Monday, February 26, 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (பகுதி 1)

மலர்மன்னன் என்பவரின் "கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது" தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து அவர்கள் மவுனம் காத்து தங்கள் சார்பு நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டியது குறித்து முன்னுரையில் எழுதியிருந்தேன்.

முழுநேர இந்துத்துவா எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சும் விதமாக மலர்மன்னன் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசக் கருத்துக்களை அக்கட்டுரையில் எழுதியுள்ளார். வயிற்றுக்கு உணவின்றி எலிக்கறி திண்ணும் விவசாயிகளைப் பற்றியோ காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக இந்து அரசியல்வாதிகளைப் பற்றியோ கவலைப்படாமல், தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் மதச்சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் தலையிடுவதன் மூலம், அமைதியுடன் வாழும் தஞ்சை இந்து-முஸ்லிம்களிடையே மதமோதல்களுக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தை எழுப்புகிறது மலர்மன்னனின் சிஃபிக் கட்டுரை!

குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசபயங்கரவாதங்களுக்குப் பிறகும் ஓயாத சங்பரிவார நரமாமிச உண்ணிகள் தென்னிந்தியாவின் மங்களூர்-பெங்களூர் என தனது நச்சுக் கரங்களைப் பரப்பி, தற்போது தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட முஸ்லிம்களைக் குறி வைத்துள்ளார்கள். விஜயபாரதம் மற்றும் இணைய ஊடகங்கள் மூலம் பல நச்சுக் கருத்துக்களைப் பரப்பி, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் சதிக்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைத்து, கலவரங்களை 'உற்பத்தி' செய்து, பின்னர் 'இந்து ஒற்றுமை மாநாடு' என்ற வன்முறைக் கூட்டத்தை நடத்தி, அதன்மூலம் அப்பகுதி முஸ்லிம்களை அச்சுறுத்தி வைப்பதே சங்பரிவாரங்களின் கடந்தகால வரலாறாக இருக்கிறது. சமீப நிகழ்வான பெங்களூர் கலவரமும் இந்தவகையில்தான் ஏற்பட்டு, மத்திய அரசின் சாதுர்யமான துரித நடவடிக்கைகளால் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக அனைத்து புள்ளி விபரங்களையும் திரட்டி, முன்னேற்பாடாக தாக்கப்பட வேண்டிய முஸ்லிம் வீடுகள், வணிக நிறுவனங்கள் பற்றிய ஸ்கெட்ச் போட்டு வைத்தே கலவரங்களில் இந்து பயங்கரவாதிகள் கச்சிதமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

மலர்மன்னன் அவர்களின் முஸ்லிம்களைப் பற்றிய வன்ம எழுத்துக்களை ஆழ்ந்து நோக்கினால், மதக்கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான சதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதை ஓரளவு யூகிக்க முடிகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பக்ரீத் அன்று மாடுகளை வெட்டக்கூட மனம் வராத அளவுக்கு நமது பாரம்பரிய மரபுகளைமதித்த தஞ்சை மாவட்டத் தமிழ் முகமதியக் குடும்பங்கள் எங்கிருந்தோ ஒட்டகங்களை அதிக விலை கொடுத்து வரவழைத்துச் சட்டத்திற்குப்புறம்பாக வெட்டிக் கொண்டாடும் மனப்போக்கை இன்று மேற்கொண்டது ஏன்?

ஆண்டாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு ஏழ்மை நிலையிலேயே இருந்த ஓட்டு வங்கி முஸ்லிம்கள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பன்னெடுங்காலம் பின்தங்கியிருந்து,சமீப பத்துப் பதினைந்தாண்டுகளில் வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் திறந்து விடப்பட்ட பிறகே எஞ்சியதில் தகுதியான கடைநிலைப் பணிகளின் மூலம் கிடைத்த சம்பளத்தில் பொருளாதார ரீதியில் சற்று நிமிர்ந்துள்ளனர்.

பொங்கல், தீபாவளி போனஸ் போன்றவற்றை அந்தந்த நேரத்தில் கொடுத்து சந்தோஷப்படுத்தும் அரசுகள் பெருநாள் போனஸ் என்று முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களில் கொடுத்து அவர்களும் பண்டிகையை கடனின்றி கொண்டாட 'மதசார்பற்ற அரசுகள்' வழி செய்வதில்லை. இந்நிலையிலேயே மதசார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது.

