Tuesday, January 31, 2006

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை

உலக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதத்தை நிர்ணயிக்கும் ஏகபோக உரிமையை யாரும் கொடுக்காமலேயே அமெரிக்கா அடாவடியாக எடுத்துக் கொண்டுள்ளது. சர்வ வல்லமை கொண்ட ஒருநாடு தீவிரவாதத்திற்கு எதிராக தலை தாங்கினால் என்ன தவறு? என அப்பாவியாகக் கேட்பவர்கள் கவனிக்க:

அமெரிக்கா, பிரிட்டனிடமிருந்து விடுதலையடைந்த 1945 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கிட்டத்தட்ட 216 தடவை வெளிநாட்டு விவகாரங்களில் இராணுவ ரீதியாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 1945 முதல் தன்னுடைய சுயநலத்திற்காக இருபதுக்கும் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்துள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் பிரச்னைகளில் 100க்கு மேல் தலையிட்டு, தன்னுடைய அதிகாரத் திணிப்பை அங்கு நடத்தியுள்ளது.

செப்டம்பர் 2000ல் இஸ்ரேலிய இராணுவம் மிகப் பெரிய தாக்குதல் ஒன்றை பாலஸ்தீனர்கள் மீது நடத்தியது. இதில் 600 பேர் கொல்லப்பட்டனர். 15000 பேர் பெண்கள், குழந்தைகள் என காயம்பட்டனர். இதில் 1000 பேர் கடுமையான காயமடைந்ததுடன், மிக நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய அளவு ஊணமாக்கப்பட்டனர்.

பாலஸ்தீனர்களின் கிராமங்களைச் சுற்றி வளைத்து, இஸ்ரேல் இராணுவம் இந்த அக்கிரமத்தைப் புரிந்தது. சிகிச்சை பெறுதவற்குக் கூட யாரையும் அது வெளியே விட அனுமதிக்கவில்லை.

இவையெல்லாம் பாலஸ்தீனத்தில் அகதிகளாக வந்தேரியக் கூட்டம், மண்ணின் மைந்தர்கள் மீது நடத்தியவை. இது போன்ற எண்ணற்ற அடக்குமுறைகளை இஸ்ரேல் அமெரிக்காவின் உதவியுடன் செய்துள்ளது. உலக நாடுகளால் இஸ்ரேலுக்கு எதிராக் கொண்டு வரப்பட்ட ஐ.நா.தீர்மானங்களில் பலவற்றை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா தடுத்துள்ளதோடு இஸ்ரேலிய அராஜகங்களை ஆதரித்தும் உள்ளது என்றால் அமெரிக்காவின் செல்லப்/கள்ளப்பிள்ளைதான் இஸ்ரேல் என்றால் மிகையில்லை.

பாலஸ்தீன மக்கள் தயாகமொன்று இன்றி தவித்தவர்கள் அல்லர். அடுத்தவரின் சொத்தை அபகரித்து தன் சொர்க்கபுரியை அமைத்துக் கொள்ள போராடியவர்களும் அல்லர். அவர்களுக்குத் தொன்மை மிக்க வரலாறொன்று இருக்கின்றது. அந்த வரலாறு பலருக்கு தெரியாததால் யூத சியோனிஸவாதிகள் பலஸ்தீனை தனதாக்கிக் கொள்ள பின்கதவு ஊடாக பிரவேசித்து அக்கிரமம் புரிந்து வருகின்றனர்.

பாலஸ்தீன மண்ணில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் பெருமைகள் மற்றும் அதன் புனிதத் தன்மை பற்றி திருமறைக் குர்ஆனிலும், இன்னும் ஏராளமான நபிமொழிகளிலும் சிலாகித்துக் கூறப்பட்டுள்ளன. அறிஞர் பெருமக்களான இப்னு கதீர், அல் குர்தூபி, இப்னு ஜவ்ஸிய்யா மற்றும் பலர் "சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்" என்ற வசனத்திற்கு விளக்கமளிக்கும் பொழுது, ஷாம் என்றழைக்கப்படக் கூடிய இன்றைய சிரியாவும் பாலஸ்தீனப் பூமியுடன் உள்ளடங்கும் என்றும், அதுவும் அருள் செய்யப்பட்ட பூமி என்றும் விளக்கமளிக்கின்றார்கள்.


இந்த பூமியானது ஆன்மீகம், உலகாதாயம் மற்றும் அருட்கொடைகள் என்று அனைத்து வித அருட்கொடைகளையும் கொண்ட தளமாக, இறைவனால் அருட்செய்யப்பட்ட பூமியாகத் திகழ்கின்றது. இந்த அருட்கொடைகளானது பாலஸ்தீனர்களுக்கு மட்டும் உரித்தானதன்று, மாறாக பாலஸ்தீனர்கள், அரபுக்கள், முஸ்லிம்கள் என்று இந்த முழு உலக மனித வர்க்கத்திற்குமே அது அருட்கொடையாக விளங்குகின்றது என்பதை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது.

மேற்கு ஆசியாவிற்கும், ஆப்ரிக்காவிற்கும் இடைப்பட்ட மேற்கு வாசலாக இருப்பதோடு, இன்னும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கும் இது வாசலாக அமைவதோடு, நைல் நதிப் பரப்பிலிருந்து யூப்ரடிஸ் நதி வரைக்கும் இது பரவி இருப்பதன் மூலம், இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதோடு, உலகின் பல பாகங்களில் வாழும் மக்கள் இந்த வளமான பூமியில் வந்து தங்கி வாழ விரும்புவதன் காரணமாக, உலகின் பன்முகச் சமுதாயத்தை இந்தப் பூமி தன்னுள் தோற்றுவித்துள்ளதன் காரணமாக, இந்தப் பூமிக்கு "Fertile Crescent" என்றழைக்கப்படுவதும் உண்டு. இதுவே உலகில் தோன்றிய ஏராளமான இறைத்தூதர்கள் இங்கு தோன்றியிருப்பதும், அவர்கள் இறைவனது தூதுச் செய்தியை இங்கிருந்து பரப்பியதற்குமான சில குறிப்பிட்ட காரணங்களாகச் சொல்ல முடியும்.

பாலஸ்தீன மக்களின் மூதாதையர்கள் யபூஸியர் என அழைக்கப்படுகின்றனர். கி.மு. 4000 ஆண்டளவில் வாழ்ந்த அவர்கள் குத்ஸ் நகரை நிர்மாணித்தவர்களாவர். பலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் பலஸ்தீனின் பூர்வீக சொந்தக்காரர்களான அவர்கள் உருவாக்கிப் பின்பற்றிய பரம்பரை ஒழுங்கு அவர்களின், பின் சந்ததியினரான பலஸ்தீன் அரபுக்களால் கூட மிகச் சிறப்பாகப் பின்பற்றியதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

அந்த ஒழுங்கை சிதைந்து சின்னாபின்னமாக்கும் வகையில் கி.மு.1300 அளவில் யூதர்கள் (மூஸா நபியின் சமூகம்) முதன் முதலாக பலஸ்தீனுள் பிரவேசிக்கின்றார்கள். சுமார் 200 வருட காலம் பல சர்ச்சைகளில் ஈடுபட்ட அவர்கள் இறுதியில் அங்கு வாழ்வதற்கான வழியை அமைத்துக் கொள்கிறார்கள்.

எனினும் அவர்களது அந்த வாழ்வு வெகுகாலம் நீடிக்கவில்லை. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் அங்கு பிரவேசித்த அஸீரியப் படைகளும், கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் அங்கு வந்த பாபிலோனிய மன்னான நஸ்ஸரின் படைகளும் முறையே யூதர்களை விரட்டியடித்து விட்டு அரபு மக்களை மீளக் குடியேறச் செய்கின்றன. நஸ்ஸரின் படைகள் ஒரு படி முன்னே சென்று பைத்துல் முகத்தஸை உடைத்து விட்டு. சுலைமான் (அலை) அவர்கள் நிர்மாணித்த ஹைக்கல் சுலைமானி எனும் கோயிலையும் தரைமட்டமாக்கினர்.

