வாசல் | தட்டுங்கள் திறக்கப்படும் அடுத்த | பாகிஸ்தானில் கோயில் இடிப்பு?! அடுத்த | இந்த வெற்றி யாருக்குச் சொந்தம்? அடுத்த | இஸ்ரேலின் வீரதீரபராக்கிரமங்கள்! அடுத்த | யாகாவா ராயினும் நாகாக்க - 1 அடுத்த | மதங்களும் பெண்ணியமும் - 2 அடுத்த | மூத்த இந்தியர் - ஹபீப் மியான் அடுத்த | மதங்களும் பெண்ணியமும். அடுத்த | இதனால் சகலமானவர்களுக்கும்... அடுத்த | எரிகிற வீட்டில் பீடிக்கு நெருப்பு தேடுபவர்கள் - 2 அடுத்த

'ஆறு'தல்

குமுதத்தில் வரும் ஆறு வித்தியாசங்களை எளிதில் சொல்லி விடலாம். திடீரென்று ஆறு விசயங்களைப் பற்றி எழுதுமாறு திரு.கோவி.கண்ணன் அழைப்பு விடுத்ததும் கை-கால் ஓடவில்லை! எனக்கு ஓரளவு அறிந்த இஸ்லாம் பற்றி எழுதுவதாக இருந்தால் ஆறப் போட்டிருக்க மாட்டேன்.

என் கவனத்தை ஈர்த்த விசயங்கள் நிறைய உண்டெனினும் அவை ஆறுக்குள் அடங்க வேண்டும் அதுவும் 'கவுச்சி' இல்லாமல் எழுத வேண்டும் என்ற நிபந்தனையுடன் 6 x 6 விசயங்களைப் பற்றி எழுதுகிறேன். கோவி.கண்ணன்! எதைக் 'கவுச்சி' என்றீர்கள்?).
ஆறு பற்றிய கான்செப்டில் இந்த 6x6 அடங்குகிறதா? என்று ஆறு (?) விசயங்கள் அறிந்தவர்கள் சொல்லலாம்.

(1) பிடித்த ஆறு நுட்பங்கள்:

மின்பல்பு: தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்தாரா? அல்லது மின்பல்பையா என்ற குழப்பம் எனக்குண்டு. If Thomas Alva Edison invented electric light; who discovered Electric? புதிதாக கண்டு பிடிப்பதைக் குறிப்பிட Invent என்ற பதமும் ஏற்கனவே இருந்து கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிட Discover என்ற பதமும் உபயோக்க வேண்டும்.

இணையம்: மக்களிடம் வெகு சீக்கிரத்தில் பிரபலமடைந்த தொழில் நுட்பம் இதுவாகத்தான் இருக்கும். இதன் பிரபலத்திற்கு பிரதானக் காரணம் அதிவேக தகவல் தொடர்பு மற்றும் இதுசார்ந்த பயன்பாடுகளில் பல இலவசம் என்பதே. பொதுவாகவே இந்தியர்கள் எந்த தொழில் நுட்பத்தையும் 10-15 வருடங்களுக்குப் பிறகே முழுமையாகப் பயன்படுத்துவார்கள். மாறாக, இணையத்தின் பிரபலத்திற்கு இந்தியர்களின் பங்களிப்பு மற்றவர்களை விட முன்னனியில் இருக்கிறது என்றால் மிகையில்லை.

ஆகாய விமானம்: எத்தனை முறை விமானத்தில் பயணித்தாலும் அத்தனை முறையும் த்ரில்லான அனுபவம்தான். எவ்வளவு பிஸியான மனிதராக இருந்தாலும் தலைக்குமேலே பறந்து செல்லும் (எச்சம் போடாத ;-) அந்த ஜீவனை ஒருமுறையேனும் ஆர்வமாக அண்ணார்ந்து பார்க்காதவர் எவருமிலர். இணையத்திற்கு அடுத்தபடியாக உலகைச் சுருக்கி க்ளோபல் வில்லேஜாக மாற்றிய பெருமை இதற்குண்டு.