பெரும்பாலும் குர்பானி கொடுப்பது போன்ற மார்க்கக் கடமைகளில், குர்பானி இறைச்சியைத் தருகின்ற நிலையில் மிகச் சிலரும் பெருநாள் உணவுக்கென பெறுகின்ற நிலையில் மிகப் பலருமாக முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளனர். குர்பானி பிராணிகளாக ஆடு, மாடு,ஒட்டகம் ஆகியவற்றில் எது வசதிப்படுகிறதோ அதைக் கொடுக்கலாம். ஆடாக இருப்பின் நபருக்கு ஒரு ஆடுவீதமும், மாடு, ஒட்டகம் இவற்றை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் குர்பானி கொடுக்கலாம்.(வசதியுள்ள தனிநபர் முழு மாடோ அல்லது ஒட்டகமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ கூட கொடுக்கலாம்).

சந்தையில் குர்பானிக்குத் தகுதியான ஒரு ஆட்டின் விலை சுமார் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கிறது . மாட்டின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலும், ஒட்டகம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரையிலும் உள்ளது. தனியாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதை விட ஏழுபேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ குர்பானி கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் மார்க்கக் கடமையை அதிகம் பேர் நிறைவேற்ற முடிவதோடு, பயன் பெறும் ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

சங்பரிவார வெறியர்கள் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளில் முடிந்த மட்டும் இடையூறு செய்தே வந்துள்ளனர். குர்பானிக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் போது இந்தப் போலி பசுநேசர்களின் இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல .(வடமாநிலத்தில் மாட்டை உணவிற்காக அறுத்ததற்காக சில தலித்துக்களைக் கொன்றவர்களும் இதே போலி பசுநேசர்கள்தான்.) மாட்டிற்குப் பகரமாக நம் நாட்டின் வடமாநிலச் சந்தைகளில் கிடைக்கும் ஒட்டகத்தை விலைக்கு வாங்கி குர்பானி கொடுக்கிறார்கள்.

பசுவை தெய்வமாக வணங்கும் இந்துக்கள், ஒட்டகக் குர்பானியை ஊக்குவிக்க வேண்டியதே யதார்த்தம். உலகிலேயே ஒரே இந்து நாடான நேபாளத்தில் சர்வ சாதாரணமாக மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் விற்கிறார்கள். அதனை எதிர்த்து எந்தவொரு போலிப் பசுநேசரும் குரல் கொடுப்பதில்லை. அவர்களின் குறியெல்லாம், இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும், தலித்களும்தாம்.

"மாடுகளை முஸ்லிம்கள் மாடுகளைப் பலியிடுகிறார்கள்" என்ற கூப்பாட்டுக்காவது இந்து மதத்தின் ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் 'கோமாதா' என்ற மதநம்பிக்கை என்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஒட்டகத்தைப் பலியிட்டு பகிர்ந்து உண்பதால் வயிறு எரியும் மலர்மன்னன் என்ன காரணம் சொல்லப் போகிறார்? எக்காரணம் கொண்டும் நம்நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதைத் தவிர வேறுகாரணம் இருக்க முடியாது; அவ்வாறு ஒற்றுமையாக இருந்து விட்டால் சங்பரிவாரங்கள் அரசியல் பிழைப்புக்கு எங்கு செல்வார்கள்? என்ற சுயநலக்காரணமன்றி பண்பாட்டுக் கலாச்சார காரணமல்ல என்பதும் தஞ்சை மண்ணில் இந்துவும் முஸ்லிமும் மாமன்-மச்சானாய் வாழ்ந்து வருவது இந்து வெறியர்களின் கண்ணில் உறுத்துகிறது என்பதும் தெளிவு!

அடுத்து, அக்ரகாரங்கள் அழிந்து புதுப்புது மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதால் எழுந்த கவலையைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி: சத்யமார்க்கம்

முன்னுரை

Monday, February 19, 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்

மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.

அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.

உலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும்.

இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

கடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

"இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது".

நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.

ஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அதற்கான மறுப்பு கொடுக்கப்பட்டாலோ, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அவற்றை உடனடியாக பிரசுரிப்பது கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். இதனைப் பெரும்பாலான ஊடகங்கள் செய்து, கருத்துப் பரிமாற்ற நேர்மையைக் காக்கின்றன.

ஆனால் என்ன காரணத்தினாலோ நடுநிலையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் கூட பல நேரங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பம் விளைவித்து கலகங்களை உருவாக்கவும், அதன் மூலமாக இந்துத்துவ சங்பரிவார கூட்டங்களின் வளர்ச்சிக்கும் துணை போய் விடுகின்றன.

இணையத்தில் சங்பரிவார ஃபாஸிஸ கூட்டத்தின் வளர்ச்சிக்காக, பொதுமக்களிடையே பொய்களையும் அவதூறுகளையும் எழுதிப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் எழுத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் தோலுரித்து காட்டப்பட்டும் உள்ளது. அந்த வரிசையில் மலர்மன்னன் என்ற பெயரில் எழுதும் ஒரு இந்துத்துவ வெறியர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.

தனது எழுத்துக்களில் இந்துத்துவா தனது எதிரியாக வரையறுத்து வைத்துள்ள இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸத்தைக் குறித்து உணமைக்குப் புறம்பான தகவல்களை வரலாறுகளாகவும், நிகழ்வுகளாகவும் தருவது தான் இந்த கோயபல்ஸின் முக்கிய வேலையாகும்.

காந்திஜியைக் கொன்ற மாபாதகன் கோட்சேயின் கொலைவெறியை தனது நாற்றம் பிடித்த எழுத்துக்களால் நியாயப்படுத்தி எழுதிய தேசதுரோகி மலர்மன்னன், முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் நேர்மையாக எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தான். திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் இந்திய வரலாறுகளில் பல நிகழ்வுகளைத் திரித்து மக்களிடையே குழப்பத்தையும் துவேஷத்தையும் வளர்க்கும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக எழுதியபோது, தோழர் கற்பக விநாயகம் அவர்களால் தோலுரிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி வாழ்க்கை வெறுத்துப் போய் இனி எதைப்பற்றியும் எழுதப் போவதில்லை என்று வடக்கிருந்த தேசத்துரோகி மலர் மன்னன், இன்று சிஃபி டாட் காம் என்ற தளத்தின் தமிழ் பகுதியில் அவதூறுகளை 'எழுத' வேண்டப்பட்டுள்ளார்.

இதே சிஃபி டாட் காம் இணைய தளம் இஸ்லாத்திற்கு எதிராக இணையத்தில் காழ்ப்பைக் கக்கி எழுதும் கயமை நிறைந்த போலி நபரான நேசகுமார் என்ற மற்றொரு இந்துத்துவ பார்ப்பனருக்கு சிஃபியில் தனி இடம் ஒதுக்கியதும் நினைவு கூரத்தக்கதாகும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமெனினும் தங்கள் மன அழுக்கைக் கொட்டிக் கொள்ளட்டும். அதற்கு இடம் கொடுப்பதும், பிரித்து விடுவதும் அவரவர் விருப்பம் தான். ஆனால் சாதாரண ஊடகங்களுக்குரிய தர்மத்தை இவர்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையா?

சமீபத்தில் இந்துத்துவா ஊதுகுழல் மலர் மன்னன், "கலைகள் தந்த தஞ்சை, கவலை தருகிறது" என்று எதுகை மோனையாகத் தலைப்பிட்டு எழுதி இருந்ததை சிஃபி டாட் காம் தமிழ் பதிப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த உணமைக்குப் புறம்பான விஷயங்களையும் தவறுகளையும், பல யதார்த்தமான நிலைமைகளையும் சுட்டி சிஃபிக்கு ஒரு மறுப்புரை எழுதி பிரசுரிக்கும் படி கோரியிருந்தேன். மேலும் அக்கட்டுரை சமூகத்தில் மதக் கலவரைத்தைத் தூண்டும் வகையில் கயமை நோக்குடன் அவதூறாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.

