Sunday, June 18, 2006

தட்டுங்கள் திறக்கப்படும்

முன்பொரு முறை இஸ்லாத்தைப் பற்றி அவதூறாக எழுதிக் கொண்டிருந்த ஒரு பதிவின் பின்னூட்டத்தில், இஸ்லாம் பற்றி உண்மையில் அறியும் ஆர்வம் இருந்தால் முஸ்லிம்களிடமோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட இணைய தளங்களிலோ கேட்கலாமே? என்று தருமியிடம் நான் சொன்னதற்கு, ‘அந்தந்த மதத்தவரின் விளக்கங்கள் சப்பைக் கட்டாக இருக்கும்; ஆகவே அவற்றிற்கு எதிரானவர்களிடம் விளக்கம் பெறுவதே சரியானது!’ என்றார் தருமி.

அதாவது, தருமியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அவரை நன்கு அறிந்தவர்களிடம் கேட்பதைவிட அவருக்கு எதிரானவர்களிடம் கேட்பதே சரியாக இருக்கும் என்பதுபோல்தான் இருக்கிறது.

ஒன்றைக் குறை சொல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தபின் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது மேற்கத்திய நியாயம்! அதேபாணியில் திரு. சாம் ஜார்ஜ் (தருமி ) அவர்களுக்கு இஸ்லாத்தின்பால் ஈடுபாடின்மைக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி ஆய்ந்த வகையில் குர்ஆனின் வெளிப்பாடு, முஹம்மது நபியின் கல்வியின்மை மற்றும் சில போர்களில் தோற்றதையும் காரணங்களாகச் சொன்னார். அவரின் அடுத்தடுத்த வாதங்களைப் பார்ப்போம்.

4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை
ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்; பெண்ணுக்கோ 9. (இல்லை, 15 என்ற கருத்தும் உண்டு). - தருமி

ஆயிஷாவின் வயது பற்றிய விவாதம், அவரை முஹம்மது நபிக்கு ஆறு வயதில் நிச்சயிக்கப்பட்ட போதும் ஒன்பது வயதில் திருமணம் செய்விக்கப்பட்ட போதும் விமரிசிக்கப் படத்தக்கதாக இருந்திருக்க வில்லை. ஏனென்றால் அன்றைய திருமணங்களில் இவை குற்றமாக இருந்திருக்க வில்லை. இருந்திருப்பின், ஏகத்துவத்தின்பால் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கொள்கையாளரை சிறுமைப் படுத்த அவருடைய எதிரிகளுக்கு அதை விட அருமையான வாய்ப்பு கிட்டி இருக்காது.

ஒன்பது வயதில் ஒரு பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவள் என எந்த அளவுகோலை வைத்துச் சொல்கிறீர்கள்? இஸ்லாத்தின் மீதான உங்கள் வெறுப்புக்கு இந்த திருமணம்தான் காரணமா?

Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . - தருமி

இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?

ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க , பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன ..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்! - தருமி

பனூ முஸ்தலிக் போரில் முஸ்லிம்கள் வென்றதும் போர்த்தலைவனும் மகளும் அடிமைகளுடன் சிறை பிடிக்கப்படுகிறார்கள். அதில் பிணையாக பிடிக்கப்பட்ட ஜுவேரியாவின் கணவர் ஸஃப்வான் போரிலேயே கொல்லப்பட்டு விட்டார். விதவையான ஜுவைரியா அன்றைய போர் வழக்கப்படி ஸாபித் இப்னு கைஸ் என்ற சக போர் வீரருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட பங்கில் சென்றார்.

பனூ முஸ்தலிக் என்ற உயர்குடியில் பிறந்ததாலும் தலைவரின் மகள் என்பதாலும் ஸாபித் இப்னு கைஸிடமிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜுவைரியா வேண்டியதால் ஏழு ஊகியா கொடுத்து விடுவிக்கப்பட்டு நபிகள் திருமணம் செய்தார்கள் - அன்னை ஜுவைரியா அவர்களின் முழுச் சம்மதத்தோடு. இப்போரின் வெற்றிக்குப்பின் பனூ முஸ்தலிக் குலம் நபியுடன் திருமண உறவு வைத்துவிட்டபடியால் பிடித்து வைத்திருந்த அத்தனை பனூ முஸ்தலீக் அடிமைகளும் விடுவிக்கப்பட்டனர். அடிமையான பெண் தானாக முன்வந்து தன்னை விடுவிக்கக் கோரியதையும், அடிமைகள் விடுவிக்கப் பட்டதையும், இதன் மூலம் ஜென்மப் பகையாளிகளாக இருந்த இரு இனங்கள் ஒன்றுபட்டதையும் "பேரம்" என்கிறீர்களா?

*முஹம்மது நபி பெண் மோகம் கொண்டவராக இருந்திருப்பின் முதலிலேயே ஜுவைரியாவை தனக்குரியவராக்கிக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லை. ஆனால் அவ்வாறு செய்யாமல் ஸாபித் இப்னு கைஸ் என்ற சக வீரருக்கு கொடுக்கப்பட்டது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறதா?

*இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஆரம்பகாலப் போர்களில் கொல்லப்பட்டதால் அவர்களின் மனைவி-மக்களுக்கு ஆதரவாக பலதாரமணம் செய்தது

*வளர்ப்பு மகன் சொந்த மகனாக மாட்டான் என்ற யதார்த்த நிலையை மக்களுக்குப் புரிய வைத்துப் பழைய மூடப்பழக்கத்தை மாற்றியது

*முஹம்மது நபியின் திருமண பந்தம் மூலம் பல்லாண்டுகால இனப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.

*மற்றும் யூத, கிறிஸ்தவ தலைவர்களுடன் நட்புறவை வளர்த்து
ஆகியவற்றில் இருக்கும் நியாயம் உங்களுக்குத் தெரியவில்லையா ? மேலே சொன்னவை நியாயமான காரணங்கள்தாம், எனினும் தன் தோழர்களுக்கு மணம் செய்யச் சொல்லி இருக்கலாமே? என்று பகுத்தறிவுவாதம் செய்யலாம்.
முஹம்மது நபிகளுடன் நட்புறவு கொள்ள விரும்பியவர்களில் சிலர் தங்கள் பெண்ணைக் கொடுத்து நட்புறவை பலப்படுத்த விரும்பினர். முஹம்மது நபிகளுடன் திருமண உறவு கொள்ளக் காரணம், முஹம்மது நபியின் நற்பெயர் மற்றும் குரைஷியராகிய முஹம்மது நபியுடன் சம்பந்தம் செய்வதன் மூலம் ஜென்மப் பகையாளியான இனங்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.


ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ ? - தருமி

இதை தங்களின் அறியாமை என்று ஒப்புக் கொண்டு விட்டதால் மேற்கொண்டு விளக்கம் தேவை இல்லை. எனினும் விளக்கம் வேண்டுபவர்களுக்காக சில குறிப்புகள். கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கு உள்ள ஒற்றுமையான அம்சங்களில் ஆதிப் பெற்றோர் ஆதம்-ஏவாளை நம்புவதும் ஒன்று. ஆதாம்-ஏவாள் என்பதை நாங்கள் ஆதம்-ஹவ்வா என்கிறோம்.


பார்வைக்கு ஹதீஸ் எண்கள்: புகாரீ - (ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம்) எண்: 3330 மற்றும் முஸ்லிம் 2673 & 2674


5) படைப்புக்கொள்கை
இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி

முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக்கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது , பார்க்க: 23:12,13 &14).

இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?

6) ஹூருல்ஈன்கள்:
ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததை விடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி 'நல்ல வேளை' எதுவும் சொல்லப்படவில்லை! - தருமி

நீங்கள் சொல்வது ஹூருல் ஈன் (ஹூர் = நீண்ட, ஈன் = இருகண்கள்) இவர்களைப் பற்றி சொல்லப்படும் குர்ஆன் வரிகளில் பெண் என்ற வார்த்தை மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பமே. மொழிபெயர்த்தவர்கள் ஆண்களாகவே இருந்ததும் கூடக்காரணமாக இருக்கலாம். ஹூருல் ஈன் என்பதற்கு 'நீண்ட கண்களை' உடையவர்கள் என்று பொதுவாகவே சொல்லப் பட்டுள்ளது.

44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

كَذَلِكَ وَزَوَّجْنَهُمْ بِحُورٍ عِينٍ


52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.


مُتَّكِءينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَهُمْ بِحُورٍ عِينٍ


55:72 ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப் பட்டிருப்பர்.


حُورٌ مَقْصُورَتٌ فِي الْخِيَامِ

56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.


وَحُورٌ عِينٌ

2:25 (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு . அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள் . ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன. இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு. மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.


وَبَشِّرْ الَّذِينَ ءامَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ انَّ لَهُمْ جَنَّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْانْهَرُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوا بِهِ مُتَشَبِهًا وَلَهُمْ فِيهَا ازْوَجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَلِدُونَ

4:57 (அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர். அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.


وَالَّذِينَ ءامَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ سَنُدْخِلُهُمْ جَنَّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَاالْأَنْهَرُ خَلِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا


மேலே சொல்லப்பட்ட குர்ஆன் வசனக்களின் ஹூருல் ஈன் என்ற வார்த்தை "நீண்ட கண்களையுடைய" துணைகள் என்ற அர்த்தத்திலேயே சொல்லப் பட்டுள்ளன. மூலத்தில் ஹூர் என்ற அரபி வார்த்தை பாலினத்தைக் குறிக்கவில்லை என்பதை அறியவும்.


குர் ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முஹம்மது அஸத் 'ஹூர்' என்ற பதத்தை "Spouse" என்றும், அப்துல்லாஹ் யூசுப் அலி "Companion" என்றே குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் உறுதியான கருத்தானது "அழகிய துணை " என்பதாகவே இருக்கிறது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.


மேலும், நரகம் புகும் பெண்களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு விட்டு, சுவர்க்கம் புகும் பெண்களுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றி சொல்லப் படிருக்கா விட்டால், உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கலாம்.


33:35 நிச்சயமாக முஸ்லிம்களான ' ஆண்களும், பெண்களும்' நன்னம்பிக்கை கொண்ட 'ஆண்களும், பெண்களும்' இறைவழிபாடுள்ள 'ஆண்களும், பெண்களும்' உண்மையே பேசும் 'ஆண்களும், பெண்களும் ' பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும். ( அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் 'ஆண்களும், பெண்களும்'. தர்மம் செய்யும் ' ஆண்களும், பெண்களும்', நோன்பு நோற்கும் ஆண்களும் , பெண்களும். தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக் ) காத்துக் கொள்ளும் 'ஆண்களும், பெண்களும் '. அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் 'ஆண்களும், பெண்களும்' - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் .
13:23 நிலையான (அந்த ) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு ) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள். மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.

43:70 நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான் . 'உங்களில் 'ஆணோ, பெண்ணோ' எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும் ) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம். எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ , மேலும் என் பாதையில் துன்பப் பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ , மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ , அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன். இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன் " (என்று கூறுவான்). இது அல்லாஹ்விடமிருந்து ( அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும். இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு .
4:124 ஆகவே, ஆணாயினும் சரி , பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ , அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.


என்று இருபாலருக்கும் (திருமணம் ஆகாமல் இறந்தவர் உட்பட) பொதுவாகச் சொல்லி இருக்கும் குர்ஆனின் வசனங்களை நீங்கள் வாசித்திருக்க வில்லையா?

இப்படி குர்ஆனில் ஆணுக்கும் பெண்ணும் பொதுவாகவும், சில இடங்களில் ஆண்களை முன்னிருத்தியும் சில இடங்களில் பெண்களை முன்னிருத்தியும் சொல்லப்பட்டவற்றில், ஆணுக்குச் சொன்ன இடத்தில் பெண்ணுக்கு ஏன் சொல்லவில்லை என்றும் பெண்ணுக்குச் சொன்ன இடத்தில் ஆணுக்கு ஏன் சொல்லவில்லை என்றும் கேட்பது குதர்க்கமற்றி வேறென்ன?

Saturday, June 17, 2006

பாகிஸ்தானில் கோயில் இடிப்பு?!

பாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டதாகச் செய்திகளை முந்தி(ரிக் கொட்டைத் தனமாக)த் தரும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதைக் குறிப்பிட்டு “மாயவரத்தான்” சுட்டிக் காட்டியுள்ளார். பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ், “லாகூர் கிருஷ்ணர் கோவில் இடிக்கப் படவில்லை" என்று பாகிஸ்தானின் சமய நடவடிக்கைகள் அமைச்சர் இஜாஸுல் ஹக் தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளது.

பேட்டியின் போது கிருஷ்ணர் கோவிலின் மேற்பார்வையாளர் பண்டிட். காசிராம் உடனிருந்து அமைச்சர் சொன்னதை ஆமோதித்துள்ளார். மேலும் தீபாவளி, தசரதா மற்றும் ஹோல்கி பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு லாகூர் அரசு ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கொடுத்ததையும் குறிப்பிட்டார்.

பத்திரிக்கை பேட்டியின் போது, பாகிஸ்தானின் கிருஷ்ணர் கோவில் பாதுகாப்பாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் அரசு செலவில் இக்கோவில் புணர்நிர்மாணம் செய்யப்பட்டது” என்றார்.

எச்சரிக்கை: இச்செய்தியைப் பற்றி கருத்துச் சொல்பவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு முத்திரைக் குத்தப்பட்டு தேசதுரோக பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளது.


வெளிச்சுட்டிகள்:
இது தினமலரில் வந்த செய்தி. வந்தேறிகளின் திட்டமிட்ட சதி! - சொன்னவர்: மாயவரத்தான்

http://www.dailytimes.com.pk/default.asp?page=2006\06\16\story_16-6-2006_pg13_1
http://www.dailytimes.com.pk/default.asp?page=2006\06\16\story_16-6-2006_pg13_2

இந்த வெற்றி யாருக்குச் சொந்தம்?

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த இச்செய்தியை படித்ததும் உண்மையில் மனம் நெகிழ்ந்தது. மும்பையில் தொழில் செய்துவரும் குஜராத்தைச் சார்ந்த தொழிலதிபர் தயால் பானுஷாலிக்கு கிட்னி மாற்று சிகிச்சைக்கு மும்பை கடற்படையில் பணியாற்றும் சயீது முஹம்மது கிட்னி கொடுத்து உதவியுள்ளார். அதேபோல் தயாள் பானுஷாலியின் மனைவி தமயந்தி தனது கிட்னியை சயீத் முஹம்மதின் மனைவி ஷமீமுக்கு கொடுத்துள்ளார்.

தம்பதிகளுக்கிடையிலான இதுபோன்ற கிட்னி பரிமாற்றம் இதற்குமுன் சண்டிகரில் ஏப்ரல் 2004 இல் நடந்து தோல்வியில் முடிந்தது. மேற்கண்ட பரிமாற்றத்தில் மொத்தம் நான்கு ரேஷன்களால் இரண்டு குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்பியுள்ளது. மதஙங்களுக்கு அப்பாற்பட்டு இதுபோன்ற நெகிழ்சியான நிகழ்வுகளுக்கு இந்தியாவில் பஞ்சமில்லை.

இதை மருத்துவ முன்னேற்றத்தின் வெற்றி என்பதா? அல்லது கணவன் – மனைவிக்கு இடையிலான பாசப்பிணைப்பின் வெற்றி என்பதா? அல்லது மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானத்தின் வெற்றி என்பதா?

நன்றி

Wednesday, June 14, 2006

இஸ்ரேலின் வீரதீரபராக்கிரமங்கள்!

சிலவருடங்கள் வரை உலக நாடுகளின் குறிப்பாக இந்தியத் திருநாட்டின் அங்கீகாரத்தைப் பெறாத மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பலமுறை கண்டத்திற்காளான இஸ்ரேலைப் புகழ்ந்து சிலர் எழுதி வருகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள சில பழைய புள்ளி விபரங்களைப் பார்த்து விட்டு மேற்கொண்டு புகழ்பாடலாம்!



கடந்த செப்டம்பர்-2000 முதல் ஜனவரி-2003 வரை பள்ளி மாணவ மாணவிகளின் மீதான இஸ்ரேலின் அக்கிரமங்கள்:

166 மாணவர்களும் 75 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
1289 பாலஸ்தீன பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
197 பள்ளிகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.
11 பள்ளிகள் முழுவதும் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.
9 பள்ளிகள் குறிவைத்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளன.
25 பள்ளிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளின் சோதனைச் சாவடியாகவும் இராணுவ முகாம்களாகவும்

ஆக்கப்பட்டுள்ளன.
185 பள்ளிகள் இஸ்ரேலிய வாந்தக்குதல்களால் சிதிலமடைந்துள்ளன.

(Sources: Defense for Children International and The Health, Development, Information and Policy Institute)

கடந்த செப்டம்பர்-2000 முதல்:

600 க்கும் மேற்பட்ட தடவைகள் பாலஸ்தீன ரெட்கிரஸண்ட் ஆம்புலன்ஸ்கள் மருத்துவ உதவி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

ஏறத்தாழ அனைத்து ஆம்புலன்ஸ் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர் பலவந்தமாக கீழிறக்கப்பட்டும் அடித்தும் பல மணி நேரங்கள் முதலுதவி செய்ய தடுக்கப்பட்டுள்ளனர்.

15 மருத்துவ அதிகாரிகள் பணி செய்து விட்டு திரும்போது கொல்லப் பட்டுள்ளனர்.

275 செம்பிரை மற்றும் பிற மருத்துவர்கள் காயம் பட்டுள்ளனர்.

254 மருத்துவர்கள் இஸ்ரேலிய இராணுவத்தினரால் அடிக்கப்பட்டுள்ளனர்.

197 செம்பிரை ஆம்புலன்ஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டு கிட்டத்த 80%க்கும் மேல் பயன் படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

25 ஆம்புலன்ஸ்கள் முழுவதும் சேதப்படுத்தப் பட்டுள்ளன.

70 பேர் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவி செய்த போது இஸ்ரேலிய ராணுவம் தடுக்கும் போது நடந்த கைகலப்பில் கொல்லப்பட்டவர்களாவர்.

