நிர்வாணப்படுத்தப்பட்ட போர் தர்மங்கள் #கண்டனப் பதிவு#
இலங்கை ராணுவத்திற்குப் பாரிய சேதங்களை விளைவித்த விடுதலைப் புலிகளின் அனுராதபுரம் விமானத்தாக்குதலைத் தொடர்ந்து கடற்புலிகள் பிரிவு ஈழப் போராளிகளின் கொல்லப்பட்ட உடலை நிர்வானமாகக் காட்டிய இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தைகப் பலரும் கண்டித்துள்ளனர். எமது கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.
"ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளல்லர்" என்று ஐக்கிய நாடுகள் சபையில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் மீறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஆப்கான், இராக் மற்றும் பலஸ்தீனப் போராளிகளை "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற மத அடைமொழியுடனும்,இலங்கையில் போராடிவரும் விடுதலைப் புலிகளை ஈழப்போராளிகள் என்று எவ்வித அடைமொழியின்றியும் சொல்வர்.

இலங்கை ராணுவத்தின் இச்செயலைக் கண்டிக்கும் எவரும், புத்தர்களைக் கொண்ட இலங்கை ராணுவத்தினரின் மனிதாபிமானமற்ற இச்செயலை தப்பித் தவறியும் "புத்தமதத் தீவிரவாதம்" என்று குறிப்பிடாதது உலகமகா ஊடகக் கயமைத்தனம்!
"வரம்பு மீறுபவர்களுடன் அதே அளவு வரம்பு மீற அனுமதிக்கும் இஸ்லாம், போர்க்களத்தில் அப்பவிகள்,பெண்கள்,சிறார்கள் மதகுருமார்களைத் தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டு கடைபிடிக்கப்பட்ட இப்போர்நெறிமுறையை நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபைக் கோமான்கள் கடந்த 20-30 வருடங்களுக்கு முன்னர்தான் இவற்றை நியாயம் என்று ஒப்புக் கொண்டனர்!முஸ்லிம்களிடமிருந்து இதுபோன்ற நெறிகளையும் நாகரிகத்தையும் காப்பி அடித்த இவர்கள்தான் இன்னொரு பக்கம் இஸ்லாத்தை பழமைவாதம் என்று கூக்குரலிடுகிறார்கள்!
போர்க்களத்தில் எதிர்த்துநிற்கும் போராளிகளிடம் மட்டுமின்றி அவர்களின் தேசத்தவர்களிடமும் "War against Terrorism" என்றபெயரில் வரம்பு மீறும் நாகரிக உலகின் நவீனபோர் அதர்மத்தை வகுத்ததோடு ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்புக் கொண்ட ஜெனீபா பிரகரணத்தையும் மீறிச் செயல்படுத்தி வருவதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொஞ்சமும் குறைந்தவர்களல்லர் என்பதை ஈராக், ஆப்கன், பாலஸ்தீன நிகழ்கால அவலங்கள் உணர்த்துகின்றன.
அப்பாவிகளையும் கர்ப்பினிப் பெண்களையும், குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் கொன்றொழித்த குஜராத் சங்பரிவார தீவிரவாதிகளையும் இத்தருணத்தில் கண்டிக்க வேண்டும். மேலும் எதிரி நாட்டு அமைச்சர்கள் தூதுவர்களையும் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடித்து குவாண்டனாமோ, அபுகிரைப் கொடுஞ்சிறையிலடைத்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் உலகமகாத் தீவிரவாதம் செய்து வரும் அமெரிக்காவையும் கண்டிக்காமல் இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தை மட்டும் கண்டிப்பது பாரபட்சம்!
இன்னொரு பக்கம், விடுதலைப்புலிகளும் வரம்பு மீறாதவர்கள் அல்ல என்று சொல்வதற்கில்லை. இலங்கை ராணுவத்திற்கு உதவினார்கள் என்ற குற்றம் சுமத்தி காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற அண்டைவீட்டு தமிழின (அ)நியாயவான்கள்தான் என்பதையும் இத்தருணத்தில் பதிவு செய்கிறோம்.
இருந்தாலும், மனிதன் அவன் எதிரியே ஆனாலும் அவன் உயிருடன் இருக்கும்போதோ அல்லது மரணித்துவிட்ட நிலையிலோ கேவலப் படுத்தப்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இலங்கை இராணுவத்தின் இச்செயலை மனிதம் விரும்பும் எவரும் கண்டிக்கவே செய்வர்; எமது கண்டனத்தை மீண்டுமொருமுறை பதிவு செய்கிறேன்.

Labels: இலங்கை