மறுப்பு அனுப்பப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மிகுந்து நாட்கள் ஆகிவிட்டன. நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. இதுவரை சிஃபி தமிழ் தள நிர்வாகியிடமிருந்து மறுப்புரையை பிரசுரிப்பது பற்றியோ அல்லது பிரசுரிக்க முடியாது என்றோ எவ்வித பதிலும் இல்லை. இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.
சங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும் வெளியிடப்படும் தகவல்களில் அடங்கியுள்ள உண்மைக்குப் புறம்பான விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் பல தளங்களை தொடர்பு கொண்டு இறுதியில், தமிழ் முஸ்லிம்களின் இணைய குரலாக வளர்ந்து வரும் சத்தியமார்க்கம் டாட் காம் என்ற தளம் எனது மறுப்புரையை வெளியிட முன்வந்துள்ளது.

நம்மைப் பொறுத்தவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; ஆனால் அதே சமயம் அந்த விமர்சனத்தில் இருக்கும் தவறுகளையும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுகளையும் சுட்டி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் ஏற்கும் அல்லது சான்றுகளுடன் மறுத்துரைக்கும் நேர்மை மட்டுமாவது விமர்சிப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். சிஃபியிடம் இத்தகைய கருத்து நேர்மை இல்லையென்பது என்னுடைய மறுப்புரைக்கு அவர்கள் காட்டும் நீண்ட மவுனமும், தேசதுரோகி இந்துத்துவ ஊதுகுழல் மலர் மன்னனின் உணமைக்குப் புறம்பான நாற்றமெடுக்கும் அவதூறு எழுத்துக்களை தொடர்ந்து தங்களது தளத்தில் வெளியிடுவதும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

எனவே சிஃபி வெளியிடும் தேசவிரோதி மலர் மன்னனின் துவேஷ எழுத்துக்களில் உள்ள அவதூறுகளைத் தோலுரிக்கவும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய சத்தியமார்க்கம் டாட் காம் தளத்திற்கு நன்றி கூறி, இங்கு மலர் மன்னனின் அவதூறுகளை மூன்று கூறுகளாகப் பிரித்துத் தொடராக எழுதவிருக்கிறேன். இந்த மறுப்புரைகளை இனி வரும் பகுதிகளில் காண்போம். (இன்ஷா அல்லாஹ்.)


Labels: , ,

Saturday, February 17, 2007

ஜனாதிபதி அப்துல்கலாம் சவூதி மன்னராக முடியுமா?

இப்படி ஒரு கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? உலக நடப்போ அல்லது சவூதியில் மன்னராட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதையோ அறியாதவர் என்றுதானே நினைக்கத் தோன்றும்! பாமரர் ஒருவர் கேட்டிருந்தால் பரவாயில்லை என அவரின் அறியாமையை மன்னிக்கலாம்; ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கிறேன் பேர்வழி என்று மேலைநாட்டவரின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களை தமிழில் மொழிபெயர்த்து, அரைகுறை ஞானியாக எழுதி வரும் நேசகுமார் கேட்டிருக்கிறார். இதே கேள்வியை "ஏமாறாதவன்" என்ற பதிவிலும் கேட்கப் பட்டிருக்கிறது.

இந்து மதத்துக்கு இலவச அழைப்பு விடுத்த எழில் என்பவரின் பதிவின் பின்னூட்டத்தில் "அரபிக்கள் எத்துனை பேர் இந்திய இஸ்லாமிய வேலையாட்களுக்கு தத்தமது பெண் மக்களை, சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்? என்றொரு கேள்வியைக் கேட்டேன் - எந்த இஸ்லாமியரும் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனக்குத் தெரிந்து எத்தனையோ பிராம்மணரல்லாதோர் பிராம்மணப் பெண்களை மணந்திருக்கின்றனர். ஆனால், எத்தனை அரபியல்லாதோர் குவைத் அரபிப்பெண்களை மணந்திருக்கின்றனர்? இது ஒரு பிரச்சினை என்றால், இந்தப் பிரச்சினை இந்து மதத்தையும் விட தீவிரமாக இஸ்லாத்தில் இருக்கிறது ."

