மதமும் அறிவியலும் சந்திக்கும் ஒரு இடம் இருக்கின்றது என்ற உண்மையை ஏற்றுக் கொள்வது என்பது மேற்கத்திய சிந்தனையாளர்களுக்கும் இறைமறுப்பாளர்களுக்கும் ஏறக்குறைய சாத்தியமற்ற ஒன்றாகும்.
அறிவியல் நூல் என அறியப்படாத ஒரு வேதநூலாகிய குர்ஆனில் தற்கால அறிவியல் உண்மைகள் அடிக்கோடிடப் பட்டிருக்கின்றன என சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களின் வாக்குமூலங்களையே ஆதாரமாக வைத்தபோதும் பெட்ரோ-டாலர் கைமாறி இருக்கிறலாம், ஆணாதிக்கத்தை அறிவியல் உதவியுடன் சொல்கிறார்கள் என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இவ்விதண்டாவாதங்களுக்கு காழ்ப்புணர்ச்சியன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
கருவின் வளர்ச்சி பற்றிய ஆய்வுகளை குர்ஆன் தான் தொடங்கியது என்று யாரும் சொல்லவில்லை. அதில் சொல்லப்பட்டுள்ள சில குறிப்புகள் இன்றைய அறிவியல் உண்மைகளுடன் பொருந்துகின்றன என்றே சொல்கிறோம். இஸ்லாத்திற்கு முன்பே இது பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்டுள்ளது போன்று அறிவியல் நுணுக்கமாக சொல்லப்படவில்லை என்பதே நமது வாதம்.
மனிதனின் தோற்றம் பற்றிய ஆய்வு மனித இனம் தோன்றியது முதல் மனிதனுக்கு அவசியமாகி இருக்கிறது. ஒழுங்கான அமைப்புகளுடன் யுகங்களாக பிறந்து வளர்ந்து இறக்கும் மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என சார்லஸ் டார்வின் சொன்னதையும், தலையிலிருந்தும், மார்பிலிருந்தும், இடையிலிருந்தும், காலிலிருந்தும் பிறந்தான் என்பதையும் ஏற்றுக் கொள்பவர்கள், கீழே சொல்லப்பட்டுள்ள விஞ்ஞானிகளின் வாக்குமூலங்களையும் ஏற்க மறுப்பது ஏனோ?
தங்கள் நம்பிக்கையில் தற்கால அறிவியல் உண்மைகளையும் இன்னும் பல வாழ்வியல் உண்மைகளையும் ஒருங்கே கொண்டுள்ள குர்ஆனும் ஹதீஸும், எங்கே தங்கள் நம்பிக்கையில் (பிழைப்பில்?) மண் அள்ளிப் போட்டுவிடுமோ என்ற குறுகிய சிந்தனையால் அறிவுக்கு பொருந்தாத காரணங்களைச் சொல்லி ஒதுக்காமல், ஆதாரங்களுடன் விவாதிக்க தயங்குவது ஏனோ?
கருவியல் பற்றி குர்ஆனுடன் ஒப்பீடு செய்த விஞ்ஞானிகளின் வாக்கு மூலங்களை அப்படியே இங்கு பதிந்து மறுப்பவர்கள் அறிவியல் ஆதாரங்களுடனும், தங்கள் மத வேத ஆதாரங்களுடனும் மறுக்கட்டும். முடிவை நடுநிலையாளர்கள் சொல்லட்டும்.
1) டாக்டர். கீத் மூர்: (Professor Emeritus, Department of Anatomy and Cell Biology, University of Toronto. Distinguished embryologist and the author of several medical textbooks, including Clinically Oriented Anatomy (3rd Edition) and The Developing Human (5th Edition, with T.V.N. Persaud).
டாக்டர். கீத் மூர் அவர்கள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும் பொழுது:
"கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றி கோழி முட்டையில் தம் ஆய்வை நிகழ்த்தி, இன்றுள்ள அறிவியல் உலகிற்கு கரு வளர்ச்சி பற்றிய முதன் முதல் அறிவை வழங்கியவர் அரிஸ்டாட்டில் என்ற அறிவியலாளர் தான். ஆனால் அவர் கூட குர்ஆன் கூறிய அளவிற்கு கருவின் பல வளர்நிலைகளைப் பற்றி குறிப்பிடவில்லை.
எனக்குத் தெரிந்த வரை, இந்த 20-ம் நூற்றாண்டில் தான் மனிதனின் கருவின் வளர்நிலைகளைப் பற்றிய அறிவியல் அறிவை சிறிதளவே விஞ்ஞானிகள் பெற்றிருந்தனர்.
இதன் மூலம் குர்ஆனில் கூறப்பட்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் (குர்ஆனிய வசனங்கள்) யாவும், அது 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதிலிருந்து, திருமறைக் குர்ஆன் கொண்டுள்ள மனிதனின் கரு வளர்நிலைகளைப் பற்றிய செய்திகள் யாவும் மனிதனின் அறிவு சார்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்க முடியாது என்பதும் தெளிவாகிறது.
மேலும், திருமறைக் குர்ஆனானது இறைவன் அவனது திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கிய வேதம் தான் என்ற ஒரே இறுதி முடிவுக்குத் தான் நம்மால் வர இயலுகின்றது. ஏனெனில், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத, எந்த அறிவியல் பயிற்சியும் பெற்றிராத முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இன்றைய அறிவியலுக்கு முரண்படாத கருத்துக்களை பெற்றிருந்திருப்பார்கள் என்பதை நம்மால் கூற இயலாது"
2) டாக்டர். T. V. N பெர்சௌத்: (Dr. T. V. N. Persaud is Professor of Anatomy, Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology, and Reproductive Sciences at the University of Manitoba, Winnipeg, Manitoba, Canada)
இவர் கனடாவின் வின்னிபெக் நகரில் உள்ள, மனிடோபா மருத்துவப் பல்கலைக்கழகத்தில், உடலியல், குழந்தை மற்றும் குழந்தை நலம்: மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவம்: இனவிருத்தி அறிவியல் ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 16 வருடங்கள் உடலியல் துறைச் சேர்மனாகப் பணியாற்றியுள்ளார். இங்குள்ள மருத்துவத் துறையில் மிகவும் பிரபலமானவராகவும் இருக்கின்றார். மேலும் மருத்துவத் துறை சம்பந்தமாக 22 நூல்களும், 181 ஆய்வுரைக் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 1991 ல் கனடாவின் உடலியல் மருத்துவக் கழகத்தின் மதிப்புமிக்க விருதான J.C.B. விருதை, இவரது உடலியல் துறை ஆய்வுக்காகப் பெற்றார்.
அவரிடம் திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் அறிவியல் அற்புதங்கள் பற்றிக் கேட்டபோது, அவரது ஆராய்ச்சிக்குப் பின் கீழ்கண்ட கருத்தை வெளியிட்டார்.
"முஹம்மது அவர்கள் படிக்கத் தெரியாத, எப்படி எழுதுவது என்று கூட அறியாத சாதரண மனிதராகத் தான் எனக்குத் தோன்றுகிறது. சுருங்கச் சொல்லப் போனால் அவர் ஒரு படிப்பறிவில்லாதவர்.
மேலும் நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது 14 நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த சம்பவங்களைப் பற்றியுமாகும். எழுத்தறிவு, படிப்பறிவே இல்லாத ஒருவர் இன்றைய அறிவியல் உண்மைகளுக்கு மாற்றமில்லாத வகையில், இவ்வளவு ஆழமான அறிவியல் கருத்துக்களை எவ்வாறு கூற முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றே.
சந்தர்ப்பவசமாக நிகழ்ந்தது என்று கூட என்னால் கூற இயலவில்லை. ஏனெனில் ஒன்றல்ல இரண்டல்ல அதிகமான அளவில், மிகச் சரியான அளவில் அல்லவா அதன் அறிவியல் உண்மைகள் அமைந்துள்ளன. டாக்டர் மூர் அவர்களைப் போல எனக்கும், இது இறைவனால் (முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) அருளப்பட்டது அல்லது வழங்கப்பட்ட (வேதம்) என்பதை ஏற்றுக்கொள்ள எந்த சிரமமும் தோன்றவில்லை"
என்ற அறிக்கையை தனது ஆய்வுகளுக்குப் பின் அவர் வெளியிட்டார்.
மேலும் அவர் ஆய்வு செய்த மேற்கண்ட குர்ஆனிய வசனங்களையும் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களின் பொன் மொழிகளையும், தனது ஆய்வு நூற்களில் மேற்கோடிட்டுக் காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் கலந்து கொண்ட பல்வேறு ஆய்வரங்கங்கள், கூட்டங்களில் இது பற்றிப் பேசியும் உள்ளார்.
3) டாக்டர். மார்ஷல் ஜான்ஸன்: (Dr. E. Marshall Johnson is Professor Emeritus of Anatomy and Developmental Biology at Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania, USA)
இவர் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் பிளடெல்பியா நகரின் தாமஸ் ஜெஃப்ஃபர்ஸன் பல்கலைக்கழகத்தில் உடற்கூறு இயல் மற்றும் உயிரியல் வளர்ச்சி இயல் துறைப் பேராசிரியராகவும் இருக்கின்றார். டேனியல் பாக் கல்வி நிறுவனத்தின் டைரக்டராகவும், அதிலேயே 22 ஆண்டுகள் பேராசிரியராகவும், உடலியல் துறைச் சேர்மனாகவும் பணியாற்றி உள்ளார். 200க்கும் மேற்பட்ட பத்திரிக்கை வெளியீடுகளைச் செய்துள்ளார்.
"திருமறைக் குர்ஆன் கருவின் வளர்நிலைகளின் வெளிஅமைப்பை மட்டும் விவரிக்கவில்லை. கருவின் உள்வளர்நிலைகளின், அவற்றின் படைப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை இன்றைய அறிவியலினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாபெரும் நிகழ்வுகளில் இருந்து பிறழாது தனது கருத்துக்களை தெளிவாவே விவரித்துள்ளது.
நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில், நான் தெளிவான முறையில் அறிந்தவற்றை மட்டுமே என்னால் கையாள இயலும். இதில் கருவியலையும், உயிரியல் வளர்நிலை இயல் ((Developmental Biology) ஆகிய துறைகளை நான் நன்கு அறிவேன். எனக்கு மொழிமாற்றம் செய்து கொடுக்கப்பட்ட குர்ஆனின் வசனங்களையும் என்னால் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிந்தது.
உங்கள் முன் ஒரு உதாரணத்தை சொன்னது போல், இந்த குர்ஆனிய வசனங்கள் வெளிப்பட்ட நாளில் இன்று உயிருடன் இருக்கும் என்னை உட்படுத்திப் பார்ப்பேனேயாகில், இன்று என்னால் அறிந்து கொள்ள முடிந்த விசயங்களையும், விவரிக்கப்பட்டுள்ளவைகளையும், குர்ஆனில் அன்று விவரிக்கப்பட்டது போல் என்னால் விவரிக்க இயலாது.
முஹம்மது என்ற அந்தத் தனி மனிதர் எங்கோ சென்று இந்தத் தகவல்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்திற்கான எந்த ஆதாரத்தையும் என்னால் காண இயலவில்லை. ஆகையால், அன்று முஹம்மது எழுதிய* இந்த எழுத்துக்களை அவர் பெற்றதில் ஏதோ ஒரு தெய்வீக தலையீடு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது."
என்று குறிப்பிட்டுப் பேசினார்.
*முஹம்மது (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகவே இருந்தார். ஆனால் இறைவனால் அவருக்கு அருளப்பட்ட வசனங்களை தன்னருகில் இருக்கும் தன் தோழர்களுக்கு ஓதிக் காண்பித்து, அதை அவர்கள் மணனமிட்டும், எழுதியும் பாதுகாத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட உரையில் அவர் குறிப்பிட்டதை அப்படியே மொழியாக்கம் செய்து தர வேண்டும் என்பதால், அவரது உரையில் மாற்றம் செய்யாமல், இந்த அடிக்குறிப்பைத் தந்துள்ளோம்.
4) டாக்டர். ஜெரால்ட் C. கோரிங்கர் (Dr. Gerald C. Goeringer is Course Director and Associate Professor of Medical Embryology at the Department of Cell Biology, School of Medicine, Georgetown University, Washington, DC, USA)
இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் செல் உயிரியல் துறையில் கருவியல் பாடத்திட்டப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். சௌதி அரேபியவின் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற சௌதி மருத்துவக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் பேசும் போது,
"சில குர்ஆனிய வசனங்கள், மனித கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது ஆணின் விந்தும், பெண்ணின் கரு முட்டையும் சந்தித்து ஒன்று சேர்ந்து கொண்ட நிலையிலிருந்து உறுப்புகளின் வளர்ச்சியினூடாக செல்லும் மனித கரு வளர்ச்சியின் நிலைகளைத் தெளிவாகவே விவரிக்கின்றது.
மேலும் மனித கரு வளர்ச்சியின் நிலைகளைப் பற்றிய அவற்றை வகைப்படுத்துதல், கலைச் சொல்லாக்கம், பட்டியலிடுதல் போன்ற குறிப்பான தகவல்கள் இது வரை முன்பு எங்கும் இருந்ததில்லை.
இன்னும் சொல்லப் போனால், பரம்பரை பரம்பரையாக இலக்கியங்களில் வரக் கூடிய இது போன்ற அறிவியல் தகவல்கள் பல நூற்றாண்டுக் கால ஓட்டத்தில் அவை வழக்கிழந்து போயிருக்க வேண்டும். ஆனால், மனித வளர்ச்சியைப் பற்றி குர்ஆன் கூறியிருக்கும் கருத்துக்கள் இன்னும் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்கின்றன"
என்று கூறினார்.
5) பேரா. டிஜாடட் டிஜாசென்:(Professor Tejatat Tejasen is the Chairman of the Department of Anatomy at Chiang Mai University, Chiang Mai, Thailand)
இவர