செல்பேசி: இணையமும் விமானமும் உலகைச் சுருக்கின என்றால் திருவாளர் செல்பேசி உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது. மாடு மேய்ப்பவரும், பால்காரரும் பயன்படுத்தும் அளவுக்கு இதன் வெகுஜனதாக்கம் இருக்கிறது. மொபைல்-செல்லுலர்-ஹேண்ட்போன் என்று பலவாறு சொல்லப்பட்டாலும் 'செல்(லிட)பேசி' பொருத்தமான தமிழ்ப்பெயர்.

கணினி: இந்த வருடம் L.K.G யிலிருந்து U.K.G செல்லும் என் மகனிடம் என்ன வேண்டும் என்றதற்கு 'கம்ப்யூட்டர் வேண்டும்' என்ற உடனடி பதிலைக் கேட்டதும், நான் பாலர் பள்ளியில் படிக்கும்போது கலர் பென்சிலும், கல்லுக்குச்சி டப்பாவும் வாங்கிக் கேட்டதை எண்ணி பெருமூச்சிட்டேன்.

2) பிடிக்காத ஆறு
அணுகுண்டு: விஞ்ஞான தொழில் நுட்பத்தை அழிவிற்கும் பயன்படுத்தலாம் என்பதற்கு வழிவகுத்த அணுகுண்டுகள் ஒழிக்கப்பட வேண்டும். அணுகுண்டுகள் இல்லாவிட்டால் இன்றைய ஜப்பானும் அமெரிக்காவும் எப்படி இருந்திருக்கும்?

AIDS தடுப்பு விளம்பரங்கள்: மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என்று விளம்பரம் செய்தால் எப்படி நகைப்பிற்குறியதோ அதே போல்தான் இருக்கின்றன இன்றைய எயிட்ஸ் தடுப்பு விளம்பரங்களும். கட்டுப்பாடின்றி உறவு கொள்ளும் ஆறாறிவற்ற எந்த உயிருக்கும் வராத எயிட்ஸ் மனிதனுக்கு மட்டும் வருவது மனித ஒழுக்கத்தை வலியுறுத்தவோ?

பொய்: மனிதன் கண்டுபிடித்த முதல் தற்காப்பு நடவடிக்கை பொய்யாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் விளையாட்டாகச் சொல்லும் பொய்களால், சில சமயம் உண்மைகளும் சந்தேகிக்கப் படும்போது பொய்யை வெருப்பது உண்மையே!

அரசியல்: மக்களுக்கு சேவை செய்ய என்று சொல்லிக் கொண்டு தன் வயிரை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளால் அரசியல் மீது வெருப்பு வருகிறது. விஜயகாந்த் கேட்டதுபோல் எந்த அரசியல்வாதியாவது தேர்தலில் அணி மாறும் போது மக்களின் இந்தப் பிரச்சினையை தீர்க்கவே அணி மாறினோம் என்று சொன்னதுண்டா?

1992,டிசம்பர்-6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்தியாவின் வல்லரசுக் கனவை மேற்கொண்டு 30 வருடங்கள் தள்ளி வைத்த நிகழ்வு.

மெகா சீரியல்: பெரும்பாலான தமிழ் சீரியல்கள் ஓவர் ஆக்டிங்காக உள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்திருக்க வேண்டிய 'கணவருக்காக' வீம்புக்காக இழுத்தடிக்கப்பட்டு எப்படியோ முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் எத்தனை சீரியல்களில் ராதிகா அனுதாபத்தை எதிர்பார்த்து நடிப்பாரோ?

3) சந்திக்க விரும்பும் ஆறு பேர்

ஜார்ஜ் புஷ்: உலகில் அதிகம் கேலியாகப் பேசப்பட்ட அமெரிக்க அதிபர் இவராகத்தான் இருப்பார். சீரியசாகப் பேசினாலும் இவரின் பாடி லாங்குவேஜ் பெரும்பாலான சமயங்களில் சிரிப்பை வரவழைகிறது.