சவூதியில் நடைபெறுவது இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான ஆட்சி என்று சொல்லப் பட்டாலும் இஸ்லாத்தின் அரசியல் அடிப்படைக்கு முற்றிலும் எதிரான மன்னராட்சி என்பது அறிந்ததே. சவூதி அரேபியாவிலுள்ள குடிமக்களில் பெரும்பாலோர் சவூதி அல்லாத பிறநாடுகளிலிருந்து முன்பு குடியேறியவர்களே. சவூதி குடிமக்களில் பலர் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசங்களிலிருந்து கடந்த 20-30 வருடங்களுக்கு முன் குடியேறி, சவூதிப் பெண்களை மணந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

சவூதிப் பெண்களை சவூதிக் குடியுரிமை பெறாதவர்கள் திருமணம் செய்வதை தடைசெய்யும் சட்டம் கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் சவூதி அரசின் சிறப்பு ஆணையால் கட்டுப்படுத்தப் பட்டது. அரச குடும்பத்தில் சவூதி அல்லாதோர் ஊடுறுவி அவர்களின் குடும்ப ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்ற சுயநல அரசியல் காரணத்தால் இச்சட்டம் இயற்றப்பட்டது. சவூதி அரசின் இத்தகையக் கட்டுப்பாடு இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.

ஒரு அரபியல்லாதவரைவிட அரபி பேசுபவரோ அல்லது அரபியை விட அரபி மொழி அல்லாதவரோ உயர்ந்தவரல்லர்! மனிதர்கள் அனைவரும் ஆதம்-ஹவ்வா என்ற ஒரே தாய், தந்தையிலிருந்து வந்தவர்களே என்பதோடு திருமணம் எப்படி செய்யவேண்டும்? யாரைச் செய்ய வேண்டும்? கணவன்-மனைவியின் கடமைகளையும் உரிமைகளையும் நுணுக்கமாக விளக்கி இருக்கும் குர்ஆனில் சவூதிப் பெண்களை,சவூதி அல்லாதவர் திருமணம் செய்யக் கூடாது என்று எங்குமே கூறப்படவில்லை என்பதிலிருந்து சவூதிப் பெண்ணை சவூதி அல்லாதவர் திருமணம் செய்ய இடமுண்டு.

மலேசியா, குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அந்நாட்டுப்பெண்களை வெளிநாட்டவர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருமணம் செய்ய முடியும். குவைத் பெண்களில் பலர் அமெரிக்க கணவரைப் பெற்றிருப்பதாக பெருமையாகச் சொல்லிக் கொள்வர்! இதேபோல் சீனாவில் சீனர் அல்லாதவர் சீனப்பெண்களை திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது என்று நினைக்கிறேன். உலக நாடுகள் தங்களுக்கென அரசியல்/சிவில்/கிரிமினல் சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டுள்ளன. ஒப்புக் கொள்ளப்பட்ட பொதுவான சர்வதேச சட்டங்கள் தவிர, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களில் பிறநாடுகள் தலையிடுவதில்லை. அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட விசயம் இது!

நம்நாட்டுக் காஷ்மீரில் இந்தியக் குடியுரிமை பெற்றிருந்தாலும் காஷ்மீரி அல்லாதவர் சொத்து வாங்க முடியாது என்ற சட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. அயல்நாட்டவர்கள் இந்தியாவில் நிலம் வாங்க முடியாதநிலை சமீப வருடங்களில் இருந்து, உலகமயமாக்கலுக்குப் பின் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் நிலம் வாங்க/விற்க உள்ள தடைகளுக்குச் சொல்லப்படும் காரணம், அநாட்டுச் சட்டப்படி சரியென்றால், சவூதியின் சட்டப்படி, சவூதிப் பெண்களை சவூதி அல்லாதவர் மணக்க முடியாது என்ற தடையும் சரியே!