39 குழந்தைகள் சோதனைச் சாவடிகளின் வாசலில் பிரசவிக்கப்பட்டனர். ஏனென்றால் அவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டது.

Source: Palestinian Red Crescent Society and UPMRC

28 செப்டம்பர் 2000 முதல் 20 ஆகஸ்டு 2002 வரை:

2639 கட்டிடங்கள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.

36,349 தனியார் குடியிருப்புகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.
96,100 பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

(source: Ministry of Public Works and Housing)

இவற்றின் மூலம் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு 665 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும். (source: US Agency for International Development)

30 மசூதிகளும் 12 கிறிஸ்தவ தேவாலயங்களும் சேதப்படுத்தப் பட்டுள்ளன. (source: Palestinian Council for Peace and Justice).

இவையன்றி பாலஸ்தீனப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை இஸ்ரேலிலிருந்து கொண்டு வந்து கொள்ளை இலாபத்தில் விற்க அனுமதியுண்டு. அதே சமயம் பாலஸ்தீன தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருட்களை பாலஸ்தீனத்திற்குள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. மேற்குக்கரைப் பகுதியில் வேலையின்மை 51.3% காஸாப் பகுதியில் 71.7%. கடந்த செப்டம்பர் 2000 முதல் இஸ்ரேலில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 80,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வேலைகளை இழந்துள்ளனர். அக்கிரமிப்புப் பகுதிகளில் சுமார் 60,000 க்கும் மேல் வேலை இழப்பு. 75% சதவீத பாலஸ்தீனர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.

(Source: Palestinian Central Bureau of Statistics)

நன்றி

Monday, June 12, 2006

யாகாவா ராயினும் நாகாக்க - 1

தருமி' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் திரு .சாம் ஜார்ஜ் கடைசியாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ரிடையர்ட் ஆனவர். பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தவர் , கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் பிடிக்காமல் மதங்களே மாயை என்ற முடிவுக்கு வந்து, " எனக்கு மதம் பிடிக்கவில்லை" என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதினார்.

கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறிய பேராசிரியர் சாம் ஜார்ஜ், கிறிஸ்தவத்தின் குறைபாடுகளாகத் தான் உணர்ந்ததை பதிவாக இட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் விளக்க முயன்றிருப்பர். மாறாக கிறிஸ்தவத்தின் அரிச்சுவடி கூட அறியாமல் பிறமதங்களையும் கேள்விக்குட்படுத்துகிறேன் என்ற ஆவலில் கேலிக்குள்ளாகியுள்ளார் என்பதை அவரின் கேள்விகளில் இருக்கும் அபத்தங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பிறமதங்களைப்பற்றி அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல சம்பந்தப்பட்ட மதத்தவர்கள் யாரும் முன்வரவில்லை என்பதிலிருந்து தருமி சொன்னவை உண்மையாக இருக்குமோ என்ற அய்யம் தோன்றுவதைத் தவிர்க்க இயலாத நிலையில், இஸ்லாம் பற்றி அவர் வைத்த அபத்தவாதங்களை நம்மால் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் இஸ்லாமிய அடிப்படைகளான குர்ஆனும் ஹதீஸ்களும் அவற்றின் மொழிபெயர்ப்புகளும் இணையத்தில் தாரளமாகக் கிடைப்பதால், இஸ்லாமிய அடிப்படைகளை எவரும் எளிதில் சரி காண இயலும். ஒரு சில அரைவேக்காடுகள் போகிற போக்கில் சேறு வாரி இறைத்தாலும் அவற்றை ஆதாரத்துடன் எவரும் மறுக்கவும் பொய்களை இனம் காட்டவும் இயலும்.

ஹதீஸ்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவையும் கூட தெளிவாகத் தரம் பிரிக்கப்பட்டு பொதுவில் விவாதிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு புடம் போட்டத் தங்கமாக ஜொலிப்பது வெள்ளிடை மலை!

சரி விசயத்திற்கு வருவோம்! கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியவருக்கு இஸ்லாத்தில் ஈடுபாடு ஏற்படாமல் மதம்/மனம் வெறுக்கக் காரணமாக சுமார் இருபத்தோரு கேள்விகளை வைத்து ஆய்வு செய்தாராம் .

கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் பொதுவான சில விசயங்களில் அதாவது முதல் மனிதன் ஆதம் (அலைஹி) அவர்களின் மனைவியான முதல் பெண் ஹவ்வா (அலைஹி) என்று இஸ்லாத்திலும் ஏவாள் என்று கிறிஸ்தவம், யூதத்திலும் அழைக்கப்படும் பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும் போது "முதல் மனிதன் ஆதத்தின் மனைவிக்கு இஸ்லாத்தில் பெயரே இல்லை" என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்தவராக தனது கேள்விகளை முன்வைத்திருந்தார்!

அவரின் அபத்தக் கேள்விகளில் பல ஏற்கனவே பல்வேறு பதிவுகளில் தெளிவாக விளக்கப்பட்டிருந்தாலும் அவற்றை படித்தோ படிக்காமலோ சில கேள்விகளையும் வைத்திருந்தார் . அவற்றிற்குப் பதில் சொல்லும் முகமாக இப்பதிவில் சில விளக்கங்களைக் காணலாம்.

1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா?
Torah- வும், பைபிளும் மனிதர்களால் திரிக்கப்பட்டு விட்டதால் இறுதியாக கடவுளால் ( அல்லாஹ்) முகமது நபிக்கு ஜிப்ரீல் (Gabriel) என்ற கடவுளின் தூதன் (arch-angel) மூலம் ஹீரா என்ற மலையிலுள்ள ஒரு குகையில் கொடுக்கப்பட்டதே ' இறுதி வேதமான' குரான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. - தருமி

குர்ஆன், நபிகள் நாயகத்திற்கு பகுதி பகுதியாக, காலம், நேரம், இடம் பொருள் கொண்டு 23 ஆண்டுகள் இறைவனால் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் கொடுக்கப்பட்டது. அது குகையில் வைத்தோ அல்லது புத்தகமாகவோ கொடுக்கப்படவில்லை . ஜிப்ரீல் வசனங்களாக சொன்னதை மனனம் செய்து பின் தோழர்களும் மனைவியரும் மனனம் செய்தும், பிறகு எழுதியும் வைத்தனர்.