ஒஸாமா பின்லாடன்: உண்மையிலேயே ஒஸாமா என்றொரு நபர் இருக்கிறாரா? என்ற சந்தேகம் அடிக்கடி வருவதுண்டு. ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் உலகில் இருந்ததாக நம்பப்படும் டைனோசார்களை நம் கண்முன் கொண்டுவந்தவர்களுக்கு ஒஸாமா என்ற நபரைக் காட்டி இவன்தான் அமெரிக்காவின் அடிமடியில் கைவைத்தவர் சொல்ல அதிக சிரத்தை இருந்திருக்காது. உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிபடும்வரை பாவம் அமெரிக்க மக்கள்.

கோஃபி அணான்: பத்து வருடங்களாக சக்தி வாய்ந்த பதவியில் இருந்தும் அமெரிக்காவிடம் வாய் பொத்தி இருப்பதற்காகவா உங்களுக்கு அந்தப் பதவி கொடுக்கப்பட்டது என்று கேட்க வேண்டும். உலகின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் பட்டபோது, அமெரிக்காவின் அத்தனை அட்டூழியங்களையும் கண்டும் காணாமல் அமைதியாக இருந்ததால் முற்றிலும் தகுதியானவர். (நன்றி: சுப.வீரபாண்டியன்)

ஆம்ஸ்ட்ராங்: நிலவில் காலடிவைத்த மனிதர் என்று சொல்லப்படுகிறார். இன்னும் உயிருடன் இருப்பதாக சில வருடங்களுக்கு முன் படித்தேன். மனிதன் நிலவுக்குச் செல்லவில்லை என்ற விவாதம் இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. கூகிலில் APOLLO HOAX என்று தேடினால் சுவாரசியமான தகவல்கள் கிடைக்கிறது. இந்தக் கதைகளுக்கு அமெரிக்காவின் நாஸாவிலிருந்து பதிலும் சொல்லி இருப்பதால் இருபக்கமும் சந்தேகம் வருகிறது. ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் ஆல்ட்ரினை பொய்யன் என்று சொன்னதாகவும் படித்தேன். இந்தியா 2008 நிலவுக்கு அனுப்ப இருக்கும் ஆளில்லா விண்கலம் ஆம்ஸ்ட்ராங்-ஆல்ட்ரின் நிலவு பற்றி சொன்னவற்றை உறுதிபடுத்தும் வரை மனிதன் நிலவில் காலடி வைத்தது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட விசயமல்ல.

சோனியா காந்தி: இந்தியாவின் பிரதமராவதற்குக் கிடைத்த பிரகாசமான வாய்ப்பை பொருளாதார மேதை மன்மோகன் சிங்கிற்குக் கொடுத்து உலகையே வியக்க வைத்தவர். தன் அன்புக்கணவரை கொன்றவர்களையும் மன்னித்து மனிதாபிமனத்திலும் உயர்ந்த அரசியல்வாதியாக பரிணமிக்கிறார்.

பில்கேட்ஸ்: வேறெதற்கு கடன் கேட்கத்தான்!

4) அடிக்கடி முணுமுணுக்கும் ஆறு பாடல்கள்:

1) வருந்தாதே மனமே வீணை வருந்தாதே மனமே - எஸ் கிருஷ்ணன்
2) மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே - ஜெயச்சந்திரன்
3) மஹமூது நபிகள் பிரானே; மதினாவில் வாழும் கோனே - நாகூர் ஹனீபா
4) அன்பைச் சுமந்து சுமந்து அல்லும் பகழும் நினைந்து - மனோ
5) வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயோ? - ஹரிஹரன்
6) என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா? - எஸ்.பி.பி

5) விரும்பும் ஆறு இடங்கள்
1) டார்ஜிலிங்
2) மாலத்தீவுகள்
3) சென்னை
4) மொட்டைமாடி!
5) பெட்ரூம்!!
6) சுவர்க்கம்!!!

6) ஆறு விளையாட அழைக்க விரும்பும் ஆறு வலைப்பதிவர்கள் / பின்னூட்டமிட்டவர்கள்

1) காண்டிவிட்டி

2) பீர்முஹம்மது ஷாஜஹான்

3) இப்னுபஷீர்

4) அப்பாவி (இவரின் கேள்விகள் உண்மையிலேயே அப்பாவீத்தனமாக இருக்கின்றன)

5) புலிப்பாண்டி (என் பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டமிடும் இவர், தற்போது தலைமறைவாகி விட்டாரா? அல்லது வேறு பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறாரா?)

6) அணானிமஸ் (கண்டிப்பாக தனிப்பதிவு இட்டே ஆக வேண்டும். ஏனென்றால் தற்போது பல வலைப்பூக்களில் அணானிமஸ் பின்னூட்ட முடியாது!)

நல்லடியார் ... ஆறு போட்டு அசத்திட்டிவிட்டீர்கள். முழுவது இன்னும் படிக்கவில்லை. தலைப்புகள் அருமையாக இருக்கிறது. நிறைய விசயங்களும் இருக்கிறது. எனது அழைப்பை ஏற்று ஆறு போட்டதற்கு நன்றிகள். இறைவனே மிகப் பெரியவன் என்ற உங்கள் நிலைப்பாட்டையும் மதிக்கிறேன் என்றும் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்

//நல்லடியார் ... ஆறு போட்டு 'அசத்திட்டிவிட்டீர்கள்.'//

எழுத்துப்பிழை 'அசத்திவிட்டீர்கள்' என்று இருக்கவேண்டும் - தவறுக்கு வருத்தம்

//கோவி.கண்ணன்! எதைக் 'கவுச்சி' என்றீர்கள்?).//

கவுச்சி என்பது - சர்சைகள் குறித்து எழுதப்படும் பதிவுகளே. சிலர் படித்துவிட்டுப் போவார்கள், சிலர் சுவைத்துப் பார்த்துவிட்டும் செல்வார்கள், சிலர் பிடிக்காமல் பார்க்காமல் செல்கிறார்கள். அந்த அர்த்தத்தில் கவுச்சி இல்லாமல் என்று சொல்லியிருந்தேன்.

திரு சுவனப்பிரியன் அவர்களையும் ஆறு போட அழைத்திருந்தேன். அவர் இந்த பதிவை படிப்பார் என்று நம்புவதால்... அவர்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

அன்பின் நல்லடியார் அவர்களே

ஓரமா வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருந்த என்னை ஏற்கனவே இப்னு ஹம்துன் நாலு விளையாட்டிற்கு அழைத்து விட்டார். இப்போது நீங்களா? நான் கொஞ்சம் சோம்பல் பேர்வழி அதனால் ஆறு பதிவு போட எனக்கு கொஞ்சம் time கொடுங்கள்.

'அதுசரி',ஆறு நுட்பம் பிடிக்கும் என்று சொல்லி ஐந்து தான் போடிருக்கிறீர்கள், கவனிக்கவில்லையா?

மதத்தையோ.. அல்லது ஜாதியையோ தொடாமலும்.. மற்றவர்களை சாடாமலும் வந்த உங்களின் பதிவு என்பதால் ... ஒரு + குத்திட்டேன்..

நல்லடியின் ஆறு அடி நல்ல அடிதான்

நீங்கள் புஷ்ஷை விடவே மாட்டீர்களா?

//நல்லடியின் ஆறு அடி நல்ல அடிதான் - நீங்கள் புஷ்ஷை விடவே மாட்டீர்களா? //

அதென்னமோ தெரியலை புஷ் மீது தனிப்பிரியம் வருது. 2001 அமெரிக்க தேர்தலில் புஷ்ஷுக்கு ஆதரவாக அமெரிக்க முஸ்லிம்களும் அவரை எதிர்த்து நின்ற அல்கோருக்கு ஆதரவாக யூதர்களும் இருந்தனர். இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்ட பிறகும் அமெரிக்காவிலுள்ள CAIR இல் உரையாற்றிய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், இஸ்லாம் அமைதிக்கான மார்க்கம்; அதை, சில தீவிரவாதிகள் கையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றார்.