பின்னர் ஈரானிய ஆட்சி வியாபித்த போது யூதர்கள் மீண்டும் பலஸ்தீனில் வந்து குடியேறினர். அத்துடன் ஹைக்கல் சுலைமானி எனும் கோயிலையும் நிர்மாணித்தனர்.

ஆனால் அவர்களது துரதிஷ்டம் அந்தப் புதுவாழ்வு சுமார் 300 அல்லது 400 வருடங்களுக்கு மேல் நிலைக்கவில்லை. அதற்குக் காரணமானோர் அவர்களே. அதாவது பலஸ்தீனில் வந்து குடியமர்ந்த யூதர்கள் கி.பி.70 ல் ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இதன் விளைவாக பைத்துல் முகத்திஸும், சுலைமான் கோயிலும் அழிக்கப்பட்டன. யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மீண்டும் அங்கு வாழ்ந்த அரபியர் மீளமர்த்தப்பட்டனர்.

பின்னர் பலஸ்தீனை ரோமர்களிடமிருந்து கலீபா உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மீட்டெடுக்கப்பட்ட போது ரோம பைஸாந்திய படையினர் ஜெரூஸலத்தின் திறவுகோளை உமர் (ரலி) அவர்களிடம் கையளித்த முறை வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் இடையிடையே கிறிஸ்தவ ஊடுருவல்கள் இடம் பெற்றன. சிலுவை யுத்தங்களும் நிகழ்ந்தன. முடிவில் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹ்) அவர்கள் பலஸ்தீனை முழமையாக விடுவித்துக் கொண்டார்கள்.

இடைக்காலத்தில் பலரது இடையூறுகளுக்கு மத்தியில் இஸ்லாமிய வட்டத்தை தாண்டாத பலஸ்தீன், துருக்கிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக கடைசி கலீபா சுல்தான் அப்துல் ஹமீத் கான் அவர்களின் ஆட்சியினுள் அமையப் பெற்றிருந்தது.

இதே சம காலத்தில் யூதர்கள் தமக்கென ஒரு நாடு, தலைவன், சமூக அமைப்பு எதுவும் இல்லாமல் உலகெங்கும் சிதறி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கூட அவர்களால் அமைதியாக வாழ முடிந்தது முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதியில் மாத்திரமே. குறிப்பாக ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி இருந்த 800 வருட காலமம் அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

யூதர்கள் மிகவும் புனிதமான சின்னமாக கருதும் அழும் சுவர் (The Wailing Wall) கூட முஸ்லிம்களது நல்லெண்ணம் காரணமாகவே மீண்டும் கிடைத்தது.அழும் சுவர் ஆரம்பத்தில் பாரிய குப்பை கூழங்களால் சிக்குண்டிருந்தது. எவருக்கும் அது பற்றிய அடையாளம் கூட தெரிந்திருக்கவில்லை. கி.பி.16 ம் நூற்றாண்டில் சுல்தான் ஸலீம் உஸ்மான் அவர்களுக்கு தற்செயலாக இச்சுவர் பற்றிய எண்ணம் ஏற்பட்டது. எனவே அவ்விடத்தை சுத்தம் செய்து யூதர்களுக்கு அதனைத் தரிசிப்பதற்கு அனுமதியும் வழங்கினர்.

இப்படி முஸ்லிம்களின் ஆட்சியில் அமைதியாக இருந்த பாலஸ்தீனம் எப்படி இன்றைய வல்லரசுகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி அமைதியற்ற தேசமானது? சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்கள் தீவிரவாதிகளா? என்றும் பார்ப்போம் (இன்ஷா அல்லாஹ்)

நன்றி: ஏஒன்ரியலிஸம்.காம்

இப்பகுதியின் முதல் பகுதி

Saturday, January 28, 2006

ஹமாஸ் வெற்றியும் ஊடகங்களின் ஒப்பாரியும்

அடைமழையினால் தனது வீட்டை இழந்து தெருவில் நிர்க்கதியாக நிற்பவரை நீங்கள் மனிதாபிமானத்தோடு தனது குடைக்குள் அழைத்துக் கொண்டு மழையிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறீர்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்கள் குடையைப் பிடுங்கிக் கொண்டு உங்களை மழையில் நனைய விட்டால் உங்கள் நிலை என்னவாக இருக்கும்?

அவசரமாக கடிதத்தை அனுப்ப வந்தவர், பெறுநரின் முகவரியை எழுத மறந்து விட்டார். உடனே அருகிலிருக்கும் உங்கள் பேனாவை இரவல் வாங்கி அதனை எழுதி போஸ்ட் செய்து விட்டு பேனாவை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திமிராகச் சென்றால் உங்கள் அணுகுமுறை என்னவாக இருக்கும்?

வெளியூரியிலிருந்து பிழைக்க வந்தவர், உங்கள் நிறுவனத்திற்கு வந்து அவசரமாக ஒரு போன் பண்ண வேண்டும் என்று உங்கள் மொபைல் போனை வாங்கி ஓவர்சீஸ் கால் பண்ணி விட்டு மொபைலை தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஏன் உங்களை அடித்து உங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றி உங்களை தீவிரவாதி என்றால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நடுநிலையாளர்களே, இவைதான் அரை நூற்றாண்டுகளாக இஸ்ரேலில் நடந்து கொண்டிருக்கின்றன. நனைந்து கொண்டிருந்த யூதர்களை குடைக்குள் அனுமதித்த பாலஸ்தீனர்கள் இன்று தீவிரவாதிகளாம். அவசரத்திற்கு பேனா தந்துதவிய பயங்கரவாதியாம். அந்நியரை தனது நிறுவனத்துக்குள் அனுமதித்ததால் நடுத்தெருவிற்கு வந்த நீங்கள் வன்முறையாளராம்.

ஒண்டவந்த பிடாரி ஊர்பூசாரியை விரட்டிய கதையின் நிகழ்கால உதாரணம்தான் இஸ்ரேலின் வரலாறு. பாலஸ்தீன மண்ணில் தொடர்ந்து கொடுமைகள் இடம் பெற்று வருகின்றன. யூத சியோனிச அரச அந்தப் பூமியின் மைந்தர்களை படுகொலை செய்து வருகின்றது.

தங்களுக்கு பாலஸ்தீன மண்ணில் ஓர் அங்குல உரிமை கூட பாராட்ட முடியாத நிலையில் சியோனிஸ்டுகள் அந்த மண்ணின் ஒரு பகுதியை அபகரித்து இஸ்ரேல் எனப் பெயர் சூட்டிக் கொண்டனர். இன்று இவர்கள் அபகரித்த பூமியை விஸ்தரிக்க பயங்கரவாதத்தை முடுக்கி விட்டுள்ளார்கள்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் உலக வரைபடத்தில் இல்லாத இஸ்ரேல், ஆண்டாண்டுகாலமாக வசித்துவரும் மண்ணின் மைந்தர்களை அமெரிக்காவின் தயவால் உலக நாடுகளின் கூக்குரல்களை மதியாது, வன்முறையாக அபகரித்த அராஜக வரலாற்றை மறைத்து ஒட்டுமொத்த உலகையும் ஏமாற்றியுள்ளது.

தான் இழந்த பூமியை மீட்கப் போராடும் பாலஸ்தீனப் போராளிகளை பயங்கரவாதிகள் என அழைக்கிறது. இது அமெரிக்கா கற்றுக் கொடுத்த பாடம். இந்தப் பாடப்போதனையிலிருந்து விடுபட்டு நியாயமாக சிநதிக்கத் தவறுவோர் தமது நியாயங்களுக்காக நியாய வழியில் நின்று போராட முடியாத நிலைக்குத் தள்ளப்படுவர்.