2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ?
இதிலேயே, முகமது ஒரு பெரிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் எப்படி எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்திருப்பார் என்ற கேள்வியும் , இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு. - தருமி

இப்படிப் பொத்தாம் பொதுவாக எதைப் பற்றி வேண்டுமானாலும் போகிற போக்கில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் . அதற்கு ஒரு பேராசிரியராக இருக்க வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லை.

முஹம்மது நபி அரபி மட்டுமே பேசும், எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார். இதில் எந்த குழப்பமும் இல்லை. கதீஜா ஒரு வர்த்தகரின் மகள் மற்றும் சீமாட்டி. அவருக்குத் துணையாக நபிகள் இருந்தார்கள். முழு நேர வர்த்தகர் அல்லர்.

வியாபாரத்தைக் கவனிப்பவர்களெல்லாம் கல்விமான்களாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தது ஏன்? பள்ளி சென்றிராத காமராஜர் முதலமைச்சராக இருக்கவில்லையா? பில் கேட்ஸ் பள்ளியிலிருந்து படிப்பைத் தொடராமல் பாதியில் வெளியேறியவர் தான். மேலும் பெரிய வியாபாரத்தைக் கவனிக்க 1400 வருடங்களுக்கு முன் என்ன கல்வித் தகுதி இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இது அபத்தவாதமாகத் தான் தெரிகிறது. முஹம்மது நபியவர்கள் எழுதப் படிக்கத் தெரியாமல் இருந்தது உங்களுக்கு ஏன் உறுத்தலாக இருக்கிறது என்பதையும் கூறுகிறீர்களா ? மதங்கள் வேண்டாம் என்கிற உங்கள் வாதத்திற்கு இது எப்படி வலு சேர்க்கிறது என்றும் கூறுவீர்களா?

3) சில போர்களில் தோற்றது ஏன்?
வெற்றிக்குக் காரணம் அல்லாஹ்வின் ஆசி என்றால், தோல்விகளுக்கு யார் காரணம் - இந்தக் கேள்வி Omniscience பற்றி நான் எழுதிய முதல் பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளவும் - தருமி

நபிகள் நாயகம் கலந்து கொண்ட எல்லாப் போர்களில்லும் வெற்றி பெறவில்லை. சில போரில் தோற்றனர் என்பது உண்மையே. போரில் கலந்து கொண்டவர்களில் சிலர் அல்லாஹ்வின் / நபிகளின் கட்டளையை உதாசீனம் செய்தது தோல்விக்குக் காரணம். மேலும் முஹம்மது நபி அவதாரப்புருசர் அல்லவே. சாதாரண மக்களோடு பிறந்து பழகி சாதாரண மனிதராக வாழ்ந்தவரே. வெற்றியிலும் தோல்வியிலும் அவர்களின் ஈமான் சோதிக்கப் பட்டது. இதுவே இறைவனின் திட்டமாகவும் இருந்தது.

அற்புதங்களை நம்பி இஸ்லாம் இல்லை. அப்படி இருந்திருந்தால் முஹம்மது நபியவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அற்புதங்களாய் நிகழ்த்தி அனைவரையும் தம் வழிக்குக் கொண்டு வந்திருக்க இயலும் . மக்காவைத் துறந்து மதீனா சென்றிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காதே.

2804. அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

என்னிடம் (ரோம சக்கரவர்த்தி) ஹிராக்ளியஸ், 'முஹம்மதை எதிர்த்து நீங்கள் புரிகிற போர் (முடிவு ) எப்படியுள்ளது?' என்று கேட்டார். அதற்கு நாங்கள், 'போர் (முடிவு எங்களிடையே) மாறி மாறி வரும்' என்று பதிலளித்தோம். இறைத்தூதர்கள் இப்படித் தான் சோதிக்கப் படுவார்கள் . பிறகு, அவர்களுக்குச் சாதமாகவே இறுதி முடிவு இருக்கும்'' என்று (ரோம சக்கரவர்த்தி ஹிராக்ளியஸ் ) கூறினார். (புகாரி)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

Saturday, June 03, 2006

மதங்களும் பெண்ணியமும் - 2

பெண்ணுரிமை அமைப்புக்களின் அடிப்படை நோக்கம் மேற்கத்திய நாடுகளில் வழக்கத்தில் இருந்த ஊதியப் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்பதாகவே இருந்தன. அதாவது ஒரே அலுவலைச் செய்யும் ஆணுக்கும்-பெண்ணுக்கும் வெவ்வேறு விகிதமான ஊதியம் வழங்கப்பட்டது. இந்த அநீதியிலிருந்து பெண்களை மீட்டெடுக்கப் போராடுவதற்காகவே பெண்ணுரிமை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு போராட்டங்கள் மூலம் சமநீதி பெற வேண்டிய சூழல் உருவானது. இதில் ஓரளவு வெற்றிகண்ட அமைப்புகள் இன்னும் சில ஆணாதிக்கச் சிந்தனைகளிலிருந்து பெண்களை முற்றிலும் விடுவிக்கத் தொடந்து போராடி வருகின்றன.

அனைத்துப் பெண்ணுரிமை அமைப்புகளின் உலகளாவிய பொதுவான கோரிக்கைகள் எவையெனில் ஆண்-பெண் பாகுபாட்டைக் களைதல், பெண்களுக்கெதிரான சமூக மற்றும் இல்லறக் கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவித்தல், வாழ்வுரிமை ஆகியவையே.
இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லையென்பவர்கள் மேற்சொன்னவற்றில் எவற்றை இஸ்லாம் வழங்கவில்லை என்பதைச் சொல்வதில்லை.

மாறாக பர்தா,பலதாரமணம் என்று அடிப்படைப் பெண்ணுரிமைகளுக்குச் சம்பந்தம் இல்லாதவற்றைச் சொல்லி அவர்களை அழகையும் உடலையும் சந்தைப் பொருளாக்குவதில்தான் பெண்ணுரிமைகள் இருப்பதாகத் தவறாகத் திசை திருப்பி வருகின்றனர். முதலாளியச் சிந்தனையின் எதிர்காலம் சந்தைப் பொருளாதாரத்தை முன்னிருத்தி இருப்பதால் அவர்களுக்கு பெண்ணுரிமைகளை விட பெண்ணுரிமைச் சுரண்டலிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பதற்கு அழகிப் போட்டிகளும், இன்ன பிற ஆபாசப் போட்டிகளுமே சான்றாக உள்ளன.

