அத்வானியைக் கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி!!!
மும்பை ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக சிலரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் பைசல் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ஷேக் என்பவர் தான் எங்களை ஒருங்கிணைத்து மும்பை தொடர் குண்டுவெடிப்புத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தார்.
2002ம் ஆண்டு ஷேக் ஏற்பாட்டின் பேரில் நாங்கள் பாகிஸ்தான் சென்றோம். அங்கு ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளை சந்தித்தோம். அப்போது அத்வானி குறித்த தகவல்களை தங்களுக்குத் திரட்டித் தருமாறு ஐஎஸ்ஐ அதிகாரிகள் கூறினர். அத்வானியை கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இத்தகவல்களைத் தெரிவிப்பதற்காக சில தொலைபேசி எண்களையும், இ மெயில் முகவரிகளையும் அவர்கள் எங்களுக்குக் கொடுத்தனர் என்று பைசல் தெரிவித்துள்ளார்.
பைசல் அத்வானி குறித்துத் தெரிவித்துள்ள தகவல்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்டு மேல் விசாரணைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்வானியைக் கொலை செய்ய ஐ.எஸ்.ஐ. திட்டமிட்ட தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
==================
நன்றி
மேற்கண்ட செய்தியின் மூலம் அறிந்து கொள்வது யாதெனில்,
1) அத்வானியைப் பற்றிய தகவல்களை ஓரிருவர் மூலம் அறிந்து கொள்ளும் நிலையில் ISI இருக்கிறது.
2) மும்பை குண்டு வெடிப்பு நடந்திருக்காவிட்டால் இந்தச் சதி வெளிவந்திருக்காது.
3) தீவிரவாதிகள் உளவு சொல்ல ஈமெயில், தொலைபேசி வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
4) தங்கள் திட்டத்தை வெளிப்படையாகச் சொல்லியே ISI உளவு பார்க்கச் சொல்கிறது.
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அறிந்தவர்கள் பின்னூட்டமாகப் பகிர்ந்து கொள்ளலாம்.