இவ்வாறு அடக்குமுறைக்குள்ளாவதே தங்களின் பிறவிப்பயனாக அனுபவித்து வரும் பாலஸ்தீனர்கள், சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஜனநாயகத்திற்கு திரும்பியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பாலஸ்தீன நாடாளுமன்றத் தேர்தலில் "ஹமாஸ்" இயக்கம் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் ஹமாஸின் வெற்றி மண்ணின் மைந்தர்களை மென்மேலும் அடக்கியாளலாம் என்று மனப்பால் குடிந்தவர்களின் தலையில் இடியென இறங்கியது. அதனை தாங்க முடியாமல் உலகின் ஒரே சர்வாதிகாரியான அமெரிக்காவும், பயங்கரவாத்தின் தந்தையான இஸ்ரேலும் இன்னும் அதன் அடிவருடும் ஊடகங்களும் ஹமாஸின் ஜனநாயக வெற்றியை கொச்சைப் படுத்தி மக்களை மென்மேலும் முட்டாளாக்குகின்றகின்றனர்.

இந்த ஜனநாயக வெற்றியை சகிக்க முடியாத இந்த சர்வாதிகாரிகள், ஹமாஸின் வெற்றியால் உலகமே அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒப்பாரி வைக்கின்றனர். யார் இந்த ஹமாஸ் போராளிகள்? இவர்களை உருவாக்கியவர்கள் யாவர்? உயிரையும் கொடுத்து இழந்த பூமியை மீட்க ஏனிந்த மரணப்போராட்டங்கள் என்பதை அறிய வெஏண்டியது நடுநிலையாளர்களின் கடமையாகும்.

எனவே, பயங்கரவாதம் என்றால் என்ன, யார் பயங்கரவாதி என்பவற்றை விளங்கிக் கொள்வதற்காக பாலஸ்தீனம் பற்றிய உண்மைகள் சிலவற்றை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம்.

...தொடரும்.... (இன்ஷா அல்லாஹ்)

Wednesday, January 25, 2006

கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்!

ஒட்டகம் குர்பானிக் கொடுக்கபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல? வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கு தொடுத்தவர் சொன்ன காரணங்கள் நகைப்பிற்குறியவையாக இருந்ததோடு உள்நோக்கமும் உடையதாகும்.

வழக்கின் முக்கிய அம்சமாக ஒட்டகங்கள் இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து பலியிடுவதற்காக வெகுதொலைவு நடத்திக் கொண்டு வரப்படுகின்றன. இக்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேரளாவில் ஒட்டகம் பலியிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளதைப் போல் தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஒட்டகம் பாலைவனங்களில் பலநாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் பயணம் செய்யக் கூடியது என்பதும், இராஜஸ்தான், குஜராத் போன்ற மேற்கு மாநிலங்களில் வண்டிகளில் கட்டி சுமைகளை இழுக்க பயன்படுத்தப் படுகிறது என்பதையும் நிச்சயம் அறிந்திருப்பார். மேலும் இப்பிரதேசங்களிலும் உலகின் பல பாலைவனப் பிரதேசங்களிலும் ஒட்டகம் போக்குவரத்திற்காவும், உணவிற்க்காகவும் வளர்க்கப்படுகின்றன.

கேரள உயர் நீதி மன்றம் கசாப்புக் கடைகளில் ஒட்டகம் அறுப்பதற்கு தற்காலிக தடை விதித்திருக்கக் காரணம், அவற்றை முறையாக அறுக்கத் தேவையான சர்ஜன்கள் கேரளாவில் இல்லை என்பதே ஆகும். அதாவது தர்காலிகத் தடை முறையாக அறுக்கப் படவேண்டும் என்ற நோக்கில்தானே தவிர அறுக்கவே கூடாது என்பதல்ல.

பக்ரீத் (ஹஜ்) பெருநாளின் போது இறைவனின் பெயரால் உண்பதற்குறிய விலங்குகளில் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் பலியிட்டு, அதன் கறியை ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது வசதியுள்ள இஸ்லாமியரின் பண்டிகைச் சடங்குகளில் ஒன்று. இதை அவரவர் வசதிக்கேற்ப ஹலாலான (இஸ்லாமிய) முறைப்படி அறுத்து கறியை பகிர்ந்து உண்பது குர்பானி என்கிறோம்.

இந்திய அரசியல் சாசணத்தின் 25 ஆவது பிரிவி வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையின் படியும், இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் (1972) இல் விலங்குகளை குர்பானி கொடுப்பது பற்றி எந்த தடையும் விதிக்கவில்லை என்பதும், இந்திய வனவிலங்கு வாரியம் வெளியிட்டுள்ள "பலியிடக் கூடாத விலங்குகள்" பட்டியலில் ஒட்டகம் இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தது.

இந்துக்களில் மிகச்சிலர் பசுவை வழிபடுகின்றனர் என்ற காரணம் ஓரளவு நியாயமானது. ஆனால் ஒட்டகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்த நியாயமான எந்த காரணமும் இல்லை. ஒட்டகத்திற்கு மத அடையாளம் கொடுப்பதாக இருந்தால் முஸ்லிம்களுக்கே அதிக உரிமையுள்ளது!.

மேலும் பசுப் பலியைத் தவிர்க்க ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிடுவது மாற்றுப் பரிகாரமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டால் ஒட்டகம் உணவுக்காக பலியிடப்படுவதை ஆதரிக்க வேண்டும்.

பிராணிநலன் என்ற பெயரில் இதுபோன்ற வழ்க்குகளில் மறைந்திருக்கும் காரணங்களை அலசினால் உள்நோக்கம் தெளிவாகும்.பிராணிகளை சித்ரவதை செய்யக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இஸ்லாம் எறும்பைக் கூட அநாவசியமாகக் கொல்வதை தடுக்கிறது. ஆனால் உணவுக்கு அவசியமான பிராணிகளை அழகான முறையில் அறுத்து உண்பதை தடுக்கவில்லை.

மனிதனின் வாழ்வாதாரத் தேவைக்காகவும் உணவுக்காகவும் மாமிசம் உண்பது உலக நியதி. விரும்பாதவர்கள் உண்ணாமல் இருப்பதை யாரும் குறை சொல்ல முடியாது.

உழவுக்குப் பாடுபட்ட காளை மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு ஜல்லிக்கட்டு என்ற பெயரில் இன்னொருபக்கம் காளைகளை சித்திரவதை செய்வதை அனுமதித்துக் கொண்டு, அஹிம்சை பேசுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் விஷ்னு அவதாரம் எடுத்த பன்றிக்கறியை தடை செய்ய யாரும் பொதுநல வழக்கு தொடுக்கவில்லை!

ஒவ்வொரு விலங்குகளையும் உறவு சொல்லிக் கொண்டு தேவையான போது உணவுக்காக உண்பதை தவிர்த்தால், முருகனின் வாகனமான சேவலையும் கூட பலியிடக் கூடாது. அதேபோல் விநாயகருக்குறிய எலியையும், சிவனுக்குறிய பாம்பையும் கொல்வதும் கூட பிராணி வதைதானே?

சட்டம் அறியதவர்கள்தான் இது போன்ற வழ்க்குகள தொடுக்கிறார்கள் என்றால், சென்னை மாநகரப் போலீஸ் தனி தொலைபேசி எண்ணை வெளியிட்டு ஒட்டகம் குர்பானி கொடுப்பதை துப்புக் கொடுக்கச் சொல்லி இருந்தது இன்னுமொரு வேடிக்கை.

இப்படி மார்க்க ரீதியாக பிறருக்குத் தொந்தரவு இல்லாத ஒரு சடங்கைச் செய்யக் கூட முஸ்லிம்கள் இந்தளவு போராட வேண்டியுள்ளதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான பாசிஸ சிந்தனையாளர்கள் எந்தளவு ஊடுறுவியுள்ளனர் என்பதை அறியலாம்.

உலக நாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்திய அரசுக்கு ஏராளமான அந்நியச் செலாவணியும், அதன் உப தொழிகளாலான தோல் தொழில், கால்நடை வளர்ப்பு ஆகியவையும் வளர்ச்சி அடைந்துள்ளன.

இது போன்ற வழக்குகளின் நோக்கம் பிராணி நலன் என்பதை விட முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான திட்டம் வெளிச்சமாகிறது. கேரளாவிலும், கிழக்கு மாநிலங்களிலும் மாட்டுக்கறியை உணவாக உட்கொள்ளுபவர்கள் பெரும்பான்மை. அதேபோல் கசாப்புக் கடை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் முஸ்லிம்கள்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை நசுக்குவது, இதனால் பாதிப்பு வந்தால் கூட அது தலித்துக்களுக்கு மட்டுமே என்ற நோக்கம்தான் இதன் பின்னனிக் காரணங்களாக இருக்க முடியும்.

Sunday, January 22, 2006

காந்திஜியின் கடைசி வார்த்தைகள்

காந்தியின் காரியதரிசியாக பணியாற்றி பிறகு இலண்டனில் தொழில் செய்த திரு.வெங்கட் ராமன் கல்யாணம் அவர்கள் சுமார் நாண்கு ஆண்டுகள் காந்தியுடன் பணியாற்றியுள்ளார். காந்தி சுடப்பட்ட கடைசி நிமிடம் வரை அருகில் இருந்தவர், "காந்தி, கடைசியாக ஹே ராம்!" என்று சொல்லவில்லை என்றதாக மலர் மன்னன் தனது கட்டுரையில் சொல்லியுள்ளார்.

"காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி!"


உண்மையில் திரு.வெங்கட் ராமன் கல்யாணம் காந்தியுடனிருந்த கடைசி நிமிடம் நடந்த நிகழ்வைப் பற்றி ரீடிப்.காம் தளத்தின் நேர்முகத்தில்

"காந்தியின் படுகொலையின் போது அருகிலிருந்த சாட்சியங்களில் உயிருடன் இருக்கும் ஒரே சாட்சி நான் மட்டுமே. காந்தியார் சுடப்பட்டபோது நான் அவரின் பின்புறம் இருந்தேன். ஆறு அங்குல இடைவெளியில் கோட்சேயின் தோட்டாவிலிருந்து தப்பினேன். காந்தியாரின் படுகொலை கனநேரத்தில் நடந்து முடிந்தது.மக்கள் சொல்கிறார்கள், காந்தியின் கடைசி வார்த்தைகள் "ஹே ராம்! என்பதாக இருந்தது என்று; எனக்கு இது பற்றி தெரியவில்லை. மேலும் நான் எதையும் கேட்டதாகவும் நினைவில் இல்லை. நாங்கள் அதிர்ச்சியிலிருந்ததால் இருக்கலாம். எப்படித்தான் இப்படிப்பட்ட அற்புத மனிதரைக் கொல்ல ஒருவனுக்கு மனம் வந்ததோ? என்று தெரியவில்லை"

I am the only living witness to the incident today. I was just a few inches behind him when he was shot at. The bullet missed me by six inches. His death was instantaneous. People say, he said 'Hey Ram'. I don't know. I don't remember having heard anything. Maybe all of us were shocked. I do not know how somebody could think of shooting a good man like him (http://in.rediff.com/news/2002/aug/15spec.htm)

மேலும் காந்தியை பிடிவாதக்காரராகவும், முஸ்லிம்களுடன் சமரசமாக இருந்தன் மூலம் இந்துக்களுக்கு துரோகம் செய்தவராகவும் சித்தரிக்க மலர் மன்னன் முயன்றுள்ளார் என்பது காந்தியை பற்றி, திரு. வெங்கட்ராமன் கல்யாணம் சொல்லாததையும் தன் இஷ்டப்படி சேர்த்து தன் காவிக்கட்டுரையை வடித்துள்ளார் என்பதற்கு அவரின் கட்டுரையின் சிலவரிகளே சாட்சி:

"முகமதியர் மனம் கவர்வதற்காக காந்தி வரம்பு மீறியே நடந்து கொண்டிருக்கிறார், பல சந்தர்ப்பங்களில்....காந்தியோ பிடிவாதக்கார மனிதர். தம் பேச்சைத் தான் மற்றவர்கள் கேட்கவேண்டுமேயன்றிப் பிறர் சொல்லைத் தாம் கேட்கத் தேவையில்லை என்று இருந்தே பழகிப் போனவர்." - மலர் மன்னன்

ஆனால் திரு.கல்யாணம் அவர்களின் காந்தியைப் பற்றிய மதிப்பீடு, மலர் மன்னனின் கூற்றிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.

"மற்றவர்கள் மிகப்பெரிய தவறே இழைத்திருந்தாலும், காந்தி தன் இயல்பு நிலை தவறியதில்லை" - கல்யாணம்

//தமது வாக்குமூலத்தில் கோட்ஸே விடுதலைப் போரில் காந்தியின் பங்களிப்பைப் பெரிதும் போற்றிப் பேசத் தவறவில்லை. அதற்காக காந்திக்கு அஞ்சலி செலுத்தவும் தயங்கவில்லை. //

காந்தியை சுட்டுக் கொன்றது பற்றி கோட்சேயிடம் கேட்கப்பட்டதற்கு "இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிவதென்பது என் பிணத்தின் மீதுதான் சாத்தியம் என்ற காந்தி, பாகிஸ்தான் பிரிந்த பிறகும் உயிருடன் இருந்தார். அதனால்தான் அவர் ஆசைப்பட்டபடி பிணமாக்கினேன்" என்று திமிராகக் சொன்னதும் பதிவாகியுள்ளது.

"இனியாகிலும் இவ்வாறான மேம்புல் மேய்தல் குறைந்த பட்சம் விவரம் மிக்க வாசகர்கள், வரலாற்றுப் பார்வை உள்ள பதிவாளர்களுக்கேனும் இருக்கலாகாது என்பதாலேயே மிக விரிவாக இதுகுறித்து எழுதினேன்." - மலர் மன்னன்

ஒரு பேச்சுக்கு, காந்தியை மோசமானவர் என்று சித்தரித்தால் கூட அவர் கொள்கையின் மீதான வெருப்பின் பிரதிபலிப்பு என்று சொல்லலாம். ஆனால் கோட்சேயை நல்லவன் என்பதற்கான அர்த்தம் நிச்சயம் வரலாறு அறிந்தவர்களால் உணர முடியும்.

இந்தியாவின் சுதந்திரப் போரரட்ட வரலாற்றை நினைவு கூறக் காரணமாக இருந்த திரு.டோண்டு ராகவன் அவர்களுக்கும் வரலாற்றுக் குறிப்புகள் தந்துதவிய நண்பர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

Saturday, January 21, 2006

வாழும் கோட்சேக்கள்

//மலையாளம் தவிர வேறு மொழியெதுவும் தெரியாத முகமதியரான மாப்பிள்ளமார்கள்// - மலர் மன்னன்

மாப்பிள்ளமார் என்று அறியப்படும் கேரள மலபாரி முஸ்லிம்கள் எகிப்துடனும், ரஷ்யாவுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். தொலை தூரதேசங்களுடன் வணிக உறவு கொண்டிருந்த மாப்பிள்ளமார்கள், மலையாளம் மட்டுமே அறிந்திருந்தார்கள் என்பது மலர் மன்னனின் அறியாமையா? அல்லது வரலாற்றைத் திரிக்கும் அவசரத்தில் தன்னையும் அறியாமல் அவ்வாறு குறிப்பிட்டாரா? என்று தெரியவில்லை.

அரேபியர்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பால் இஸ்லாத்தில் இணைந்த மலபாரிகளுடானான அரேபியர் உறவு ரோம சாம்ராஜியத்தின் எழுச்சிக்கும் முன்பிருந்தே உள்ள உறவாகும். ஆகையால் மாப்பிள்ளமார்களின் வரலாறு அரேபியர்களின் இந்திய வருகைக்கு முந்தையது.