இஸ்லாமியச் சமூகத்தில் பெண் தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக என்று தனித்தனி பரிணாமத்தில் பார்க்கப்படுகிறாள். ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களை இஸ்லாம் கண்ணியப்படுத்துவது போல் மற்ற மதங்கள் கண்ணியப் படுத்துவதில்லை.

"தாயின் காலடியில் சுவர்க்கம்" என்பது முதல் தாய்மையைப் போற்றி பல்வேறு ஹதீஸ்களும் குர்ஆன் வசனங்களும் நிறைந்துள்ளன. பொருள் சார்ந்த கடமைகள் பெண்ணை விட ஆணுக்கு அதிகமாகச் சுமத்தப் பட்டிருப்பதாலேயே, பாகப்பிரிவினையில் பெண்ணை விட ஆணின் பங்கு அதிகம். இதன் மூலம் சகோதரியாக இஸ்லாமியப் பெண் பாதுகாக்கப் படுகிறாள்.

இன்றைய மகளிர் அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கும் உரிமைகளை இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே வழங்கி விட்டது. ஆயினும் இவை எந்த நபித்தோழியருமோ அல்லது மாதர் அமைப்புகளோ போராடிப் பெற்றதல்ல. இஸ்லாமிய வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் பெண்கள் உரிமைகளுக்காகப் போராடியதாகக் காண முடியாது. அதற்குக் காரணம் இறைக் கட்டளை மூலம் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கான உரிமைகள் படைத்தவனால் வழங்கப்பட்டன. நபிகளாரின் காலந்தொட்டே பெண்கள் சமத்துவமாக நடத்தப்பட்டு அவர்களின் வாழ்வுரிமைகளும் கண்ணியமும் காக்கப்பட்டன என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றைப் பட்டியலிடும் முன்னர் இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் பெண்களை எப்படி அடக்கி ஆள்கின்றன என்பதைப் பார்த்தால் இஸ்லாத்தின் மீதான இவர்களின் குற்றச்சாட்டுகள் காழ்ப்புணர்வன்றி வேறில்லை என்பது புலப்படும்.

ஆரிய இந்து மதத்தில் பெண்களின் நிலை:

1) சிசுக்கொலை:இந்து மத திருமணங்களில் வரதட்சணை வேதகாலந்தொட்டே இருந்து வருகின்றது. ஆரிய இந்துக்களின் ரிக் வேதத்தில், "பசுக்களையும் பொருட்களையும் மணப்பெண்ணின் தந்தை திருமண ஊர்வலத்தின்போது எடுத்துச் சென்று மணமகனுக்கு கொடுக்கவேண்டும்" (ரிக் X.85);

"திருமண வைபவத்தின் போது 10 தேர்களையும், 1060 குதிரைகளையும் வரதட்சினையாகப் பெற்றதால் தான் செல்வந்தனானேன்" (ரிக் I-126);

கன்யாதானத்தின் போது, மணப்பென்னின் தந்தை மணமகளுடன் நகைகளையும், ஆடைகளையும் இன்னும் பிற பொருட்களுடன் மணமகன் வீட்டுக்கு அனுப்புவது மரபாகும். பெண்ணாய்ப் பிறப்பதே பெரும்பாவம் என ஒருபக்கம் போதிக்கப்பட்டாலும், மீறிப் பிறந்தாலும் அவர்களின் மீதான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடுவதை ஆரிய இந்து மதம் நியாயப்படுத்துகிறது.

"Tasmat striyam jatam parasyanti ut pumamsam haranti" [Taitt. Samh. VI.5.10.3] அதாவது,

பெண்குழந்தை பிறந்தால் நிராகரியுங்கள்; ஆண் குழந்தையை சுவீகரியுங்கள்" என யஜூர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. (மாதவ ஆச்சார்யாவின் "தைத்திர்ய யஜூர் வேதம்")
சமீபத்திய ஆய்வுகளின்படி பெண்சிசுக்கொலை மற்றும் கருச்சிதைவுகள் மூலம் சுமார் ஐம்பது மில்லியன் குழந்தைகள் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

1921 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆண்-பெண் விகிதாச்சாரம் 100:97 என்பது அடுத்த 70-80 ஆண்டுகளில் 100:92.7 ஆகக் குறைந்துள்ளது. [சோனாலி வர்மாவின் "Indian women still awaiting Independance’, Reuter.12 Aug. 1997, New Delhi]

2) குழந்தைத் திருமணம்:

ஆரிய இந்து மதத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டபுத்தகமான மநு ஸ்மிரிதியில் மணப்பெண்ணின் வயதை விட மூன்று மடங்கு வயதுடையவனே மிகச்சிறந்த மணமகன் என்கிறது. அதாவது 10 வயது சிறுமிக்கு 30 வயது வாலிபனும், எட்டு வயது சிறுமிக்கு 24 வயது வாலிபனும் கணவனாக இருப்பதை வலியுறுத்துகிறது. (மநு ஸ்மிருதியின் சட்டம் IX.94)

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அதிக வரதட்சணை மற்றும் அவப்பெயர்களிலிருந்து தப்பிக்க பெண் குழந்தைகளை 5-6 வயதில் திருமணம் செய்து வைப்பது வட இந்தியர்களிடம் பரவலாகக் காணப்பட்டது. (`Women in Delhi Sultanate’ - L.C.Nand Vohra Publishers and Distributors Allahabad 1989, `Society and Culture in Northern India in 12th century’, B.N.S.Yadav Allahabad 1973, `The Position of Women in Hindu Civilization’, Delhi 1973, A.S.Altekar மற்றும் `Some Aspects of the Postion of Women in Ancient India’, G.R.Banerjee)

எஸ்.ஷேத் தனது 'Religion and Society in The Brahma Purana’ - Sterling Publishers Pvt. Ltd. N.Delhi 1979 என்ற நூலில் "மநுவின் படியான பால்ய விவாகத்தின் மூலம் மணப்பெண்ணின் குறைப்பாடுகள் மறைக்கப்படுகின்றன" என்கிறார்.