என்னைப் பொருத்தவரை புஷ்ஷுக்கு முஸ்லிம்கள் மேல் வெருப்பில்லை என்றே தெரிகிறது. ஆனால் அவரைச் சுற்றியுள்ள யூத பின்னனி கொண்ட ஆலோசகர்கள் தவராக வழி நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். சென்றவருடம் வரை புஷ் அரசாங்கத்தின் முக்கியப்பதவிகளில் அமெரிக்க யூதர்கள் இருந்தார்கள் என்று ஒரு செய்தி தளத்தில் படித்தேன்.

//மதத்தையோ.. அல்லது ஜாதியையோ தொடாமலும்.. மற்றவர்களை சாடாமலும் வந்த உங்களின் பதிவு என்பதால் ... ஒரு + குத்திட்டேன்.. //

எல்லப்பன்,
முஸ்லிமான எவரும் ஜாதியைப் பற்றி எழுதுவதில்லை. மதத்தைப் பற்றி இதுவரை எழுதி வருவது கூட பிறரால் அவதூறாகவும் அநாகரிகமாகவும் இஸ்லாம் விமர்சிக்கப்பட்டவற்றிற்கு பதில் கொடுக்கும் முகமாகவே எழுதி வருகிறேன்.

ஒவ்வொருவருக்கும் தத்தம் கொள்கைகளையோ அல்லது பிடித்தமானவை பற்றியோ பேச,எழுத விமர்சிக்க உரிமையுண்டு. பிறர் சார்ந்தவறையும் கூட அறியாமல் விமர்சிக்கலாம். அவ்வாறான விமர்சனங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களால் விளக்கம் கொடுக்கப்படும் பட்சத்தில் தவறான விமர்சனங்களுக்கு மன்னிப்பு கேட்பதுடன் தவறை திருத்திக் கொள்வதுதான் மனிதப்பண்பாடு.

வலைப்பூ உலகில் நான் சாதாரண பார்வையாளனாகவே இருந்து வந்தேன். அந்தக் காலகட்டத்தில் நேசகுமாரும் ஆரோக்கியமும் (வெவ்வேறு பாணியில் எழுதும் இருவரும் ஒரே நபர்கள் என்பது என் தனிப்பட்ட யூகம்) இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றி அநாகரிகமாக எழுதி வந்தனர். இதனை நடுநிலையுள்ள மனிதப்பண்பாட்டை மதிக்கும் எவரும் கண்டித்திருக்க வேண்டும். வெகுசிலர் தவிர மற்றவர்கள் இவர்களை ஊக்குவித்தே வந்தனர். தங்களால் முடியாததை இவர்கள் செய்கிறார்கள் என்ற உள்ளகிடையாக இருந்திருக்கலாம்.

மதம் சார்ந்த என் பதிவுகளில் வழக்கமாக வருபவர்கள், இது போன்ற பொதுவான பதிவுகளில் தலைக் காட்டுவதில்லை. இதிலிருந்து உவர்களின் நோக்கம் என்னவாக இருக்குமென்று யூகிக்க முடிகிறதா?

தங்களின் வருகைக்கும் + க்கும் நன்றி.

//அதனால் ஆறு பதிவு போட எனக்கு கொஞ்சம் time கொடுங்கள்.// - Contivity

தாராளமா டைம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆற அமர யோசித்து ஆறால் அடியுங்கள்!

//'அதுசரி',ஆறு நுட்பம் பிடிக்கும் என்று சொல்லி ஐந்து தான் போடிருக்கிறீர்கள், கவனிக்கவில்லையா?//

கவனிக்கவில்லை. முதலில் ஒவ்வொரு தலைப்பிலும் 1,2,3...நம்பர் கொடுத்து எழுதினேன். பிறகு அழித்து விட்டேன். இதனால் வந்த கவனமின்மையால் விடுபட்டுள்ளது. சுட்டிக்காட்டி விட்டதால் ஆறாவது நுட்பமாக மைக்ரோஸ்கோப் (நுண்னாடி?) பற்றிச் சொல்லலாம். 19 ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில்தான் மைக்ரோஸ்கோப் கண்டு பிடிக்கப்பட்டது.