இதை கேரள கடற்கரை வழியாக சீனாவுக்குச் சென்ற அரபிய வணிகர்களுக்கும் சாவுல், கல்யான் சுபரா ஆகியோருக்கான செட்டில்மெண்ட் பத்திரங்கள் பம்பாய் மாகாண பூகோல ஆவணங்களின் மூலம் தெளிவாகிறது. (Sayed Mohideen Shah, Islam in Kerala. The Muslim Educational Association, Trichur, 1975.p.2)

மேலும் கி.மு. 378 இல் பரயில் பெட்ட பன்னிறு குலத்தில் வாழ்ந்த உப்புக் குட்டன் மாப்பிள்ளயின் வரலாற்றிலும், (Ulloor S. Parameswara Ayyer, Kerala Sahitya Charitram, Trivandrum 1957. Vol. 1. Pp 80-81) மற்றொரு சரித்திரமான ஊவாயி கதையில் கோழிக்கோட்டின் பெண் தெய்வம், ஜனக மாப்பிள்ளயின் பக்தியை மெச்சி தரிசனம் தந்ததாகவும் சொல்லப்படுகிறது. (P.K. Mohammad Kunhi, Muslimingalum Kerala Samskaravum Kerala Sahitya Academy, Trichur, 1982.p.22.)

வரலாற்றாசிரியர் ஃபிரான்சிஸ் டே (5. Francis Day, The Land of the Perumals, Gantz Bros., Madras, 1863,p. 365) மேற்குக் கடற்கரைக்கு வந்த முஸ்லிம்களுக்கும் அரபிய வர்த்தகர்களுக்கும் இடையிலான உறவு கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

//இப்படி வந்த அராபிய வியாபாரிகள், அதிக காலம் பெண் வாசனை இல்லாமல் இருக்க மாட்டாமல் உள்ளூர் ஹிந்து மலையாளப் பெண்களுடன் சம்பந்தம் வைத்துக் கொண்டார்கள். //

இந்தியாவில் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இருந்த இந்துக்கள் தங்களுக்கு சமூக அந்தஸ்தைக் கொடுக்கும் அந்நியக் கொள்கையை ஆரத்தழுவிக் கொண்டதை எந்த ஆரியரால்தான் சகிக்க முடியும்?
மலபார் பிரதேசங்களில் கடந்த 19 ஆம் நூற்றாண்டுவரை ஜாதிய ஆதிக்கம் கொழுந்துவிட்டு எரிந்ததால்தானே "மடையர்களின் வீடு" என்று சுவாமி விவேகானந்தர் விளித்தார்.

"Is there anywhere in the world a folly which I have witnessed in Malabar? A poor Paraya cannot walk through the streets where the caste Hindus walk.... The people of Malabar are mad and their houses are mad houses. What judgement will you reach, other than that the different races of India will treat them with abhorrence and aversion until they reformed themselves and enriched their knowledge. Those people who observe such satanic and obnoxious customs are shameless" (Sahitya Sarvaswam, Vol, III, pp. 186-187; Bhaskaranunni, Pathompatham Nuttandile Keralam, Kerala Sahitya Academy, Trichur, 1988.p. 159)

உயர் ஜாதி நம்பூதிரியின் அருகில் நாயர் ஆறு காலடி தூரமும், அம்பட்டன் பதினாறு காலடித் தூரமும், திய்யன் முப்பதாறு காலடிதூரமும், புலையன் தொன்னூற்றாறு காலடிதூரமும் விலகி இருக்க வேண்டும் என்ற வேத கோட்பாடுகளிலிருந்து விலகித்தானே ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த அரேபியர் மதம் ஏற்றனர்.

இந்த அவலநிலையை மதத்தின் பெயரால் ஆண்டாண்டுகாலமாக அரங்கேற்றி வருபவர்கள் எந்தக் கரையில் ஒதுங்கிய அந்நியர்கள் என்று விளக்குவாரா மலர் மன்னன்?

//இப்படியாகக் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான முகமதியரின் கலவரத்தைத் தொடங்கிவைத்த புண்ணியம் காந்தியையே சாரும். //

சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம்களுக்கு எதிரான சமீப குஜராத் இனச் சுத்திகரிப்புவரை செய்து கொண்டிருக்கும் வாழ்க்கை நெறியான இந்துத்துவாவை பேணும் புன்னியத்தை தொடங்கிவைத்தவர்கள் கோல்வார்க்கரும், சாவர்க்கரும் அல்லவா?

//நேருவிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் இனி ஆள்வதற்கு வழி பார்ப்போம் என்று பிரிவினைக்கு ஒப்புதல் தந்துவிட்டார்கள்//

எனில் கோட்சேயின் குறியிலிருந்து இவர்களை தடுத்தது எது?

//இந்நிலையில் ஹிந்துக்களுக்கு நிச்சயமாக நேரவிருந்த அசம்பாவிததைத் தவிர்க்க நாதுராம் வினாயக கோட்ஸேவுக்கு ஒரு வழிதான் தெரிந்தது. அந்த வழியை அவர் மேற்கொண்டார்....இது கூட்டுச் சதியல்ல; ஒத்த சிந்தனையுள்ளவர்களின் ஒருங்கிணைப்பேயாகும்//

பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸை எரித்துக் கொன்ற சங்பரிவார குண்டர்களையும், கன்னியாஸ்திரிகளைக் கற்பழித்த பரிவாரங்களையும் "உணர்ச்சி வசப்பட்ட தேசபக்தர்கள்" என்றதற்கும் இதற்கும் அதிகம் வித்தியாசமில்லை. என்பதை தவிர சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

கட்டுரையாளர் மலர் மன்னன் காந்தியை இந்துக்களின் விரோதியாகவும், அவரைக் கொன்ற பாதகனின் நியாயங்களின் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, காந்தியைச் சுட்டுக் கொன்றதை நியாயப் படுத்தவில்லை என்று சொல்வதும், கோட்சேக்கு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பு இருக்கவில்லை. இது தனி நபர் சதிதான் என்பதும் யாரை ஏமாற்ற?

(அருகில்லுள்ள புகைப்படத்தில் சாவர்க்கருடன் இருக்கும் கோட்சே)

காந்தியாரை பாதகர்கள் சுமார் ஐந்து முறை கொல்ல முயன்றனர். அதில் சில முறை விடிகுண்டு வீசியும் கொல்ல முயன்ற நாம் வாழும் நூற்றாண்டுகளில் நடந்த வரலாற்று உண்மையை மறைத்து சாதாரண துப்பாக்கியால், காந்தி என்ற தனிநபரை மட்டுமே குறிவைத்து சுட்டான் என்று சொல்லி, கோட்சேயின் மனிதாபிமானத்தை மெச்சிக் கொள்ளும் இவர்கள் வாழும் கோட்சே என்றால் மிகையில்லை.

Thursday, January 19, 2006

பட்டை வெள்ளோட்டம்

test

கோட்சேயும் சில (அ)நியாயங்களும்

திரு.டோண்டு ராகவன் அவர்கள் "காந்தியும், கோட்சேயும்" என்ற தலைப்பில் திரு.மலர் மன்னன் என்ற காவிச் சிந்தனையாளரின் கட்டுரையை மறுபதிவு செய்திருந்தார்கள்.

கட்டுரையின் சாராம்சம் நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியை படுகொலை செய்ததற்கு, காந்தியாரின் முஸ்லிம்களின் மீதான பரிவே காரணம் என்று சொல்லி இருந்ததோடு கோட்சேக்கு எவ்வித இயக்கப் பின்னனியும் இல்லை என்றும், காந்தியாரை சுட்டுக் கொல்லும்போது மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்றும் இன்னும் சில விநோதமான காரணங்களையும் சொல்லி கட்டுரை வடித்திருந்தார்.

மூன்று மாநிலங்களின் போலீசுடன் கடந்த இருபது வருடங்களாக திருடன்- போலீஸ் விளையாட்டு விளையாடிய சந்தனக் கொள்ளையன் வீரப்பனுக்கும், அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்ட உசாமா பின்லாதினுக்கும் அவர்கள் சார்ந்த சமூகத்தில் சில அனுதாபிகள் இருக்கும் போது, நாதுராம் கோட்சேயின் சமூகம் மட்டும் விதிவிலக்கா என்ன?

கட்டுரையாளரும் அதனை மறுபதிவு செய்த திரு.டோண்டு ராகவன் அவர்களும் கோட்சேயின் செயலை நியாயப்படுத்தி இருந்தால், அவர்களின் இனப்பாசத்தால் செய்கிறார்கள் என்று சமாதானமடையலாம்.

இந்தியாவின் சுதந்திரப் போரில் முக்கிய பங்கு வகித்த, ஆங்கிலேயருக்கு எதிராக போராட வேண்டும் என்ற உந்துதால் அவர்களின் ஆங்கிலம் கற்பதை ஹராம் (தடுக்கப்பட்டது) என்ற பத்வா வழங்கி இன்றும் ஒரு சில இடஒதுக்கீடுகளுக்காக வீதியில் போராடிக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களையும், இனிமேல் சுதந்திரப்போராட்டங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று அடிமை சாசணம் எழுதிக் கொடுத்ததோடு, சுதந்திரப் போராளிகளைக் காட்டிக் கொடுக்கவும் துணிந்த சாவர்க்கர், வாஜ்பாய் வகையறாவைச் சார்ந்த திரு.மலர் மன்னனுக்கு இந்திய முஸ்லிம்களையோ அல்லது கேரள மாப்பிள்ளைமார் சமூகத்தையோ விமர்சிக்க அருகதை இல்லை.

காந்தியாரை படுகொலை செய்த படுபாதகனுக்கு பரிவு காட்டுவதோடு நில்லாமல் அவன் (கோட்சே) RSS அல்லது அதன் முன்னோடி இயக்கங்களான இந்து மகாசபை, ஜனசங்கம் ஆகியவற்றில் தொடர்பில்லை என்ற முழு பூசணியை கட்டுச் சோற்றில் மறைக்கும் வரலாற்று புரட்டுச் செய்துள்ளனர்.

மொஹலாயர்களும் ஆரியர்களும் இந்தியாவிற்கு வந்த அந்நிய மனிதர்கள் என்ற வரலாற்றுச் செய்தியைக் கூட "மொஹலாயர் படையெடுப்பு" என்றும் "ஆரியர் வருகை" என்றும் ஒரே நிகழ்வுக்கு இருவேறு பதங்களை உபயோகித்து வரலாற்றை எழுதும் நடுநிலையாளர்கள்! அல்லவா இவர்கள்?

1993 இல் நாதுராம் கோட்சேயின் "Why I Assassinated Mahatma Gandhi" என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய கோபால் கோட்சேயிடம் FRONTLINE பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில்

"All the [Godse] brothers were in the RSS. Nathuram, Dattatreya, myself and
Govind. You can say we grew up in the RSS rather than in our home. It was like a
family to us. Nathuram had become a baudhik karyavah [intellectual worker] in
the RSS. He has said in his statement that he left the RSS. He said it because
[Madhav Sadashiv] Golwalkar and the RSS were in a lot of trouble after the
murder of Gandhi. But he did not leave the RSS.”
[See issue of 28 January 1994] என்றார். "

கோட்சே சகோதரர்களாகிய நாங்கள் நாதுராம், தத்தரேயா, நான் மற்றும் கோவிந்த் ஆகியோர் RSS இல் இருந்தோம்; அது (RSS) எங்களுக்கு குடும்பம் மாதிரி இருந்தது. நாதுராம் பவுதிக் கார்யவாஹ் (சிந்தனையாளர்) ஆக இருந்தார். கோட்சேயின் வாக்குமூலத்தில் RSS ஐ விட்டு விலகியதாகச் சொன்னது மாதப் சதாசிவ ல்வார்க்கரும் மற்ற கொலையாளிகளும் கடும் நெருக்கடியில் இருந்ததால்தான்; ஆனால் கடைசிவரை RSS இல்தான் இருந்தார்" (பார்க்க ஃப்ரண்ட் லைன் 28-01-1994).

மேலும் காந்தியாரை கோட்சே சுட்ட போது ஆர்.எஸ்.எஸ்ஸில் இல்லை; இந்து மகா சபையில்தான் உறுப்பினராக இருந்தார்" என்று ஒன்றைக் கிளப்பி ஆர்.எஸ்.எஸ்ஐக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.

அப்படியே பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் வேறு அல்ல - இந்து மகா சபையும் வேறு அல்ல! பஜ்ரங்தள் வேறு; விசுவ ஹிந்து பரிஷத் வேறு என்று சொல் அளவில் சொல்லலாமே தவிர, உண்மையில் இவை இரண்டும் சங்பரிவார் என்கிற தலைப்புக்குள் வரவில்லையா? 1930-களில் இந்து மகா சபையுடன் ஆர்.எஸ்.எஸ் உறவுகள் சுமூகமாக இல்லை. ஆனால் சில ஆண்டுகளில் பரஸ்பரம் பலன் அளிக்கிற முறையில் மாறின. மகாசபையின் இளைஞர் அணியாக தாருன் இந்து சபாவை நிறுவிய பாபுராவ் சவார்க்கர் 1931-ஆம் ஆண்டில் அந்த ஸ்தாபனத்தை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைத்தார்.

திரு.டோண்டு அவர்களின் நியாயங்களும் கண்ணோட்டங்களும் விசித்திரமாக உள்ளன. அதாவது காந்தியை சுட்டவன் RSS ஐச் சார்ந்தவனாக இருந்திருப்பின் பள்ளி பாடப்புத்தகங்களில் அப்படி சொல்லப்படவில்லையே? என்று அப்பாவித்தனமாக கேட்டிருந்தார்.

தமிழக அரசு இந்தக் கல்வியாண்டில் பிளஸ் டூ வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் "சுதந்திரத்துக்குப் பின் இந்தியா" என்ற தலைப்பில் பாடம் ஒன்றை சேர்த்துள்ளது. 157வது பக்கத்தில் உள்ள இந்தப் பாடத்தில் காந்தியைக் கொன்றவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதையும் இதனை தமிழக ஆர்எஸ்எஸ் தலைவர் மாரிமுத்து மறுத்து வழக்கு தாக்கல் செய்துள்ளதையும் திரு.டோண்டு அவர்கள் அறியவில்லையா?

பாதகன் கோட்சே காந்தியின் சுதந்திரபோராட்ட பங்களிப்பை போற்றத் தவறவில்லை என்றும் காந்தியார் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தான் என்றும் சொல்லும் இவர்கள், காந்தியார் ஓர் அரக்கன் என்றும், அவரைக் கொன்ற கோட்சே கடவுள் என்றும் விளம்பரப்படுத்தும் நாடகத்தை (மை நாதுராம் கோட்சே போல்தே!) சில ஆண்டுகளுக்கு முன்புவரை டில்லியிலும் மும்பை யிலும் நடத்திடக் கூச்சப்படாதவர்கள் எதற்காக கோட்சேயை ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லன் என்று சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

மேலும் கோட்சே காந்தியைக் கொல்வதில் மட்டுமே குறியாக இருந்தான், அருகில் இருந்தவர்களைக் கொல்லவில்லை" என்ற வாதம், எப்படி கோட்சேயின் செயலை நியாயப்படுத்தும் என்று தெரியவில்லை. மேலும் கோட்சேயின் பேட்டியில்

"We did not want this man (Gandhi) to live. We did not want this man to die a natural death, even if 10 lives were to be lost for that purpose"

அதாவது இந்த மனிதரை (காந்தியை) நாங்கள் வெருக்கிறோம். இவருக்கு இயற்கை மரணம் சம்பவிப்பதை நாங்கள் விரும்பவில்லை. இதற்காக பத்து உயிர்கள் பலியானாலும் கவலை இல்லை" என்றதையும் வசதியாக மறந்து விட்டனர்.

திரு.டோண்டு அவர்களின் எழுத்தில் அவ்வப்போது சர்ச்சைகள் இடம் பெறுவதும் அதனை பூசி மெழுகுவதும் அடிக்கடி நிகழ்வதுதான் என்ற போதிலும் உலகமே மகாத்மா என்று அறிந்து இந்தியாவிற்கு அஹிம்சா முத்திரையை பரப்பிய அண்ணல் காந்தியவர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் பதிவை தன் பதிவில் பதித்தன் நோக்கத்தையும் அவரின் பதிவில் சுட்டியுள்ளேன்.

காந்தி கொல்லப்பட்ட தருவாயில் "ஹே ராம்!" என்று சொன்னாரா? என்பது பற்றியும் கேரள மாப்பிள்ளமார் சமூகத்தின் வரலாற்றையும், இந்திய முஸ்லிம்களின் சுதந்திரப் போரில் பங்களிப்பையும் பிறகு பார்ப்போம்.

Monday, January 09, 2006

1416 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்...

உலகின் தலை எழுத்தை மாற்றி அமைத்த இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கை முஹம்மது நபி (சல்..) அவர்களால் நிறைவு செய்யப் பட்ட நாள்தான் அரஃபா தினம் என்ற துல்ஹஜ் பிறை 9 ஆகும்.

சரியாக 1416 ஆண்டுகளுக்கு முன் (ஹிஜ்ரி 10) இல் உரானா பள்ளத் தாக்கிலிருக்கும் அரஃபா மைதானத்தில் முஹம்மது நபி (சல்...) அவர்கள் தனது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்கள்.

இந்த இறுதிப்பேருரை "குத்பதுல் வதா" என்றும் அறியப்படுகிறது. இப்பேருரை முக்கிய நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெறுகிறது. ஸஹீஹ் புகாரியில் ஹதீஸ்கள் 1623, 1624,6361 ஆகியவற்றிலும், முஸ்லிம் ஹதீது தொகுப்பில் 98 லும், திர்மிதி தொகுப்பில் 1628, 2046, 2085 இலும் பதியப்பட்டுள்ளது. இமாம் அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்...) அவர்கள் இப்பேருரையின் முழு செய்தியையும் முஸ்நத் என்ற தொகுப்பில் பதிந்துள்ளார்கள். பார்க்க ஹதீஸ் எண் 19774.

வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சமத்துவ முழக்கம் இதோ:



O People!

Lend me an attentive ear, for I know not whether after this year, I shall ever be amongst you again. Therefor listen to what I am saying to you very carefully and take these words to those who could not be present here today.

O People!

Just as you regard this month, this day, this city as sacred, so regard the life and property of every Muslim as a sacred trust. Return the goods entrusted to you to their rightful owners. Hurt no one so that no one may hurt you. Remember that you will indeed meet your Lord, and that He will indeed reckon your deeds. Allah has forbidden you to take usury (interest); therefore all interest obligation shall henceforth be waived. Your capital, however, is yours to keep. You will neither inflict nor suffer any inequity.

Allah has Judged that there shall be no interest and that all interest due to Abbas Ibn ‘Abd al Muttalib (the Prophet's uncle) shall henceforth be waived.

Beware of Satan for the safety of your religion. He has lost all hope that he will ever be able to lead you astray in big things, so beware of following him in small things.

O People! It is true that you have certain rights in regard to your women, but they also have rights over you. Remember that you have taken them as your wives, only under Allah's trust and with His permission. If they abide by your right then to them belongs the right to be fed and clothed in kindness. Do treat you women well and be kind to them, for they are your partners and committed helpers. And it is your right that they do not make friends with anyone of whom you do not approve, as well as never to be unchaste.

O People! Listen to me in earnest, worship Allah, say your five daily prayers (Salah), fast during the month of Ramadan, and give your wealth in Zakat.

Perform Hajj if you can afford to.

All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over a black, nor a black has any superiority over a white- except by piety and good action. Learn that every Muslim is a brother to every Muslim and that the Muslims constitute one brotherhood. Nothing shall be legitimate to a Muslim, which belongs to a fellow Muslim unless it was given freely and willingly. Do not therefor, do injustice to yourselves.

Remember one day you will appear before Allah and answer for your deeds. So beware, do not stray from the path of righteousness after I am gone. People, no prophet or apostle will come after me and no new faith will be born. Reason well therefore, O people, and understand words which I convey to you. I leave behind me two things, the Quran and the Sunnah (Hadith), and if you follow these you will never go astray. All those who listen to me shall pass on my words to others and those to others again; and may the last ones understand my words better than those who listened to me directly. Be my witness, O Allah, that I have conveyed your message to your people."

Sunday, January 08, 2006

"திடீர்" மனிதாபிமானிகள்

சவூதியில் பெட்ரோல் பங்கில் பணி செய்து வந்த இந்திய இளைஞருக்கும், உள்ளூர் அரபி இளைஞருக்கும் ஏற்பட்ட தகறாரில் அரபி இளைஞரின் கண்ணில் தாக்கப்பட்டு பார்வை பறிபோய் விட்டது. பாதிக்கப்பட்டவர் சவூதி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு சவூதி-தமாம் கோர்ட்டில் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்று தற்போது வெளிவந்துள்ள தீர்ப்பில், சவூதி இளைஞரின் பார்வையிழப்புக்குக் காரணமான அந்த இந்தியரின் ஒரு கண்ணை பழிக்கு பழியாக நீக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சவூதி இளைஞரின் கோரிக்கையை ஏற்று சவூதி கோர்ட்டும் அவ்வாறு செய்ய உத்தரவிட்டுள்ளது.

சவூதி அரசாங்கம் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தைச் செயல் படுத்துவதால், இச்சட்டப்படி உயிருக்கு-உயிரும்,பல்லுக்கு-பல்லும்,கண்ணுக்கு-கண்ணும் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர் நீதி பெறவோ அல்லது இழப்பீடு பெற்றோ பெறாமலோ மன்னிக்கவும் சட்டத்தில் வழியுண்டு.

அதாவது பாதிக்கப்பட்டவரின் முடிவே இறுதியானது. நிலமை இவ்வாறிருக்க இஸ்லாத்தைக் கரித்துக் கொட்ட காத்திருக்கும் எதிர்ப்பாளர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு வழக்கம் போல இஸ்லாமிய ஷரீஅத் தண்டணைச்சட்டங்கள் கொடூரமானவை காட்டுமிராண்டித்தனமானவை என்ற கூக்குரல்கள் எழுப்பி வருகின்றனர்.

இதில் உள்ள சாதக பாதக அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து அதில் பொதிந்துள்ள தீர்வுகளையும், நியாயங்களையும் நடுநிலையாக விமர்சிக்க முன்வர வேண்டும். ஆனால் நம் திடீர் மனிதாபிமானிகளுக்கு அவற்றிலெல்லாம் அக்கரை இல்லை.

நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி அநியாயமாகத் தண்டிக்கப்படக் கூடாது என்பது நம் நாட்டுச் சட்டங்களின் நோக்கம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை என்பது இதன் மூலம் விளங்குகிறது. இதுதான் சர்வ தேசங்களிலும் கடைபிடிக்கப்படும் சட்ட நெறிமுறை.

பாதிக்கப்பட்டவனுக்கு தகுந்த நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் இஸ்லாம் உறுதியாக இருக்கிறது. அந்த நியாயம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும், எப்படி வழங்கப் படவேண்டும் என்பதிலும் தெளிவாக வரையறுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் தானே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு குற்றவாளியை தண்டிக்க முடியாது என்பதும் எந்த அளவுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டாரோ அதே அளவுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தியவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மனிதாபிமான அணுகு முறையாகவே இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுள்ளன.

ஒருவர் அநியாயமாக பாதிக்கப்படும் குற்றவழக்குகளுக்கு மட்டுமே பாதிக்கப்பட்டவர் மேற்கண்டவாறு பழிதீர்த்து நியாயம் பெற முடியும். விபத்து அல்லது உள்நோக்கமற்றக் காரணங்களால் ஒருவருக்கு இத்தகைய இழப்பு ஏற்பட்டால் இதர நாட்டு சட்டங்களே பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகின்றன.

5:45 அவர்களுக்கு நாம் அதில், ‘உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்’ எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!

16:126 (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

இங்கு கவனிக்கப்பட்ட வேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால் பாதிப்பை ஏற்படுத்தியவரை சட்டரீதியாக தண்டிப்பதற்கோ அல்லது மன்னிப்பதோ பாதிக்கப்பட்டவரே முடிவு செய்ய வேண்டும். அவர் விரும்பினால் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண், உயிருக்கு உயிர் என்ற ரீதியில் நியாயம் பெறலாம் அல்லது மன்னித்து விடலாம்.

"ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்" என்ற குர்ஆன் வசனத்தின் படி பாதிக்கப்பட்டாவர் எதிரியை மன்னித்து விட்டால் அவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் இறைவனிடத்தில் மன்னிக்கப்பட்டு பாவமற்றவராக கருதப்படுகிறார்.

சிலவருடங்களுக்கு முன் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் தண்டனை நிறைவேற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன் மன்னித்த நெகிழ்ச்சியான நிகழ்வும் சவூதியில்தான் நடந்தது. மேற்குறிப்பிட்ட வழக்கின் முக்கிய அம்சங்களாக கீழ்காண்பவற்றைச் சொல்லலாம்:

பாதிக்கப்பட்டவர் விருப்பத்தின் பேரில் மட்டுமே இழப்பிற்கு ஏற்ப பிரதிவாதிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீட்டுத் தொகையாக சுமார் 100,000 சவூதி ரியால்கள் வழங்க முன்வந்த போதிலும், அதனை ஏற்க மறுத்து விட்டார்.

சவூதி அரேபியாவில் இவ்வாண்டு கண் பறிக்கும் ஆக்கினை வழங்கப்பட்ட மூன்றாமவரிவர். 2003 ஆம் ஆண்டு முதல் இவர் சிறையில் உள்ளார். கண்பறிக்கப் பட இவரது ஒப்புதல் வேண்டும். இவரது ஒப்புதல் இல்லையெனில் கண்பறிக்கப் பட மாட்டாது; மாறாக இவரது சிறையிருப்புத் தொடரும்-. சிறையில்இருப்பார்.

இவரிடமிருந்து பறிக்கப் பட்ட கண் இவரால் கண்ணிழந்தவருக்கே பொருத்தப்படும். கண்ணிழந்தவர் இவரை மன்னித்தால் அல்லது இழப்பீடு பெற்றுக்கொண்டால் இவர் சிறை மீள்வார் - விடுதலையாவார். இது தான் சட்டம். ஆனால் சவூதிக் குடிமகன் இவரை மன்னிக்கவோ இழப்பீடு பெறவோ ஒப்பவில்லை.

கண் பறிக்கும் ஆக்கினை குர்ஆனின் அடிப்படையிலானது என்பதாலேயே ஊடகங்களின் கூப்பாடு-ஊடகங்கள் பேரளவிலும் யூத / பார்ப்பனக் கட்டுப் பாட்டிலிருப்பதால் இந்நிலை. ஒவ்வொரு நாட்டிலும் குற்றவியல் சட்டங்களும் குற்றங்களுக்கான ஆக்கினைகளுமுள்ளன. அதில் பிறர் கருத்துக் கூறவோ குறை கூறவோ உரிமை இல்லை.

கண்ணை விட உயர்வானது உயிர். கொலையாளியின் உயிரைப் பறிக்கும் ஆக்கினைவழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு உயிர் பறிக்கும் ஆக்கினைவழங்கப் பட்டால் அதை யாரும் குறை கூறுவதில்லை சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தினால் உயிர் பறிப்பர். இது அந்நாட்டுச் சட்டம். ஸவூதி அரேபியா இஸ்லாமிய அடிப்படையிலான ஆக்கினை வழங்கியதாலேயே இந்தக் கூப்பாடும் ஒப்பாரியும்.- hue and cry யும்.

மேற்கண்ட தண்டனையை செயல்படுத்துவதன் மூலம் கண்ணை இழந்த சவூதி இளைஞர் மீண்டும் பார்வையைப் பெறப்போவதில்லை. வழங்கப்படும் இழப்பீட்டை விட எதிரியை பழி வாங்கினால் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்புகிறார். பாதிப்பிற்குள்ளானவரின் பாதிப்பிற்கே இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவனின் இழப்பை மனிதாபிமான அளவீடு கொண்டு நியாயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை.

சவூதியில் இத்தீர்ப்பு செயல்படுத்தப் படுவதால் அதற்கு இஸ்லாமிய துவேச சாயம் பூசப்பட்டு நியாயமான ஒரு தீர்ப்பு கொச்சைப் படுத்தப் படுகிறது. இதில் இவர்களின் மனிதாபிமானத்தை விட இஸ்லாமிய எதிர்ப்பே மேலோங்கியுள்ளது.

குற்றவாளி தான் பாதிக்கப்பட்ட அளவுக்கு தண்டிக்கபடவேண்டும் என்ற சவூதி இளைஞரின் கோரிக்கையை தடுக்காத அப்பாதிப்பில் சம்பந்தமில்லாத சவூதி மன்னர் இந்தியா வருவதை எதிர்க்க வேண்டுமாம். சவூதியை காட்டுமிராண்டிகள் நாடு என்று அறிவிக்க வேண்டுமாம். அவ்வாறு செய்யாவிட்டால் இந்திய ஜனாதிபதி. அப்துல் கலாம் அவர்களையும் சாடுவார்களாம்!?.

பார்ப்பனர் அல்லாத இந்திய ஜனாதிபதிகளின் பதவிக் காலம் முடியும் தருவாயில் இதுபோன்ற வசை பாடல்கள் சகஜம் என்பதும், மோடி போன்ற மனிதாபிமான!முதல்வர்கள் இன்றும் முதல்வராக இருந்து கொண்டிருப்பதும் தனிக்கதை.

குற்றம் செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரனையிலிருக்கும் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களால் வெட்டிக் கொல்லப்படுவதும், நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்படுவதையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஏனென்றால் நம் நாட்டு சட்டங்களிலுள்ள ஓட்டைகளில் புகுந்து குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் என்று பாதிக்கப்பட்டவர் நம்புவதால்தான் இத்தகைய பழிவாங்கலில் ஈடுபடுகிறார்கள் என்பது நியாயமாகச் சிந்தித்தால் உணர முடியும்.

மேலும் பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் உயிருக்கு உயிர் என்பது குர் ஆனில் மட்டும் சொல்லப்படவில்லை. தன் மணைவியை கவர்ந்து சென்ற இராவனன் கொல்லப்பட்டது இராமயன நீதி. கிறிஸ்தவர்களின் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் உள்ள சட்டமே.

உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்பட வேண்டும். (உபாகமம் - Deuteronomy 19:21)

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் (யாத்திரயாகமம் - Exodus 21:24)

இயேசு கிறிஸ்துவுக்கு பின்வந்த அவரின் சீடர்களால் இக்கட்டளை பிறகு மாற்றப்பட்டது. அதாவது (மாத்தேயு 5:38-39) இல்

கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு என மாற்றப்பட்டது.

இன்று உலகின் அதிகமான மக்களால் பின்பற்றப்படும் மதமான கிறிஸ்தவர்களின் புனித நூலாக பைபிளின் புதிய ஏற்பாடு முன்னிருத்தப் பட்டுள்ளது. எனில் எல்லோருமே அன்புக்கு அடிமையாகி வலது கன்னத்தில் அடித்தவனுக்கு இடது கன்னத்தைக் காட்டுகிறார்களா? என்றால் இல்லை என்றே சொல்லமுடியும்.

கிறிஸ்தவரான ஜார்ஜ் புஷ்ஷும் டோனி பிளேயரும் சதாம் உஷேனுக்கும் பின்லாடனுக்கும் ஏன் கன்னத்தைக் காட்டாமல் படையெடுத்துச் சென்று அவர்களின் நாட்டை சின்னா பின்னமாக்கினார்கள்?

சரி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" மற்றும் "அன்பே சிவம்" என்று சொல்லிக் கொண்டுதான