வரதட்சணைக் கொடுமைகள்:

வரதட்சணைக் கொடுமைகள் மூலம் ஆண்டு தோறும் சுமார் 5-6ஆயிரம் மணப்பெண்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். நாளொன்றுக்கு ஒரு டஜன் மணமகள்கள் எரித்துக் கொல்லப்படுகிறார்கள் என்கிறது இன்னொரு அறிக்கை. இவற்றில் ஒரு சில வழக்குகளில் மட்டுமே சட்ட ரீதியான தண்டனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. (`Kitchen fires Kill Indian Brides with Inadequate Dowry, July 23, 1997, New Delhi, UPI )

அக்னிப் பரீட்சை:
விரும்பியோ அல்லது நிர்பந்தமாகவோ ஒரு பெண் கற்பிழந்தால் அவளுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது ஆரியர்களின் வழக்கமாக இருந்தது. ஆரிய இந்துக்களில், ஒருவன் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு குற்றம் சுமத்தும் போது, அந்த அபலைப்பெண் தன் கற்பை நிரூபிக்க அக்னிபரீட்சை செய்ய வேண்டும். அக்னிப்பரீட்சையின் போது தீயினால் எரிவது மட்டுமின்றி சிறு காயம் ஏற்பட்டாலும் அவள் கற்பிழந்ததற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும். (Encyclopedia Brittanica 'trial by ordeal')

இராமன் தன் மனைவி சீதை இராவணனால் சிறை பிடிக்கப்பட்டு மீண்ட போது அக்கினிக் குண்டம் ஏறியே தன் கற்பு நிலையை நிரூபிக்க நிர்ப்பந்தப்படுத்தப் பட்டாள் என்பதை இந்துக்களின் வேத காவியமான இராமயணம் சொல்கிறது.

சதி மற்றும் உடன்கட்டை:
போரில் ஈடுபடும்போது தங்கள் மனைவிகளும் பெண் குழந்தைகளும் எதிரிகளிடம் அகப்பட்டு கொடுமைகளுக்குள்ளாகக் கூடாது என்பதற்காக ஒட்டு மொத்தமாக குடும்பம் குடும்பமாக எரியும் தீயில் குதித்து உயிரை மாய்ப்பதை 'ஜவுஹர்' என்றழைத்தனர். கணவன் இறந்த பிரகு அவனின் சிதையில் மணைவியை பலவந்தமாகத் தள்ளி எரிப்பதை ரிக் வேதம் வலியுறுத்துகிறது. (ரிக் வேதத்தின் சதி ஸ்லோகம்)

"Let these women, whose husbands are worthy and are living, enter the house with ghee (applied) as corrylium ( to their eyes). Let these wives first step into the pyre, tearless without any affliction and well adorned."[Rig Veda X.18.7] மற்றும் History of Dharmasashtra’, M.P.V.Kane Vol. IV, Bhandarkar Oriental Research Institute. 1953)

இவையன்றி 'அந்நியன் புகழ்' கருடபுராணத்திலும் சதி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் சற்று ஆறுதலான விடயம் யாதெனில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளையுடைய தாய்மார்களுக்கு விதிவிலகளிக்கிறது!. உடன் கட்டை ஏறாத பெண் மீண்டும் மீண்டும் பூமியில் பிறந்து அவள் உடன்கட்டை ஏறும்வரை பிறந்து கொண்டே இருப்பாள் என்கிறது. (Garudapurana II.4.91-100). பத்ம புராணத்தின்படி கணவனை இழந்த கைம்பெண் தானாகவே விரும்பி சிதைமீதமர்ந்து உடன்கட்டை ஏறவேண்டும் என்கிறது. விஷ்ணு ஸ்மிருதியின் படி, கணவனை இழந்த பெண் பாலியல் ஆசைகளைக் கைவிட வேண்டும் அல்லது சதி எனும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற இரு வாய்ப்புகளை வழங்குகிறது.

"If a woman’s husband dies, let her lead a life of chastity, or else mount his pyre"[Vishnusmrti xxv.14] (Hindu Customs, Manners and Ceremonies’, Abbe J.A.DuBois, transl. by H.K.Beauchamp from French, 3rd ed. Oxford 1906 மற்றும் ` The RigVeda and Vedic Religion’, A.C.clayotn, 1913, 1980 reprt. Bharati Prakashan Varanasi 1980). பிரம்ம புராணத்தில் "It is the highest duty of the woman to immolate herself after her husband, அதாவது

"கணவனை இழந்தப் பெண்ணின் தலையாயக் கடமையானது, தன்னை உடன்கட்டை ஏற்ற அர்ப்பணிப்பதாகும்" என்கிறது (பிரம்ம புராணம் 80.75) மேலும் உடன்கட்டை ஏறிய பெண் சுவர்க்கத்தில் மூன்றரைக் கோடி வருடங்கள் தன் கணவனுடன் இருப்பாள்" என்கிறது."She [the sati] lives with her husband in heaven for as many years as there are pores in the human body, ie. for 35 million years."[பிரம்ம புராணம் 80.76, 80.77]. விஷ்ணு தர்ம சாஸ்திரத்தின் படி "கணவனை இழந்த பெண் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் விதவைக் கோலம் பூண்டிருக்க வேண்டும்; அல்லது எரியும் சிதையில் தீக்குதிக்க வேண்டும்" என்று வழிகாட்டுகிறது!
மேலும் பல ஆரிய இந்து வேதங்களில் உடன்கட்டை ஏறுவதை வலியுறுத்தி அல்லது ஊக்குவித்து பல கட்டளைகள் பரவலாக உள்ளன. அவற்றில் சில:

· கணவனின் சிதையில் குதித்து உடன்கட்டை ஏறிய பெண்கள் சுவர்க்கத்தில் அருந்ததியர்களுக்கு இணையாக கணவனுடன் இருப்பர்.

இவையன்றி கிருஷ்ண பரமாத்மா இறந்த பிறகு (?) அவரின் அந்தப்புர நாயகிகளான ருக்மணி, ரோகிணி,தேவகி, பத்ரா மற்றும் மதுரா உள்ளிட்டோர் தீக்குளித்து இறந்ததாக புராணங்கள் பெருமிதப்படுகின்றன. மேலும் பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரி தீக்குளித்து பின்னர் தெய்வமானதாக மகாபாரதம் கதைக்கிறது.

இவ்வாறாக சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம் ஆரிய இந்துக்களால் அறிமுகப்படுத்தி ஊக்குவிக்கப்பட்டு, இவற்றின் மூலம் கணவனை இழந்த பெண்களை தீயில் தள்ளி ஏராளமான பெண் தெய்வங்களை உண்டாக்கி விட்டனர்.

இவையெல்லாம் பெண்களை ஆராதித்தல் என்ற பெயரில் நடத்தப்பட்ட கொடுமைகள் என்றால், பெண்களுக்காகவே தனியாக தண்டனைச் சட்டங்களும் இருந்ததுதான் ஆரிய இந்து மதத்தின் சிறப்பாகும். பிராமணப் பெண்கள், கணவனின் அனுமதியின்றி வீட்டை விட்டுச் சென்றால், அப்பெண்ணின் மூக்கையும் காதையும் அறுத்து தண்டிக்கப்படுவாள். பெண்கள் செய்யும் சிறு தவறுகளுக்கும் கூட அவர்கள் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டதற்கு மூக்கறுபட்ட சூர்ப்பனகை சம்பவம் இராமயணத்தில் உள்ளது! இவை மட்டுமா?

"எந்தப் பெண்ணாவது தன் குலம் பற்றியோ அல்லது தன் தகுதி பற்றியோ இன்னொருவனை ஒப்பிட்டு கணவனை பிறர் முன்னிலையில் அவமதித்தால், பொதுமக்கள் முன்னிலையில் அவளின் கால்களில் நாய்களைக் கட்டி இரண்டாக கிழிக்கப்படுவதை உறுதி செய்வது மன்னனின் கடமையாகும்; மேலும் அந்த தீயவன் (அப்பெண்ணால் ஒப்பிடப்பட்டவன்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கட்டிலில் படுக்க வைக்க வேண்டும்" (மநு ஸ்மிர்தி 8:371-372). மேலும்,

"கணவன் வீட்டிலில்லாத போது மனைவியானவள், தன் பெண் உறவினருடன் மட்டுமே உறங்க வேண்டும்" - (வஷிஸ்டரின் பத்ம புராணம்)

"பெண் மக்களை மட்டுமே ஈன்றெடுக்கும் பெண்ணுடன், உடலுறவு கொள்ளக் கூடாது" - (Hindu Law and Custom, p.145)

"பெண்களும், சூத்திரர்களும் வேத மந்திரங்களைக் கேட்கவும், கற்கவும் தகுதியற்றவர்கள்" - (பகவத புராணம் I.4.25)

இப்படியாக சிறு குற்றங்களுக்கும் கடுமையான தண்டனைகளை பரிந்துரைத்ததுடன் "கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன்" என்று தன் கணவன் புள்ளிராஜாவாக இருந்தாலும் அவனின் காலடியில் கிடக்க கட்டளையிடும் மார்க்கமே ஆரிய சனாதன இந்து மதம்!

இஸ்லாத்தில் பெண்களை பர்தா அணியச் செய்து அவர்களை அடக்கியாளும் ஆணாதிக்க மார்க்கம் என்று குற்றம் சொல்பவர்கள் இந்து வேதங்களின் முதன்மையான வேதமாகிய ரிக் வேதத்தில் பெண்களைப் பெற்றிய பாலியல் வர்ணனைகளையும் குர்ஆனின் அழகிய ஒப்புமைகளையும் மனதில் வைத்து, பெண்களை கண்ணியப்படுத்தி அழகு பார்க்கும் மார்க்கம் எது? என்ற முடிவுக்கு வரட்டும்.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வேதம் என போதிக்கப்படும் ஆரிய இந்து வேதங்களில் சகோதர-சகோதரி உறவு கூட ஆபாசமான உதாரணங்களால் சொல்லப்பட்டுள்ளது.

* புஷன் தன் சகோதரியை காதல் கொண்டான் (ரிக் - VI.55.4)

* அக்னி தன் சொந்த சகோதரியை விரும்பினான் ( ரிக்-X.3.3)

* அஸ்வின்கள் தங்கள் மகள்களான சூர்யாவையும் சாவித்திரியையும் மணந்தனர் (ரிக்-I.116.19)

* அக்னி, தனது தந்தைக்கும் சகோதரிக்கும் மகனாவான் (ரிக்-I.91.7)

* மகளைப் புணர்ந்த பிரஜபதி கதைகள் (ரிக் III.31.1-2)

இந்த வேதங்களை தற்கால இந்துக்களில் யாரும் பின்பற்றுவதில்லை. இந்து மதம் இஸ்லாம் போல் அல்லாமல் கால மாற்றத்திற்குட்பட்டது என்று சொல்லலாம். உண்மைதான்! இவ்வாறான அநாகரிகக் கோட்பாடுகளை வேதம் என்று ஏற்க எவருக்கும் வெட்கமாகத்தான் இருக்கும். இன்று இந்து மதத்தின் காவலர்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் அவ்வாறு சொல்வதில்லை. இந்திய அரசியலமைப்பில் இந்த இந்து வேதங்களைச் செயல்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் இராம ராஜ்ஜியக் கனவுலகில் சஞ்சரித்து மிதந்து கொண்டிருப்பவர்கள் அவ்வாறு இந்து வேதங்களையும் கடவுளர்களையும் கைவிட்டு பிழைப்பு நடத்த முடியாது என்பதால் அவர்கள் இருக்கும்வரை வேதங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

தன்மானமுள்ள எந்த இந்துவும் ஆரிய வேதங்களைப் பின்பற்ற முடியாது; பின்பற்றாவிட்டாலோ உண்மையான இந்துவாக இருக்க முடியாது. இதுதான் இன்றைய நம் இந்துச் சகோதரர்களின் துர்பாக்கிய நிலை!

இந்த இலட்சனத்தில் சிலர் "திண்ணை"யில் அமர்ந்து கொண்டு பெண்ணுரிமை பேச வந்துவிட்டார்கள்!

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker