பாக்தாத் வீழ்ந்த பொழுதெல்லாம்...
பாக்தாத் வீழ்ந்த பொழுதெல்லாம் அது தன்னை வீழ்த்தியோரையே தனக்குள் உள்வாங்கிக் கொண்ட அதிசயத்தை நிகழ்த்தி உள்ளது. இன்னும் அவர்களைத் தனது கொள்கையால், இறுகப் பிணைத்துள்ளது.
அபுபக்கர் (ரலி) அவர்கள் காலமாகின்றார்கள். உமர் (ரலி) அவர்களைக் கலீபாவாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலம் அல்லாஹ் நியமித்து, இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு பேரருள் புரிந்தான். நபிமார்களுக்குப் பின்னர் இவ்வுலகம் சீரிய நடத்தை கொண்ட பூரண நீதி செலுத்திய ஒரு தனிநபரை உமரிலேயே கண்டு கொண்டது. அவரது காலப்பிரிவில் சிரியா பிரதேசம் முழுவதும், எகிப்தின் கடைசி எல்லை வரை உள்ள பகுதி, பாரசீகத்தின் அதிகமான மாகாணங்கள் என்பன வெற்றி கொள்ளப்பட்டன.
கிஸ்ரா மன்னன் முறியடிக்கப்பட்டு, மிக கீழ்மட்டத்திற்கு தாழ்த்தப்பட்டு அவனது முடியாட்சியின் எல்லைப் பகுதிக்கு பின்வாங்கி ஓடச் செய்யப்பட்டான். சிரியா பிரதேசத்தின் கைஸர் மன்னனது அதிகாரம் பிடுங்கி எறியப்பட்டது. அவன் கொன்தாஸ்து நோபிளை நோக்கி புறமுதுகு காட்டி ஓடி விட்டான். அம்மன்னர்கள் இருவரது சொத்துக்களும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்பட்டன. இவைகள் அனைத்தும் அல்லாஹ் நபிமார்களுக்கு வாக்களித்ததைப் போன்றே நடந்து முடிந்தது.
உஸ்மான் (ரலி) அவர்களது காலப்பகுதியில் உலகின் தூரப் பிரதேசங்களுக்கெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்யம் பரவலாகியது. மொராக்கோவிலிருந்து சீனா வரையுள்ள பிரதேசங்கள் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டன. கிஸ்ரா மன்னனும், அவனது ஆட்சியும் பூண்டோடு அழிக்கப்பட்டன. மேலும் ஈராக்கின் மதாயின் பிரதேசம், குராஸான், அஹ்வாஸ் போன்ற பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. உலகின் மேற்குப் பிரதேசங்கள், கிழக்குப் பிரதேசங்கள் அனைத்திலிருந்தும் கலீபாவை நோக்கி வருமானங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன. இது குர்ஆனை ஓதி, அதனைக் கற்று, அதனை ஒன்றிணைந்து தனது சமுதாயத்திற்காக குர்ஆனைப் பாதுகாத்ததினால் கிடைக்கப் பெற்ற அருளாகும்.
எனது சமூகத்தின் ஆதிக்கம் எனக்கு சுருக்கிக் காண்பிக்கப்பட்டது. அது புவியின் கிழக்கு, மேற்கு நாடுகளுக்கெல்லாம் சென்றடையும் என்ற அந்த சுபச்செய்தி ஒரு நூற்றாண்டு முடிவடைவதற்குள் நிகழ்ந்து முடிந்ததைக் காண்கிறோம்.
மேற்கிலிருந்து ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட படையெடுப்புக்கு இஸ்லாம் உட்பட்டமை போன்ற சிலை வணக்கத்தில் மூழ்கிப் போயிருந்த கீழைத் தேய தார்த்தாரியர்களின் ஆக்கிரமிப்புக்கும் இஸ்லாம் இலக்காக்கியது. தன்னெதிரே நிற்கின்ற எதனையும் விட்டு வைக்காது துகள் துகள்களாக ஆக்கி விடக் கூடிய சூறாவளி போன்று இஸ்லாமிய உலகை அவர்கள் திடீரெனத் தாக்கினர். முஸ்லிம்கள் சின்னாபின்னமாகி பலவீனர்களாக இருந்த காலப் பகுதியிலேயே இவர்கள் மேலோங்கினார்கள். முஸ்லிம்களிடம் தமது சிதறிய அணிகளை ஒன்றுபடுத்தும் ஒரு பலமிக்க தலைமைத்துவமோ, மக்களைத் தட்டியெழுப்பக் கூடிய ஓர் ஈமானிய உணர்வோ இருக்கவில்லை.
ஆனால் தார்த்தாரியர்கள், யாராலும் அசைக்க முடியாத பலம் பெற்ற இராணுவ சக்தியாக அன்று விளங்கினர். அவர்களது தலைமைத்துவத்திற்கு அச்சத்துடன் கூடிய மதிப்பிருந்தது. பெரும் படைகளெல்லாம் தோற்கடித்த மன்னர்கள், தலைவர்கள் பெரும் செல்வ வளம் பெற்றிருந்த ஆட்சியாளர்கள் போன்ற எவருக்கும் அவர்கள் முன்னே எதிர்த்து நிற்க தைரியம் ஏற்படவில்லை. நாடுகளெல்லாம் ஒவ்வொன்றாக அவர்கள் வசமாகின. ஆட்சியாளர்கள் புறமுதுகு காட்டி ஓடத் தொடங்கினர். அத்தோடு படிப்படியாக தலைவர்கள் அவர்கள் முன் கைகட்டி நிற்கலாயினர். ஒரு வெற்றி அடுத்ததை நோக்கி அவர்களைத் தூண்டி விட்டது. வெற்றிமேல் வெற்றி கிடைத்தது.
"தார்த்தாரியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டால் அதனை நம்பி விடாதே" என்ற வார்த்தைகள் அன்று பிரபல்யமாயிருந்தன. தார்த்தாரியர் என்போர் மிகைக்க முடியாத சக்தி என்ற கருத்து காலகாலமாகச் சொல்லப்பட்டு வந்தது.
இறுதியாக இஸ்லாத்தின் பூமியான பக்தாத் மீது படையெடுத்தனர். அப்பாஸிய கிலாபத்தின் தலைமைப்பீடமாக, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் உயர் மதிப்பிற்குரிய தளமாக இந்நகரம் விளங்கியது. பலத்த அடிகளுக்கு இலக்காகிய இவ்வாட்சி பீடம் அவர்கள் கைவசம் சிக்கிக் கொண்டது. முஸ்லிம்களின் பெயர்களைச் சுமந்த புல்லுருவிகளும் இவ்வீழ்ச்சிக்கு உடந்தையாகச் செயல்பட்டனர். ஆறுகளாக இரத்தம் பெருக்கெடுத்தோடியது.
"எமது நாகரீகத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த பெரும்பாலான நூல்கள் தைகிரீஸ் நதியில் வீசப்பட்டன. புத்தகங்களின் கறுப்புநிற மையினால் அந்நதி முழுவதும் கருமை நிறமாக மாறி விட்டது".
இவ்வாறு வருடங்கள் கடந்து சென்றன. அதோ! இஸ்லாம் தன்னகத்தே மறைத்து வைத்திருந்த அற்புதம் இரண்டு தடவைகளில் வெளிப்படுகிறது.
முதலாவது, வரலாற்றில் இடம் பெற்ற தீவிர யுத்தங்களில் ஒன்றில் இராணுவ ரீதியாக தார்த்தாரியர்களை இஸ்லாம் வெற்றி கொண்டது. ஐன்ஜாலூத் என்றழைக்கப்படும் இந்த யுத்தம் நேர்த்தி மிக்க மம்லூக்கிய தளபதி ஸைபுத்தீன் என்பவரது தலைமையில் எகிப்திய படையினருடன் இணைந்து நடாத்தப்பட்டது. ஹிஜ்ரி 658 ரமழான் 25 ஆம் தேதியையே இவ்வெற்றியின் நாளாக இறைவன் ஆக்கியிருந்தான். அதாவது பக்தாத் வீழ்ச்சியடைந்து இரண்டே வருடங்களில் இது நிகழ்ந்தது.
தார்த்தாரியர்களின் உள்ளங்களையும் இஸ்லாம் ஆக்கிரமித்துக் கொண்டமை இஸ்லாம் அடைந்த இன்னொரு வெற்றியாகும். இதோ! இஸ்லாத்துடன் போர் தொடுத்த இக்கொடுங்கோலர்களுடன் இஸ்லாம் யுத்தம் புரிகின்றது. படை வீரனின் உருவிய நிலையிலுள்ள வாள், நிராயுதபாணியான இஸ்லாமியக் கோட்பாட்டின் தாக்கத்திற்கு முன்னால் நிலைத்திருக்க முடியாது வீழ்ந்து விடுகிறது. வெற்றியாளர்கள் இறுதியாக வெற்றி கொள்ளப்பட்டவர்களின் மார்க்கத்தினுள்ளே நுழைந்து விடுகின்றனர்.
"தோல்வியுற்றவன் வெற்றியாளனுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்வதிலே ஆர்வமாக இருப்பான்" என இப்னு கல்தூன் கூறிய வழக்கத்திற்கும் பிரபல்யத்திற்கும் நேர் முரணாகவல்லவா இது இடம் பெற்றுள்ளது! எனவே இது இரண்டாவது வெற்றியாகும்.
நவீன காலத்தில், பிற இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவப் படைகளுக்கு எதிராக வீரமிக்க முஸ்லிம்களின் ஜிஹாதியப் போராட்டத்தைக் காண்கிறோம். பிரான்ஸியர்களுக்கு எதிராக அமீர் அப்துல் காதிர் அல் ஜஸாயிரிஜி அவர்கள் அல்ஜீரியாவில் போராடுகிறார்கள், ஸ்பானியர்களுடன் அமீர் அப்துல் கரீம் கிதாபி மொரோக்கோவில் யுத்தம் புரிகிறார். வீரர் உமர் முக்தார் லிபியாவில் இத்தாலியர்களுடன் போர் தொடுக்கிறார். ஆங்கிலேயர், யூதர்கள் போன்றோருடன் ஷெய்க் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் பலஸ்தீனில் மோதுகிறார். பிரான்ஸியக் காலனித்துவத்திற்கு எதிரான புரட்சி, யூத - சியோனிஸவாதிகளுக்கெதிரான பலஸ்தீன போராட்டம், ஆங்கிலேயருக்கெதிராக சுயஸ் கால்வாய்ப் போராட்டம் முதலியவற்றையெல்லாம் வரலாற்றில் கண்டு வந்துள்ளோம்.
பேர்னாட் லூயிஸ் தனது "மேற்குலகமும், மத்திய கிழக்கும்" என்ற நூலில் ஏற்றுக் கொண்டதைப் போன்று, ஏனைய மேற்கத்தேய வரலாற்று ஆசிரியர்களும் கீழ் வருகின்ற கருத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இஸ்லாமியப் பிரதேசங்களில் இடம் பெற்றுள்ள காலனித்துவத்திற்கெதிரான விடுதலைப் போராட்டங்களை வழிநடாத்திச் சென்றவை மார்க்கம் சார்ந்த இயக்கங்களே.
இன்றைக்கு சதாமைக் கைது செய்ததன் மூலம் ஈராக்கின் பிரச்னைகளுக்கு முற்றுபுள்ளி வைத்து விடலாம் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் மனப் பால் குடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு ஈராக்கில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கும், சதாமிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
எனவே, இந்தப் போராட்டம் இறுதி வரை தொடரும். டியூப்களில் அமெரிக்க ராணுவத்தினரின் பிணங்கள் அன்றாடம் கொண்டு செல்லப்படும் நிகழ்வுகளும் தொடரும். எதுவரையெனில், வியட்நாமில் அமெரிக்கா பாடம் படித்த வரலாற்றை, மீண்டும் அது ஞாபகப்படுத்திக் கொள்ளும் வரை தொடரும்..!
மீண்டும் பாக்தாத் தனது பழைய வரலாற்றைப் புதுப்பிக்கும். ஆம்..! 'தோல்வியுற்றவன் வெற்றியாளனுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்வதிலே ஆர்வமாக இருப்பான்" என்ற இப்னு கல்தூன் கூறிய வழக்கத்திற்கும் பிரபல்யத்திற்கும் நேர் முரணாக, தார்த்தாரியர்களைத் தனதாக்கிக் கொண்ட வரலாற்றைப் படைத்த பாக்தாத், இந்த அமெரிக்கர்களையும் தனாக்கிக் கொள்ளும். அது இஸ்லாத்திற்குள் அவர்களை உள்வாங்கிக் கொள்ளும். ஆம்..! அதற்கான அறிகுறிகள் அமெரிக்காவில் தென்பட ஆரம்பித்து விட்டன.
இஸ்லாத்தை அணைத்துக் கொள்ளும் மக்கள் தொகை அங்கே அன்றாடம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இன்ஷா அல்லாஹ்..! விரைவில் அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கின்றவர்களாக முஸ்லிம்கள் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை, நிகழ்வுகள் மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.
பாக்தாத் மீண்டும் எழுச்சியுறும். அது எழும் பொழுது, உலகத்து அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவும், யூதர்களும் இருக்க மாட்டார்கள். அந்த சக்தி இஸ்லாத்தின் கைகளில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்..!
அந்த நாளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. நாளை நெருக்கமாக்கி வைக்க கடுந் தவம் புரிவோம்..! அஞ்ஞான இருளில் கட்டுண்டு கிடக்கும் பூமியை, படைத்தவனின் கொள்கையால் பிணைத்து வைத்திடுவோம்...!
பின்குறிப்பு: ஏ ஒன் ரியலிசம் தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரையின் பகுதி. தற்கால நிகழ்வுக்கு ஆறுதலாக இருப்பதால் நன்றியுடன் மறுபதிவு செய்யப்படுகிறது.