எதார்த்தத்தில், சவூதி குடிமகன்களிலேயே பலர், சவூதிப் பெண்கள் கேட்கும் மணகொடை (மஹர்) கொடுக்க முடியாமல் அரசு உதவியுடன் திருமண மானியம்! பெற்று கரையேறுகிறார்கள் என்ற நிலை இருக்கும் போது அங்கு பிழைக்க வந்த இந்தியர்களால் சவூதிப் பெண்ணை மணம் முடிக்க முடியுமா? முடிந்தாலும் அந்நாட்டுச் சட்டத்தைத்தான் குறைசொல்ல முடியுமே தவிர இதனைத் தடுக்காத இஸ்லாத்தைக் குறை சொல்வது முட்டாள்தனம் மட்டுமல்ல காழ்புணர்வின் வெளிப்பாடுதானே?

சவூதியின் சட்டம் இப்படி இருக்கும்போது சவூதி அல்லாதவர் சவூதிப் பெண்ணை மனம் முடிக்க முடியுமா? என்ற கேள்விக்கும் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் சவூதி மன்னராக முடியுமா? என்ற கேள்விக்கும் அதிக வித்தியாசமில்லை.

நேசகுமார், ஏமாறாதவன் என்ற பெயர்களில் வசைபாடிவரும் நபர்களைப் பொறுத்தவரை, அவர்களின் மதத்தின் சிறப்புகளாகச் சொல்ல ஒன்றுமே இல்லை என்பது தெளிவாகிறது. அதனால்தான், பார்ப்பனீயத்தைச் சாடுவதாகச் சொல்லி, அதைவிட இஸ்லாத்தை வசைபாடும் யுக்தி. பிராமணப் பெண்களை பிராமணர் அல்லாதவர் மணந்திருப்பதாகச் சொல்லும் நேசகுமார், பிராமனப் பெண்ணை மணந்த சூத்திரர் எவரும் உண்டா? என்றும் சொல்ல வேண்டும். உண்டெனில் அவ்வாறு மனம் முடித்த சூத்திரரை பிராமணராக அங்கீகரிக்க வேதாகம விதிகளில் இடமுண்டா? என்றெல்லாம் விளக்கிவிட்டு இஸ்லாத்தைக் குறைசொல்லட்டும்.

Labels:

Tuesday, February 06, 2007

பிப்ரவரி-14 : கலாச்சார/பண்பாட்டுச் சீரழிவு தினம்

தினம் தினம் ஒரு கொண்டாட்டம். இது 'கே' டிவி விளம்பரமல்ல! உலகமயமாக்கப்பட்ட சாமான்யனின் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு, அந்தத்த துறைசார் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்ள முதலாளியத்துவம் கையாண்ட வணிக யுக்திகளில் ஒன்றுதான் காதலர் தினம்.

'காதல்' என்ற உணர்வு அனைத்து உயிரினத்திற்கும் பொதுவானது. காதல்/நேசம்/அன்பு/பாசம் இப்படி எந்த பெயர் கொண்டழைத்தாலும் இதன் அர்த்தம் மாறுவதில்லை.

அன்னையர் தினம், நண்பர்கள் தினம் என்று எத்தனையோ தினங்கள் அன்பை வெளிப்படுத்தக் கொண்டாடப் பட்டாலும் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு இருக்கும் உலகலாவிய முக்கியத்துவமும் எதிர்ப்பும் வேறு தினக் கொண்டாட்டங்களுக்கு இல்லை.

காதலர் தினக் கொண்டாட்டங்களை எதிர்ப்பவர்கள், அன்புக்கும் காதலுக்கும் எதிரிகளா? இல்லை! ஆணும் பெண்ணும் சமூக அங்கீகாரமற்ற அநாகரிக உறவு கொள்வதற்கும், கொண்டாட்டம் என்ற பெயரில் கலாச்சார/ பண்பாட்டுச் சீரழிவிற்கும் வழிவகைச் செய்வதையும்தான் எதிர்க்கிறார்கள்.

("கலாச்சாரக/பண்பாட்டுக் காவலர்கள்" என்ற போர்வையில் ஆர்ப்பரிக்கும் வன்முறைக் கும்பலின் நோக்கம், இக்கொண்டாட்டங்களுக்கு கிறிஸ்தவ பின்னனி இருப்பதாலும், கலர்ப் பொடித்தூவி மகிழும் "ஹோலி,ரக்ஷ்சா பந்தன்" கலாச்சாரத்திற்கு! எதிரானது என்ற சுய நலமத்தாலும்தான். அதைப் பற்றிய விவாதம் இங்கு அவசியமில்லை)

இந்தியாவில் கடந்த 10-20 வருடங்கள் வரை அறிந்திராத "காதலர் தினம்" எங்கிருந்து வந்தது? இதற்கு முன் இந்தியர்கள் காதலிக்காமலா இருந்தார்கள்? இரு உள்ளங்களுக்குள் இருக்க வேண்டிய காதலை ஒயின் ஷாப்பிலும், கேளிக்கை நடன விடுதியிலும், கடற்கரையிலும் கடை விரித்துக் கொண்டாடும் கலாச்சாரம், இறக்குமதி செய்யப்பட்ட அந்நிய ஒழுக்கச் சீர்கேட்டின் பலனல்லவா?

ஒரு இணையதமிழ் குழுமத்தில் "காதலர் தினம் தமிழருக்குத் தேவையா?"
என்ற விவாதத்தில் அருமையான கருத்துப் பரிமாற்றத்தைக் காண நேர்ந்தது.

"கல்வி, செல்வம், வீரம், விழுமியம், காதல் என்று தன் வாழ்வை வளப்படுத்திய தமிழன் அவற்றை மதிக்கவும் வளர்க்கவும் கற்றுக்கொடுக்க மறுக்கவில்லை..மறக்கவில்லை...!

ஆனால் நாம் எப்போதுமே காதல் என்ற ஒன்றுக்காக விழா எடுத்து காலத்தை வீணடிக்கவில்லை...செலவை ஊக்குவிக்கவில்லை..காதல் பண்டமல்ல பரிமாறி மகிழ என்று உணர்த்தவும் இல்லை..அதைக் கேளிக்கையாக்கி காட்டவும் இல்லை...மனிதனுக்குள் உருவாகும் ஒரு உன்னத உணர்வாகவே காட்டி வந்தோம் தொன்றுதொட்டு...! இதற்கு தமிழ் இலக்கியங்கள் சாட்சி"

காதல் அது ஒருவன் ஒருத்திக்குள் உருவாகும் உணர்வுநிலைப் பரிமாற்றத்தின் விளைவு...அதை அவளும் அவனும் தான் சரிவர உணர முடியும்...! அதை ஏன் மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த வேண்டும்...அதற்கு ஏன் ஒரு விழா...திருநாள்...இதைக் கொண்டாடாமல் விட்டால் காதல் என்ன மனிதனுக்குள் உயிரிக்குள் உதயமாகாமலா விட்டிடும்...???!

காதல் புனிதம் ஆவதும் அசிங்கமாவதும் காதலர் தினம் கொண்டாடுவதால் அல்ல...தினம் தினம் உங்கள் உங்கள் மனம் எடுக்கும் நிலை சார்ந்ததே அது...! பூக்கள் கொடுப்பதும் பரிசு கொடுப்பதும் பொது இடத்தில் முத்தம் கொடுப்பதும் கட்டிப்பிடிப்பதும் காதலைப் புனிதமாக்காது...அது காதலும் அல்ல..!

காதல் அகத்தோடு இப்பது உடல் கூட அதை வெளிக்காட்டாத போது நீங்க ஏன் அதை கேளிக்கையாக்குகிறீர்கள்...! இன்று பலரும் காதலர் தினம் கொண்டாட என்று ஒரு சோடி தேடும் நிலைக்கு வந்துள்ளனர்... இதுதான் காதலோ...???!

மேற்குலக வியாபாரிகளுக்கு ஜீவிய கால விளம்பரம் ஓட்ட கிடைத்த ஒன்றுதான் காதல்... தவறாமல் பிடித்துக்கொண்டுள்ளார்கள்...உலகம் பூராவும் நல்ல காதல் வியாபாரம் நடக்கிறது...! காதல் இன்று வியாபாரமாகி இருப்பது இத்தினத்தால் மேலும் விளம்பரப்படுத்தப்படுகிறது...! இது காதலைப் புனிதப்படுத்தவில்லை களங்கப்படுத்துகிறது...!

ஆண் - பெண் காதலுக்கும் பாசம் கலந்த அப்பா அம்மா சகோதரங்கள் மீதான காதலுக்கும் இடையே உணர்வு ரீதியான தெளிவான வேறுபாடுண்டு...! காதலை வெளிப்படுத்த காதல் கொண்டவங்களுக்கு நாள் நட்சத்திரம் அவசியமில்லை...! காதல் ஒரு நாளுக்குரியதுமல்ல...அது வாழ்வின் எல்லை வரை தொடர வேண்டியது...! ஏன் புறத்தே வேசங்களால் வெளிக்காட்டாமலே காதலை அன்பால் காட்டிக் கொண்டே இருக்கலாம். அதுதான்... யதார்த்தமானது... உண்மையானது...!

காதலுக்கு... அன்பைப் பொழிய ஏன் ஒயின் குடிக்கவேணும்...இல்ல பியர் அடிக்க வேணும்...இல்ல...இப்படிப் பலதும் பண்ண வேணும்... காதல் மகிழ்ச்சி என்பது அன்பைப் பரிமாறுவதால் உளத்தால் எழுவது...அதற்கேன் வெளிவேசம்....தேவையில்லாத வேடங்கள்...!

சிலர் இதே தினத்தை ஏதோ காதலுக்கு சுதந்திரம் தரும் தினமாகக் கருதி...பச்சை நிற ஆடைகள் அணிந்து கட்டாயக் காதல் வரவழைக்கினமாம்...இன்னும் சிலர் செய்ய வேண்டிய சேட்டைகளை செய்து போட்டு இது லவேர்ஸ் டே எதுக்காடி இருக்கு என்றாங்க...இதுதான் காதலர் தினம் தரும் விளைவுகளோ...இதுதான் புனித நாளின் பணிகளோ...!

இப்போ தியாகிகள் நாளை கூத்தும் கும்மாளமுமா அடிக்கச் சொன்னா அதை அங்கீகரிப்பீங்களோ... அதேபோற்தான் காதலுக்காய் தியாகம் பண்ணினவன் காதலுக்கு மரியாசை செய்யச் சொன்ன நாள் தான் இது...ஆனா...அதுவா நடக்குது...இதுதான் மரியாதை செய்யும் நடைமுறைகளோ...??!
மனித உணர்வுகளில் காதல் இன்றியமையாதது. உயிர்களுக்குள் காதல் பரிமாற்றம் அவசியம். ஆனால் திருமணம் என்ற சமூக அங்கீகாரத்துடன் என்பதே இஸ்லாமிய/இந்திய/தமிழர் பண்பாடு.

பிப்ரவரி-14 ஆம் தேதியை உலகம் முழுவதும் காதலர் தினமாக அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் பிப்ரவரி முதல் நாளிலிருந்தே அதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் படுகின்றன. புத்தாண்டையாவது நள்ளிரவில் கொண்டாடுவதில் கொஞ்சம் நியாயம் உண்டு. காதலர் தினக் கொண்டாட்டங்களும் இரவில் நடப்பது என்பது ஏன்? என்று சிந்தித்தால் இதன் உள்நோக்கம் புலப்படும்.

ஆணும் பெண்ணும் தனிமையில் இருந்தால் எப்படி அன்பை வெளிப் படுத்திக் கொள்வார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. MTV வின் வருகைக்குப் பிறகு காதலர் தினக் கொண்டாட்டங்கள் தரம் தாழ்ந்தன. மது அருந்திவிட்டு ஆணும் பெண்ணும் கும்பலாக நெருக்கியடித்து உரசிக் கொண்டும், ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டும் ஆடி மகிழ்வதுதான் காதலுக்கு மரியாதையா?

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு வக்காளத்து வாங்குபவர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி பொது இடங்களில் அநாகரிகமாக ஒழுக்கக்கேடாக நடப்பதை அனுமதிப்பதில்லை. காதலுக்கு மரியாதை என்ற பெயரில் மறைந்திருக்கும் தங்களுன் உள்மன வக்கிரத்தைக் காட்டவே எண்ணமே காதலர் தினக் கொண்டாட்டங்கள் என்றால் மிகையில்லை.

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக் கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (குர்ஆன் 17:32)

கடந்த வருடம் எழுதியது. மீள்பதிவு செய்யப்படுகிறது?"

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker