப் பட்டுள்ளனர். சிலர் இவை தங்களை மீறிய சக்தியின் வெளிப்பாடு என்றோ அல்லது இவற்றை உருவாக்கியது தான் என்றோ அறிவித்து தெய்வ வழிபாட்டை மனிதர்களிடையே கொண்டு வந்தனர். அதில் சிலர், தங்கள் கூடவே வாழும் காலம்வரை மதிப்பிற்குறிய தலைவராகவும், அவர் இறந்த பிறகு கடவுளாகவும் ஆக்கப் பட்டனர்.


இவையே மனிதர்களுக்கு கடவுள் நம்பிக்கை முதலில் ஏற்பட காரணமாக இருந்திருக்கும். அவ்வாறு பல சமயங்களில் தோன்றிய கடவுளர்களின் போதனைகள் எந்த வடிவத்தில் பாதுக்காத்து பின்பற்றப் பட்டன என்பது பற்றிய ஒரு பின்னோக்குப் பார்வை அவசியமாகிறது.

மதங்களுக்கிடையேயான ஒப்புமை:


உலகில் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் மதங்களில் இந்து மதம் தவிர்த்து இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இந்த மூன்று மதங்களையும் பின்பற்றப்படாதவர்கள் இந்துக்களாக இருந்திருக்கக் கூடும். இதில் முதலில் தோன்றியது யூதமும், பின்பு கிறிஸ்தவமும் பிறகு இஸ்லாமும் ஆகும். இந்து மதம் இந்த மூன்று மதங்களுக்கும் சம காலத்தில் அல்லது கொஞ்சம் முன் பின் தோன்றியிருக்கலாம் என்பது எனது யூகம்.


ஆக, இந்த நான்கு பெரிய மதங்களுக்கும் பொதுவான ஒற்றுமை 'வேதம்' அல்லது வேத நம்பிக்கை ஆகும். இந்து மத வேதங்கள் தவிர்த்து இதர யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களுக்கு வேதத்தை அருளியவர் அல்லாஹ் என்பதும் அத்தகைய வேதங்களில் கடைசியானது குர் ஆன் எனவும் நம்பப்படுகிறது. இதை குர்ஆன் மூலமும் இதர வேதங்களின் முன் அறிவிப்புகளிலும் அறிய முடிகிறது.


இதில் அல்லாஹ் என்பது இஸ்லாமியரின் கடவுளாக அறியப்பட்டாலும், யூதம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் படுகிறார். இந்துக்களின் வேதங்கள் பெரும்பாலும் காப்பியங்கள் இதிகாசங்களாக அறியப்படுகிறது.


அனைத்து வேதங்களிலும் கட்டளைகள், உபதேசங்கள், போர் தந்திரங்கள், வாழ்க்கை முறை மற்றும் சரிதைகள் போன்ற மனிதன் பின்பற்ற வேண்டியவை காணப்படுகின்றன. அதுதான் அக்கால மனிதனின் தேவையாக இருந்தன.


வஹீ என்றால் என்ன?


இதர வேதங்களின் வெளிப்பாட்டைப் பற்றிய விபரம் இல்லை. ஆனால் குர்ஆனின் வெளிப்பாடு அதாவது அருளப்பட்ட முறை பற்றிய தகவலை அறிந்து கொண்டால் குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வேதம் என்பது சந்தேகமின்றி நிரூபனமாகும்.


இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ் ஒருவன் என்றும், அவனின் போதனைகளை மனிதர்களுக்கு எடுத்துச் செல்லும் தூதரையும் நம்புவதாகும். அத்தகைய இறைவன் பார்க்கவோ, பேசவோ தொடவோ அல்லது மனித சிந்தனைகளால் வரையறுக்கவோ முடியாதவனாக இருக்கிறான். எனில், அவனின் கட்டளைகளை எப்படி மனிதர்களுக்கு தெரிவிப்பது? அவ்வாறு தெரிவிக்கும் முறைக்கு வஹி என்று பெயர்.


வஹி - என்றால் வேத வெளிப்பாடு ஆகும். மனிதனுக்கும் அல்லது தூதருக்கும் கடவுளுக்கும் உள்ள ஒரு தொடர்பு ஆகும். கடவுளின் எண்ணத்தை மனதளவில் உணர்ந்து அதனை வெளிப்படுத்துதல் என்று கூட சொல்லலாம். இதனை ஆங்கிலத்தில் Divine Inspiration, Revealtion என மொழி பெயர்க்கலாம்.


இஸ்லாத்தில் அ