பெரும்பாலான உயிரியல் ஆய்வுகளுக்கு மைக்ரோஸ்கோப்பின் பயன்பாடு அத்தியாவசியமாக இருப்பதால் இதுவும் என்னைக் கவர்ந்த நுட்பங்களில் ஒன்று.

//கவுச்சி என்பது - சர்சைகள் குறித்து எழுதப்படும் பதிவுகளே. சிலர் படித்துவிட்டுப் போவார்கள், சிலர் சுவைத்துப் பார்த்துவிட்டும் செல்வார்கள், சிலர் பிடிக்காமல் பார்க்காமல் செல்கிறார்கள். அந்த அர்த்தத்தில் கவுச்சி இல்லாமல் என்று சொல்லியிருந்தேன். //

கோவி.கண்ணன்,

எனக்கு சர்ச்சைகளில் என்றுமே ஆர்வமில்லை. அறிவுக்கு எட்டியவரை வாதிப்பேன். புரிந்து கொண்டால் சந்தோசம். இல்லாவிட்டால் எதிராளியின் கருத்துக்களுடன் நியாயமான கருத்துக்களை ஏற்று அல்லது அவர் புண்படாமல் மறுத்து ஒதுங்கிக் கொள்வேன்.

இஸ்லாம் பற்றிய ஆர்வம் பிறப்பால் முஸ்லிமாக இருப்பதால் எழுந்தது. ஓரளவு கல்வி/கேள்வி ஞானம் பெற்றபிறகு என் அறிவுக்கு எட்டியவரை இஸ்லாம் மற்ற மதங்களைவிட சரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதால் அதன்மீதான மதிப்பு உயர்கிறது. அதற்காக மற்ற மதங்கள் முற்றிலும் தவரான கருத்துக்களை போதிக்கின்றன என்றோ அல்லது மதங்களே தேவையில்லை என்றோ சொல்வது அபத்தம். எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன. ஓரிரை விசயத்தில் மட்டுமே இஸ்லாம் மற்ற மதங்களைவிட தனித்து நிற்கிறது.

மற்றபடி உங்கள் மார்க்கம் உங்களுக்கு; என் மார்க்கம் எனக்கு என்பதே என் நிலைப்பாடு.

ஆறு போட அழைத்ததற்கும் தங்களின் புரிந்து கொள்ளலுக்கும் நன்றி.

கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்க..!!

ஒரு அப்பாவி மனுசன கொஞ்ச நேரம் 'அக்கடா'ன்னு இருக்க விடுறாங்களா.. இல்ல்யே!

உங்களுக்கு என்னப்பு வேணும் இப்ப? ஆறு போடணும்.. அவ்வளவுதானே? அப்புறம் 'ஏன்யா இந்தாள கூப்பிட்டோம்'னு நீங்க வருத்தப்படக்கூடாது.. சரியா?

//தலைக்குமேலே பறந்து செல்லும் (எச்சம் போடாத ;-) //
ஜாலியான பேர்வலி போல இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நகைச்சுவையில் தெரிகிற்து

// 'செல்(லிட)பேசி' பொருத்தமான தமிழ்ப்பெயர். //
கைப் பேசி .. கை அடக்க தொலைப் பேசி என்றும் சொல்லுகிறார்கள்

//பள்ளியில் படிக்கும்போது கலர் பென்சிலும், கல்லுக்குச்சி டப்பாவும் வாங்கிக் கேட்டதை எண்ணி பெருமூச்சிட்டேன்//
இந்த காலத்துப் பசங்க கொடுத்துவச்சவங்க ... நம்ப எல்லோர் நிலைமையும் ஒரே மாதிரிதான். பென் சில் தொலைந்தால் அந்த காலத்துப் பெற்றோர்கள் தொலைத்துவிடுவார்கள்

//மெகா சீரியல்: பெரும்பாலான தமிழ் சீரியல்கள்//
ஆச்சிரியமாக இருக்கிறது . மெக சீரியலை பொருமையாக எப்படித்தான் பார்க்கிறீர்களோ !

