காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம்
>> Sunday, October 04, 2009

உன்னைப்போல் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முஸ்லிம்களைக் குறித்து நச்சுக் கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், யாரை யார் தீவிரவாதி என்று சொல்வது என்பதற்கு விவஸ்தை வேண்டாமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.
தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுமனிதன் (காமன்மேன்),சட்டத்தை கையிலெடுக்கும் செயலை நியாயப்படுத்தும் இப்படத்தில் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்-அவர்களால் பாதிக்கப்படும் அனைவரும் இந்து காமன்மேன் என்ற நச்சுக்கருத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை அநியாயத்துக்கு விமர்சனம் எழுதி, தேவையற்ற பில்டப் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக்கி விட்டார்கள்!
கமல் விடுவிக்கக்கோரும் நால்வரும் தீவிரவாதிகளாம்! அவர்களில் மூவர் காஃபீர்களைக் கொல்வதற்காக நேர்ந்து விடப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள். ஒரேயொருவர் அப்பாவி தீவிரவாதி! ஆம்! தீவிரவாதிகளென்று தெரியாமல் தெரியாத்தனமாக RDX சப்ளை செய்ததால் அப்பாவி தீவிரவாதி! சினிமாக்களில் தீவிரவாதிகளைத் தட்டிக்கேட்பவர்கள் எல்லோருமே ஓர் அம்பியாகவோ அல்லது முஸ்லிமல்லாத காமன் மேன்களாக இருப்பது நெருடுகிறது. ஒருசமயம் முஸ்லிம்களில் காமன் மேன் (COMMON MAN) இருக்கக்கூடாது என்று எங்காவது சட்டம் உள்ளதோ என்னவோ?!
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தைரியமாகக் கண்டித்தும், இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட மருதநாயகம் என்ற யூசுப்கான் குறித்து படமெடுக்கப்போவதாக பிலிம்காட்டிய கமல், இடையில் நாத்திகராகி, ரங்கராஜ நம்பியாக தசாதவதாரமெடுத்து ஐம்பதாண்டுகள் திரையுலகில் கொட்டைபோட்டு சேரவேண்டிய இடத்திற்கு சரியாகச் வந்துள்ளார் எனுமளவுக்கு "உன்னைப்போல் ஒருவனில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான காவிவசனங்களை மானாவரியாக தூவியுள்ளார்.
தீவிரவாதிகளென்றால் பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதாவது ஒரு 'கான்' ஆக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபைமீறி, இதில் சொல்லப்படும் தீவிரவாதிகளெல்லாம் இந்திய முஸ்லிம்கள். படம் முக்கால்வாசி எடுத்த பிறகே காமன்மேனின் கோபத்திற்கான காரணம் சொல்லப் படவில்லை என்று உறுத்தியதோ என்னவோ பெஸ்ட் பேக்கரி படுகொலை, கற்பினிப் பெண்ணைக் கருவறுத்தது என குஜராத் பயங்கரவாதத்தையும் சேர்த்து தன்னை நடுநிலையாளராக நடிக்க முயற்சித்துள்ளார் என்றாலும் பரவலான நச்சு வசனங்களால் சாயம் வெளுத்துவிட்டது!
காமன்மேனுடன் போனில் கெஞ்சும் போலீஸ் கமிஷனர், நம்நாட்டிலுள்ள எத்தனையோ தீவிரவாதிகளை எப்படி தண்டிப்பாய்? என்று கேட்கும்போது சீட்டுக் குலுக்கிப்போட்டதில் தற்போதைக்கு இந்த நால்வரின் பெயர்களே வந்தன என்று சொல்கிறார். அத்வானி, நரேந்திரமோடி, பால்தாக்கரே, பிரவீன் தொக்காடியா முதல் பிரஞ்யாசிங் வரை நீளும் பட்டியலில் சீட்டுக்குலுக்கிப் போடாமலேயே தேர்வு செய்திருக்கலாமே என்றும் கேட்கத் தோன்றுகிறது.
குஜராத்தில் கருவருத்துக் கொல்லப்பபட்ட நான்கு மாதக் கற்பினியைக் காப்பதற்கு நாட்டில் எத்தனையோ கிருஷ்ணன்கள் இருந்தும் ஒரேயொரு கிருஷ்ணன்கூட முன்வரவில்லையே என்று நேர்மையாக ஆதங்கப்படும் காமன்மேன் கமல், தீவிரவாதிகளை முஸ்லிம்களாகவே காட்டியிருப்பது யாருடைய நிர்ப்பந்தமோ தெரியவில்லை!
சூத்திரன் கொலை செய்தால் கொன்றவனுக்கு மரணதண்டனை! பார்ப்பனன் கொலைசெய்தால் குடுமிக்கு மட்டுமே மரணதண்டனை என்று ஹேராமில் காட்டிய கமலுக்கு கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
"..................உயிருக்கு உயிர்,கண்ணுக்குக் கண்,மூக்குக்கு மூக்கு,காதுக்கு காது, பல்லுக்குப் பல்; காயங்களுக்குச் (சமமான) காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்............................................."(குர்ஆன் 005:045)
10 comments:
இந்த சினிமா கழிசடைகளைப்பற்றி, விமர்சனம் செய்வதால் மனித குலத்திற்கு என்ன இலாபம்.
இந்த கழிசடைகளைப்பற்றி, இலங்கை மக்கள் 5 சதத்திற்குக்கூட மதிப்பதில்லை.
இந்த கழிசடைச்சுருள், சிறிது நாளைக்குப்பின், பெட்டியில் சுருண்டு விடும். அவ்வளவுதான்!
நல்ல சொன்னிங்க, அவன் அவன் அவன்ட பட்டுல இஸ்லாத்தை விமர்சிக்கிறான்...
இது போன்று இன்னும் ஒரு எழுத்தாளர், ஏகத்துவத்தை கொச்சை படுத்துகிறார் அவருக்கு உங்கள் பதில் என்ன???
அவரின் இனைய முகவரி http://badrkalam.blogspot.com/2009/09/blog-post_15.html
இவரின் கருத்துக்களை நன்கு வாசித்து அவருக்கு சரியான வழியை காட்டுங்க,
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர் அவர்களுக்கு...தங்களது...பதிவையும்,வளைப்பூவின் நோக்கத்தையும், கண்டு,மனநெகிழ்ச்சியம்,பூரிப்பும் அடைந்தேன்...இன்ஷாஅல்லாஹ்,அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்க போதுமானவன்....
நானும் இதே நோக்கத்தில் ஒரு வலைபூ ஆரம்பித்துள்ளேன்..இயன்ற அளவு,சிலரது கேள்விகளுக்கு பதிலும் அளித்து வருகிறேன்.....
தாங்கள்,அவ்வப்போது,எனது வலைபூவையும் பார்வையிட்டு,திருத்தம் தந்தால்,மேலும் சிறப்பாக தொடர,எனக்கு உதவுங்கள்....தங்களது ஆலோசனைகளும் எனக்கு தேவை...இன்ஷா அல்லாஹ் அவ்வப்போது,,நான்,கேட்க்கும் போது பதில் தந்து உதவுங்கள்....
இது போன்ற தளங்கள் இல்லையே என்ற ஆதங்கத்தில் தான்,நான் துவங்கினேன்.ஆனால் எனக்கு முன்னமே,எனது சகோதரர்கள் எனக்கு முன்னோடியாக இருப்பது,எனக்கு,நல்ல நம்பிக்கையை தருகிறது....
இன்ஷாஅல்லாஹ்,அல்லாஹ்,நமது,அமல்களை ஏற்று நற்கூலியை இம்மையிலும்,மறுமையிலும்,விசாலமாக்கிதர,வ்ல்ல அல்லஹ்விடம் இந்த அடிமைக்கும் துஆ செயுங்கள்....
வஸ்ஸலாம்....
வ அலைக்கும் ஸலாம் சகோ.ரஜீன்.
இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக்கிடைக்கும் போது என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.
உலகம் முழுவதும் 80 சதவீத திவரவாதிகள் முஸ்லிம்களே
முஸ்லிம்களில் 30முதல் 40 சதவீத பேர் தவறான வழியில் பணம் சம்பாதிபவர்கள்தான்
சிவா,
தீவிரவாதம் பெயரைச் சொல்லி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் 95% முஸ்லிம்கள். அறுபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும் ஒருவேளை உணவின்றி வறுமைக்கோட்டுக்குக்கீழ் பசியுடன் வாழ்பவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்தான் என்பதையும் ஒப்புக் கொள்வீர்கள்தானே?
சரிவிடுங்க.இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொல்லாடல் கடந்த 10-15 வருடங்களாகவேகேள்விப்படுகிறோம். அதற்கு முன்பு தீவிரவாதிகள் யார்?
//தீவிரவாதம் பெயரைச் சொல்லி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் 95% முஸ்லிம்கள். அறுபதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும் ஒருவேளை உணவின்றி வறுமைக்கோட்டுக்குக்கீழ் பசியுடன் வாழ்பவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்தான் என்பதையும் ஒப்புக் கொள்வீர்கள்தானே?//
ஆம்...வினை விதைத்தவனும் வினை அறுப்பான்
காமன்மேன் படத்தில் என்ன செய்தார்? என்பதை அப்புறம் விசாரிக்கலாம். முதல் உங்களை மாதிரி ஆட்களுக்கு ஏதாச்சும் பண்ணனும் சாமி. கொல்லப்பட்டது இந்து பெண்ணாகவும் கொன்றது முஸ்லிமாகவும் காட்டினால் முஸ்லீமை கேவலமாக காட்டுராங்கன்னு அழுவீங்க. அதுவே கொல்லப்பட்டது முஸ்லீமாகவும் கொன்றது இந்துவாகவும் இருந்தால் இந்துக்களை கேவலப்படுத்துறாங்கன்னு சொல்லி அழுவீங்க. உங்களை மாதிரி கபடவேடதாரிங்களை ஏதாச்சும் பண்ணனும்.அர்த்தமற்றதுக்கு வரிஞ்சு கட்டிக்கொண்டு விவாதம் பண்ணும் உங்களால தான் நாட்டில இனக்கலவரமும், மதக்கலவரமும் வருது சாமியோவ்.
kadandha 10 to 15 varudamaga than theeviravadha seyalhal athiham atharku karanam yenna sindhiyungal?
babari masjid problem than reason yenbadhu yen karuthu!
Post a Comment