//பில்கேட்ஸ்: வேறெதற்கு கடன் கேட்கத்தான்!//
அப்படியே எனக்கும் கொஞ்சம் கேட்டு வாங்கிட்டு வாங்க

//4) அன்பைச் சுமந்து சுமந்து அல்லும் பகழும் நினைந்து - மனோ//
பொன்னுமணி படப்பாடல் - படம் பார்க்கும் போது இளகிய உள்ளங்களை உருக்கிவிடும்

//5) வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயோ? - ஹரிஹரன்//
அருமையான இசையும் காட்சி அமைப்புகளும் சிறந்த பாடல்

//6) என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா? - எஸ்.பி.பி//
வெரிகுட் மெலடி - என்று ஆங்கிலத்தில் சொல்லலாம், காட்சி அமைப்பும் கண்னைக் கவரும்

*அருமையான, மென்மையான பாடல்களாக விரும்புகிறீர்கள் . மிகவும் மென்மையானவராகவும் இருப்பீர்கள் என்று நினைக்க முடிகிறது*

ஆறு போட்டுட்டம்ல..!

http://appaavi.blogspot.com/2006/07/blog-post.html

//AIDS தடுப்பு விளம்பரங்கள்: மாட்டிக் கொள்ளாமல் திருடுவது எப்படி என்று விளம்பரம் செய்தால் எப்படி நகைப்பிற்குறியதோ அதே போல்தான் இருக்கின்றன இன்றைய எயிட்ஸ் தடுப்பு விளம்பரங்களும். கட்டுப்பாடின்றி உறவு கொள்ளும் ஆறாறிவற்ற எந்த உயிருக்கும் வராத எயிட்ஸ் மனிதனுக்கு மட்டும் வருவது மனித ஒழுக்கத்தை வலியுறுத்தவோ?//

அதிகம் "சாதித்து"விட்டதாக நினக்கும் அம்மாதிரி மனிதர்களுக்கு இறைவன்/இயற்கை வைத்த செல்ஃப் செக்கிங் மெக்கானிஸம் எனவும் கொள்ளலாம்.

தங்களின் அமைதியான இந்த எழுத்தை ரஸித்தேன்.

முதலில் மனிதன் பிறகுதான் எதுவும் என்பதைத் திடமாய் நம்பும் சகமனிதன்.

ஹரிஹரன்

arai arumaiyaha thohuththu ullirhal valthukkkal

##
அணானிமஸ் (கண்டிப்பாக தனிப்பதிவு இட்டே ஆக வேண்டும். ஏனென்றால் தற்போது பல வலைப்பூக்களில் அணானிமஸ் பின்னூட்ட முடியாது!)

##

ஹி ஹி என்னயா கூப்பிட்டிங்க நானும் ஆரு கண்டிப்பா போடனுமாமாமாமா...

//ஆறு விளையாட அழைக்க விரும்பும் ஆறு வலைப்பதிவர்கள் / பின்னூட்டமிட்டவர்கள்

5) புலிப்பாண்டி (என் பதிவுகளில் அடிக்கடி பின்னூட்டமிடும் இவர், தற்போது தலைமறைவாகி விட்டாரா? அல்லது வேறு பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறாரா?)//


நல்லடியார்,
நமக்குள் கருத்து மோதல்கள் இருந்தாலும் அதையும் மீறி ஒரு உறவு உள்ளது...:):)நன்றி......இஸ்லாமியர்கள் உலகளாவிய அமைதியை திட்டமிட்டுத் தவிர்க்கும் மனோபாவத்தின் அடிப்படையிலேயே நாம் எதிரெதிரே பிரிந்து தர்க்கம் புரிகிறோம் அன்றி உங்களுக்கும் எனக்கும்
வேறு என்ன உள்ளது?????????

Post a Comment

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker